டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு ஒரு நாளே இருக்கும் நிலையில். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பாரதிய ஜனதாவிற்கு ஆதரவாகவே வெளிவந்துள்ளன.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் படி தேர்தல் முடிவுகள் அமையும் பட்சத்தில் இந்திய பங்குச் சந்தை பெருமளவு வளர்ச்சி காணும் என மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைவரும் துணை நிறுவனருமான ராம்தியோ அக்ரவால் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பாஜகவே மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்கும் என கூறியுள்ளன. ”பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக வெளிவந்துள்ள எண்கள் ஆச்சரியம் அளிக்கவில்லை இது எதிர்பார்த்த ஒன்றுதான், எனக்குத் தெரிந்து பாரதிய ஜனதா கட்சி 400 இடங்கள் வரை கூட கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என மணி கண்ட்ரோல் தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் ராம்தியோ அக்ரவால் சுட்டிக் காட்டியுள்ளார் .
கருத்துக்கணிப்புகளில் வெளியாகியுள்ளது போல பாரத ஜனதா கட்சியை பெரும்பான்மை இடங்களை பெரும் பட்சத்தில் இந்திய பங்குச்சந்தையின் மதிப்பு பல மடங்காக உயரம் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தற்போது 5 டிரில்லியன் டாலர்கள் என இருக்கும் இந்திய பங்குச் சந்தையின் மதிப்பானது அடுத்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் நிச்சயம் 10 டிரில்லியன் டாலர்களை எட்டும் என அவர் கணித்துள்ளார்.
தற்போது சர்வதேச அளவில் ஜியோ பொலிடிகல் சூழல்களில் ஏற்பட்டுள்ள மாறுபாடுகள் மற்றும் 2024 ஆம் நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் வெளிவந்த வலுவான ஜிடிபி முடிவுகள் உள்ளிட்டவற்றையும் பாரதிய ஜனதாவின் வெற்றியும் கணக்கில் வைத்து பார்க்கும் போது இந்திய பங்குச்சந்தை நிச்சயமாக 10 ட்ரில்லியன் டாலர் என்ற மதிப்பை எட்டும் என கூறியுள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது வெளிநாட்டு நிறுவனங்கள் என்ன மாதிரியான ஒரு உத்தியை கையாளுகின்றன என்பதை பார்க்க வேண்டியது அவசியம். ஒருவேளை வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் இங்கே முதலீடு செய்ய தொடங்கினாலும் அல்லது பங்குகளை வாங்க தொடங்கினாலும் நிச்சயம் இந்திய பங்குச் சந்தையின் மதிப்பு பலநூறு மடங்கு உயரம் என கூறியுள்ளார்.
வெளிநாட்டு நிறுவனங்கள் மூன்று வகையான உத்திகளை கையிலெடுக்க வாய்ப்புள்ளது, ஒன்று வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களிடம் உள்ள பங்குகளை தொடர்ந்து விற்பது அல்லது விற்பதை நிறுத்துவது அல்லது புதிதாக பங்குகளை வாங்குவது.
இந்த மூன்றில், மூன்றாவது வாய்ப்பான புதிதாக பங்குகளை வாங்கும் உத்தியை அவர்கள் தேர்வு செய்தார்கள் என்றால் ஏற்கனவே உள்நாட்டு நிறுவனங்களும் மிக தீவிரமாக பங்குகளில் முதலீடு செய்து வருகின்றன எனவே இது இந்திய பங்குச் சந்தையின் மதிப்பை உயர்த்தும் எனக் கூறியுள்ளார்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications