சரியான திட்டங்களில், சரியான நேரத்தில் செய்யக்கூடிய முதலீடுகள் நமக்கு எதிர்பாராத லாபத்தை அள்ளித் தரும். அந்த வகையில் அண்மைக்காலமாக மியூச்சுவல் ஃபண்டுகள் அதாவது பரஸ்பர நிதி திட்டங்கள் மீது முதலீட்டாளர்களின் கவனம் குவிந்திருக்கிறது.
பரஸ்பர நிதி திட்டங்களை பொறுத்தவரை நாம் எவ்வளவு அதிக காலத்திற்கு முதலீடு செய்கிறோமோ அவ்வளவு அதிகம் நமக்கு லாபம் பெற்று தரக்கூடியவை. நாம் காணப் போகும் இந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டம் கடந்த 23 ஆண்டுகளில் 30 மடங்கு லாபத்தை அள்ளித் தந்துள்ளது.

சுந்தரம் மல்டி கேப் ஃபண்ட் (Sundaram Multi Cap Fund) கடந்த 2000 ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் முதலீட்டாளர்களுக்கு கணிசமான லாபத்தை பெற்று தந்துள்ளது. சுந்தரம் மல்டி கேப் ஃபண்ட், பங்குச்சந்தையில் பல்வேறு துறைகளிலும் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்கிறது.
கிட்டத்தட்ட 75% முதலீட்டினை ஈக்விட்டி பங்குகளில் செய்து வருகிறது. கடந்த ஓராண்டு காலத்தில் இது 39.6% லாபத்தை தந்துள்ளது. அதாவது ஓராண்டுக்கு முன்னர் இதில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு தற்போது ரூ.1.39 லட்சம் என உயர்ந்திருக்கும்.
அதுவே மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு ரூ.1.7 லட்சம் என உயர்ந்திருக்கும். ஐந்தாண்டுகளுக்கு முன்பு முதலீடு செய்தவர்களுக்கு 2.1 லட்சம் ரூபாயாகவும், 10 ஆண்டுகளுக்கு முன்னர் முதலீடு செய்தவர்களுக்கு அவர்களது ரூ.1 லட்சம், ரூ.4.52 லட்சம் என்று அளவையும் வெட்டி இருக்கும்.
2000 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது தொடக்கத்திலேயே இதில் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இந்த 23 ஆண்டுகள் காத்திருந்தவர்களுக்கு தற்போது அதன் மதிப்பு 30 மடங்கு உயர்ந்து ரூ.30 லட்சம் என்ற லாபத்தை தந்திருக்கும். அதாவது ஆண்டுக்கு 15.6 சதவீத வளர்ச்சியை இது கண்டுள்ளது. மொத்தமாக இந்த பரஸ்பர நிதி திட்டத்தின் மதிப்பு 2374 கோடி ரூபாய் ஆகும்.
இந்த ஃபண்டினை சுதிர் கேடியா மற்றும் ரத்தீஷ் பி வாரியர் ஆகிய இருவரும் மேலாண்மை செய்கின்றனர். இந்த நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ,ஐசிஐசிஐ பேங்க் ,ஹெச்டிஎஃப்சி பேங்க் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றில் பெரும்பான்மையாக முதலீடு செய்கிறது. அதே போல நிதித்துறை, கன்சியூமர் டியூரபில்ஸ் ஆகியவற்றிலும் இது முதலீடு செய்கிறது.
துறைவாரியாக பார்க்கும்போது இந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டமானது வங்கிகளில் 14.7%, நிதித்துறைகளில் 9.4%, கன்சியூமர் டியூரபில்ஸில் 8.5%, தொழில்துறை தயாரிப்புகளில் 7.8%, வாகன உதிரி பாகங்களில் 6.3 % என முதலீடு செய்கிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications