ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்திய கார்ப்பரேட் உலகின் கிட்டத்தட்ட ஒரு சூப்பர்ஸ்டார் போன்ற நிறுவனமாகும், பெட்ரோ கெமிக்கல்களில் இருந்து டெலிகம்யூனிகேஷன்ஸ் வரை பல தொழில்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஈடுபட்டு வருகிறது.
2016 ஆம் ஆண்டு செப்டம்பரில் டெலிகாம் சேவை பிரிவான ஜியோவை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தொடங்கியது. இதன் மூலம் இந்திய டெலிகாம் துறையில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்தது. குறுகிய ஆண்டுகளுக்குள் தேசிய அளவில் ஜியோ மிகப் பெரிய டெலிகாம் கம்பெனியாக உருவெடுத்தது.

செப்டம்பர் 2016 ஆம் ஆண்டு ஜியோ பங்கு விலை ரூ.539.36 ஆக இருந்தது. அப்போது ரூ.10,000 முதலீடு செய்திருந்தால் சுமார் 18 பங்குகளை வாங்கியிருக்கலாம். இப்போது அந்த பங்கின் விலை ரூ.2520 ஆக உள்ளது. எனவே உங்களிடம் இருக்கும் 18 பங்குகளின் விலை சுமார் ரூ.46,719.68 ஆக இருக்கும்.
கூடுதலாக உங்களுக்கு ஜியோ பைனான்சியல் சர்வீஸஸின் 18 பங்குகளும் கிடைத்திருக்கும். இப்போது தற்போதைய சந்தை விலை ஒரு பங்கு ரூ.250 என உள்ளது. 18 பங்குகளுக்கு ரூ.4400 கிடைத்திருக்கும்.
பரவலான 4ஜி நெட்வொர்க் கவரேஜ், சலுகை கட்டணம் ஆகியவற்றுடன் டெலிகாம் துறையில் ஜியோ காலடி வைத்தபோது பெரும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியது. இதனால் ரிலையன்ஸ் நிறுவனங்களின் பல பங்குகளின் விலையும் உயர்ந்தன. குறுகிய காலத்துக்குள்ளேயே ஜியோ மிகப்பெரிய டெலிகாம் ஆப்பரேட்டராக மாறிவிட்டது.
இப்போது ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் தேசிய பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளது. இது பைனான்சியல் சர்வீஸ் துறையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் ரூ.265இல் மும்பை பங்குச்சந்தையிலும் ரூ.262 தேசிய பங்குச் சந்தையிலும் தொடங்கியது. ஆனால் 5 சதவீதம் மதிப்பு குறைந்து ரூ.248.9க்கு குறைந்தது. இன்றும் 5 சதவீத சரிவில் தான் உள்ளது.
ரிலையன்ஸ் பைனான்சியல் சர்வீஸஸ் பங்கு பட்டியலிடப்பட்டபோது ரூ.1.68 லட்சம் கோடி வரப்பெற்றது. இந்தியாவில் 33ஆவது விலை மதிப்புள்ள நிறுவனம் என்றும் என்பிஎப்சியில் மூன்றாவது இடத்திலும் இருந்தது. இது பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்சர்வுக்குப் பின்னால் ஆகும்.
More From GoodReturns

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications