Buy or sell stocks: கடந்த வாரத்தில் இந்திய பங்கு சந்தையானது ஏற்றத்தில் முடிவடைந்த நிலையில், இந்த வாரமும் ஏற்றம் தொடருமா? சந்தையானது எப்படியிருக்கும்? என்ற பலத்த எதுர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
நிஃப்டி கடந்த வாரம் 7 வார உச்சமான 17,842 என்ற லெவலை எட்டியுள்ளது. இதே பேங்க் நிஃப்டி 11 வார உச்சமான 42,196 என்ற லெவலையும் எட்டியுள்ளது. கடந்த வாரத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் புதியதாக ஈக்விட்டிகளில் முதலீடுகளை அதிகரித்துள்ளது.

நிஃப்டி மட்டும் 1.30% ஆக ஏற்றம் கண்டு, 17,828 ஆக முடிவடைந்துள்ளது. இதே பேங்க் நிஃப்டி 2.66% ஆகவும் ஏற்றம் கண்டு, 42,132 ஆக முடிவடைந்துள்ளது.
டெக்னிக்கலாக நிஃப்டி மற்றும் பேங்க் நிஃப்டி என இரண்டும் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வால்யூம் விகிதம் என்பது கணிசமாக அதிகரித்துள்ள சூழலில், இந்த வாரமும் ஏற்றம் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிஃப்டியின் முக்கிய சப்போர்ட் லெவல் ஆனது 17,600 என்ற லெவலுக்கும், அதனை தொடர்ந்து 17,400 என்ற லெவலுக்கும் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெசிஸ்டன்ஸ் லெவல் என்பது 18,000 ஆகவும், அடுத்ததாக 18,250 என்ற லெவலையும் எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே பேங்க் நிஃப்டி உடனடியாக 41,400 என்ற லெவலையும், 40,650 என்ற லெவலையும் எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் ஆக 42,000 என்ற லெவலையும், அடுத்ததாக 43,500 என்ற லெவலையும் எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் சந்தையில் உச்ச லெவலில் புராபிட் புக்கிங்கும் இருக்கலாம். இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். நிஃப்டி மற்றும் பேங்க் நிஃப்டி என இரண்டும் உச்சம் தொடலாம் என்ற நிலையில், குறையும்போது வாங்கி வைக்கலாம்.
இதற்கிடையில் IIFl செக்யூரிட்டீஸ் 5 பங்குகளை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.
கோல் இந்தியா - வாங்கலாம். - இலக்கு விலை - ரூ.250, ஸ்டாப் லாஸ் - ரூ.212
ஷார்ட் கவரிங் மற்றும் இப்பங்கினில் முதலீடுகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா ஸ்டீல் - தற்போதைய விலையில் வாங்கலாம். இலக்கு விலை 115 ரூபாயாகும். ஸ்டாப் லாஸ் - 102 ரூபாயாகும். டெக்னிக்கலாக இப்பங்கின் விலையானது அதிகரிக்கலாம் என்ற சூழலில், இதன் வால்யூமும் அதிகரித்துள்ளது, மெட்டல் விலையும் அதிகரித்து வருகின்றது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா: இதனை தற்போதைய சந்தை விலையில் வாங்கலாம். இதன் இலக்கு விலை - ரூ.555. ஸ்டாப் லாஸ் - 518 ரூபாயாகவும் கணித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது வாரமாக நேர் மறையான ஏற்றத்தினை கண்டு வரும் நிலையில், வலுவான வளர்ச்சியினையும் கண்டுள்ளது.
ஓ என் ஜி சி: ஓ என் ஜி சி பங்கினை தற்போதைய சந்தை விலையில் இருந்து வாங்கலாம். இதன் இலக்கு விலை 250 ரூபாயாகும். இதன் ஸ்டாப் லாஸ் விலை 223 ரூபாயாகும்.
பவர் கிரிட் கார்ப் - இதனையும் தற்போதைய சந்தை விலையில் வாங்கலாம். இதன் இலக்கு விலை 250 ரூபாயாகும். இதன் ஸ்டாப் லாஸ் - 223 ரூபாயாகவும் தரகு நிறுவனம் கணித்துள்ளது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?



Click it and Unblock the Notifications