பிஎஸ்இ-யில் 1506 பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகம்..!

சில தினங்களுக்கு முன் வெளியான தொழிற்துறை வளர்ச்சி மற்றும் பணவீக்கக் குறியீடுகள் நம் அரசுக்கு சாதகமானதாகவோ முதலீட்டாளர்களுக்கு சாதகமானதாகவோ இல்லை. ஆனாலும் இன்று சந்தை ஏற்றம் கண்டிருக்கிறது.

சென்செக்ஸில் அதிக வெயிட்டேஜ் கொண்ட ஹெச் சி எஃப் சி பேங்க், இன்ஃபோசிஸ், போன்ற அதிக வெயிட்டேஜ் கொண்ட பங்குகள் ஏற்றம் கண்டிருப்பதும் சென்செக்ஸ் ஏற்றத்துக்கு முக்கிய காரணமாக அமைந்து இருக்கிறது.

பிஎஸ்இ-யில் 1506 பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகம்..!

ஒரு வேளை சந்தை நாளையும் ஏதாவது நல்ல செய்தி வந்து ஏற்றம் கண்டால் வழக்கம் போல 40,500 முதல் மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸாக வைத்துக் கொள்ளலாம். அதன் பிறகு 40,650-ஐ அடுத்த ரெசிஸ்டென்ஸாக எடுத்துக் கொள்ளலாம்.

கடந்த வாரத்திலேயே, சென்செக்ஸ் டே சார்ட்டில் இந்த ஏற்ற டிரெண்டு முடிந்ததைக் குறிப்பிட்டு இருந்தோம். நவம்பர் 07 கேண்டில் சார்ட் ஒரு ஹேங்கிங் மேன் பேட்டனைக் காட்டுகிறது. அதோடு அதற்கு முந்தைய நவம்பர் 06 அன்றைய குளோசிங் புள்ளியை உடைத்துக் கொண்டு, அதன் ஓப்பனிங் புள்ளிகளைத் தொட்டு நவம்பர் 07 அன்று சந்தை வர்த்தகம் ஆகி இருந்த்து. எனவே அடுத்து வரும் நாட்களில் சந்தை ஏற்றம் காண்பது கொஞ்சம் கடினம் தான் எனச் சொல்லி இருந்தோம். சொன்னது போலவே, சந்தை கடந்த நவம்பர் 08 முதல் இன்று வரை இறங்கிக் கொண்டு இருக்கிறது. இன்று சென்செக்ஸ் ஏற்றம் கண்டாலும் டிரெண்டை மாற்றும் விதத்தில் தன் முந்தைய நாளின் ஒப்பனிங் புள்ளியை விட கூடுதலாக ஏற்றம் கண்டு நிறைவடையவில்லை. எனவே இன்னும் இறக்க டிரெண்ட் சென்செக்ஸ் இருப்பதையே இது காட்டுகிறது.

நாளை ஏதாவது நெகட்டிவ் செய்தி வந்து, சந்தை இறக்கம் காணத் தொடங்கினால் 40,125 முதல் சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம். அதற்குப் பின், அடுத்த வலுவான சப்போர்ட்டாக 40,000 புள்ளிகளை எடுத்துக் கொள்ளலாம்.

நேற்று மாலை சென்செக்ஸ் 40,116 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 40,178 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 40,286 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 170 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.

இன்று காலை நிஃப்டி 11,858 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,870 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 33 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.

சென்செக்ஸின் 30 பங்குகளில் 16 பங்குகள் ஏற்றத்திலும், 14 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,682 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,005 ஏற்றத்திலும், 1,506 பங்குகள் இறக்கத்திலும், 171 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,682 பங்குகளில் 54 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 154 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் கலவையாக வர்த்தகமாயின. நிதி சேவை, ஐடி போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாயின.

ஐசிஐசிஐ பேங்க், இந்தியன் ஆயில், இன்ஃபோசிஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச் டி எஃப் சி பேங்க் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. பார்தி இன்ஃப்ராடெல், வேதாந்தா, ஜி எண்டர்டெயின்மெண்ட், இண்டஸ் இண்ட் பேங்க், அல்ட்ராடெக் சிமெண்ட் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+