ஒரே வருடத்தில் 200% லாபம் கொடுத்த பென்னி பங்கு.. இதன் விலை வெறும் ரூ.56 தான்..!!

ஐஐடிஎல் ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் பங்குகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் சிறப்பான ஏற்றத்தை கொடுத்துள்ளன. பென்னி பங்கு ஆன இது இன்றைய வர்த்தகத்தில் சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த பங்கு கடந்த ஓராண்டில் அதன் முதலீட்டாளர்களுக்கு 200 சதவீதத்திற்கும் அதிகமான லாபத்தை அளித்துள்ளது.

நவம்பர் மாத தொடக்கமே பங்குச்சந்தைகளுக்கு பெரும் சரிவை அளித்துள்ளது. அதன்படி நேற்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டும் சுமார் 1.5 சதவிகித சரிவுடன் முடிவடைந்த நிலையில், இன்று சற்று நிம்மதியளிக்கும் விதமாக ஏற்றம் கண்டுள்ளது. இவற்றில் சில பங்குகளில் அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது, இதில் ஸ்மால்கேப் பங்குகளும் அடங்கும், அதிலும் குறிப்பாக, தொடர்ந்து இரண்டாவது நாளாக ஐஐடிஎல் ப்ராஜெக்ட்ஸ் பங்குகள் 10 சதவீதம் உயர்ந்துள்ளது.

 ஒரே வருடத்தில் 200% லாபம் கொடுத்த பென்னி பங்கு.. இதன் விலை வெறும் ரூ.56 தான்..!!

இன்றைய வர்த்தகத்தில் ஸ்மால்கேப் நிறுவனத்தின் பங்குகள் ரூ.55.75 அளவில் வர்த்தகமாகின. இது அதன் முந்தைய இறுதி நிலையான ரூ. 50.69 லிருந்து கிட்டத்தட்ட 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு ஒரு நாள் முன்னதாக திங்கட்கிழமையும் பங்கு மேல்சுற்றில் வர்த்தகம் செய்யப்பட்டது. அத்துடன் இந்த பங்கு கடந்த ஐந்து நாட்களில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், ஒரு மாத காலப்பகுதியில் 45 சதவீதத்திற்கும் அதிகமான ஏற்றத்தை சந்தித்துள்ளது. அதே சமயம், 6 மாத காலத்தின் அடிப்படையில், 2 சதவீதம் மட்டுமே உயர்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், முதலீட்டாளர்களுக்கு இந்த பங்கு ஒரு வருடத்தில் மல்டிபேக்கர் வருமானத்தை கொடுத்துள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்பு, நவம்பர் 6, 2023 அன்று, ஐஐடிஎல் ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் பங்குகள் 16.85 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டன. அதேசமயம் நவம்பர் 5 ஆம் தேதி 230 சதவிகிதம் அதிகரித்து 55.75 ரூபாயை எட்டியது. இந்த பங்கு அதன் 52 வாரங்களில் அதிகபட்சமாக ரூ.67.22 ஆகவும், அதன் 52 வாரங்களில் குறைந்தபட்சம் ரூ.15 ஆகவும் உள்ளது. ஐஐடிஎல் ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட்டின் சந்தை மதிப்பு ரூ.27.82 கோடியாக உள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் வர்த்தகம் முடிவு நேரத்தில் ஐஐடிஎல் ப்ராஜெக்ட்ஸ் பங்குகள் சுமார் 9.98% உயர்வுடன் ரூ.55.75 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது.

Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+