நாடாளுமன்றத்தில் நாளை காலை சாியாக 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பொதுவாக பட்ஜெட் அறிவிப்புகள் பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், முதலீட்டாளர்கள் எந்த பங்குகளை வாங்கலாம் என்று கடுமையாக யோசனை செய்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், பட்ஜெட்டுக்கு முன்னதாக எந்த பங்குகளில் முதலீடு செய்யலாம் என்பது குறித்து நிபுணர்கள் தங்களது பரிந்துரை தெரிவித்துள்ளனர்.
ஈக்வினோமிக்ஸ் ரிசர்ச்சின் நிறுவனர் ஜி சொக்கலிங்கம் கூறுகையில், முதலீட்டுக்கான வாய்ப்புகளை வழங்கும் சிறிய மற்றும் நடுத்தர மூலதன பங்குகளில் கவனம் செலுத்தலாம். பட்ஜெட்டுக்கு பிறகு பங்கு சந்தை சரிந்தால், முதலீட்டாளர்கள் தரமான சிறிய மற்றும் நடுத்தர மூலதன பங்குகளை வாங்குவதை கருத்தில் கொள்ள வேண்டும்.

குறிப்பாக உள்நாட்டு சந்தை தேவையை பூர்த்தி செய்யும் பங்குகளை வாங்க வேண்டும். சந்தை ஏற்றம் கண்டால், உங்கள் போர்ட்போலியாவில் 70 சதவீதம் சிறிய மற்றும் நடுத்தர பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். உங்கள் மூலதனத்தில் 30 சதவீதத்தை மட்டுமே பெரிய பங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
ஜியோஜித் நிதி சேவைகளின் தலைமை முதலீட்டு மூலோபாய நிபுணர் விகே விஜயகுமார் கூறுகையில், பட்ஜெட்டின் தாக்க் குறுகிய காலமாக இருக்கும். பொதுவாக சில நாட்கள் மட்டுமே அது நீடிக்கும். தனிநபர் வருமான வரி குறைப்பு போன்ற வளர்ச்சி தூண்டும் நடவடிக்கைகளை பட்ஜெட்டில் அறிமுகம் செய்தால், ஒரு ஏற்றம் வாய்ப்புள்ளது.
இருப்பினும், மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் ஆகியவையே நடுத்தர, நீண்ட கால சந்தை போக்கில் ஆதிக்கம் செலுத்தும். தற்போதைய சூழலில், தரமான பெரிய நிதி பங்குகள் முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான துறையாகவே உள்ளன என்று தெரிவித்தார்.
2025 பட்ஜெட், மூலதன செலவினங்கள், வீட்டு வருமான உயர்வு, மறைமுக வரி எளிமைப்படுத்துதல் மற்றும் நிதி விவேகம் ஆகியவற்றில் மத்திய பட்ஜெட் கவனம் செலுத்தும் என்று மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் எதிர்பார்க்கிறது. மேலும், பட்ஜெட்டுக்கு முன்னதாக சில பங்குகளை வாங்குவது ஆதாயம் அளிப்பதாக இருக்கும் என்றும் மதிப்பிட்டுள்ளது.
அந்த வகையில், பட்ஜெட்டுக்கு முன்னதாக, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, எல் அண்ட் டி,எச்சிஎல் டெக்னாலஜிஸ், மகிந்திரா அண்ட் மகிந்திரா, டிரெண்ட், பார்தி ஏர்டெல், டைட்டன் கம்பெனி, சன் பார்மா மற்றும் டிக்சான் டெக் போன்ற பெரிய பங்குகளையும், இந்தியன் ஹொட்டல்ஸ், கம்மின்ஸ் இந்தியா, பிஎஸ்இ, கோத்ரெஜ் பிராபர்டீஸ், கோஃபோர்ஜ், மெட்ரோ பிராண்ட்ஸ், ஐபிசிஏ லேப்ஸ்,ஏஞ்சல் ஒன்,வினாட்டி ஆர்கானிக்ஸ் மற்றும் ஜேஎஸ்டபுள்யூ இன்ஃப்ராஸ்ட்ரக்சர் போன்ற மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளில் முதலீடு செய்யலாம் என அந்நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?



Click it and Unblock the Notifications