கடந்த வெள்ளிக்கிழமை, இந்திய பங்குச் சந்தைகள் 10 சதவிகிதத்துக்கு மேல் சரிந்து, 45 நிமிடம் வர்த்தகம் நிறுத்தப்பட்டது. அதன் பின் மீண்டும் வர்த்தகமாகத் தொடங்கிய சென்செக்ஸ், மெல்ல ஏற்றம் கண்டு 34,103 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்தது.
கடந்த சில வாரங்களாக சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவது எல்லாம் சர்வ சாதாரணமாகி இருக்கிறது. இப்போது வரை இந்த டிரெண்ட் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

இன்று கூட சென்செக்ஸ் 1,615 புள்ளிகள் சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. சென்செக்ஸ் 33,103 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, தற்போது 32,488 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
இன்றைய குறைந்தபட்ச புள்ளியாக 31,921 புள்ளிகளைத் தொட்டு இருப்பதும் கவனிக்க வேண்டி இருக்கிறது. ஆக கடந்த வெள்ளிக்கிழமை குளோசிங் புள்ளியான 34,103 புள்ளியில் இருந்து இன்றைய குறைந்தபட்ச புள்ளியான 31,921 புள்ளிகளைத் தொட்டால் சுமாராக 2,180 புள்ளிகள் சரிந்து இருக்கிறது சென்செக்ஸ்.
தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி தற்போது 9,492 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. சுமார் 452 புள்ளிகள் சரிவில் வர்த்தகமாகி வருகிறது நிஃப்டி.
இன்று மார்ச் 16, 2020, ஆசியாவில் அனைத்து சந்தைகளும் சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட் 5.75 % சரிந்து இருக்கிறது. குறைந்து அளவு சரிவு கண்டு இருக்கும் சந்தை என்றால், அது ஜப்பானின் நிக்கி தான். இந்த சந்தை -0.07 % சரிந்து இருக்கிறது.
சென்செக்ஸின் 30 பங்குகளில் 02 பங்குகள் ஏற்றத்திலும், 28 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,023 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 446 பங்குகள் மட்டுமே ஏற்றத்திலும், 1,471 பங்குகள் இறக்கத்திலும், 106 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
யெஸ் பேங்க், டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரி, பாரத் பெட்ரோலியம், சன் பார்மா, டிசிஎஸ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இண்டஸ் இண்ட் பேங்க், அதானி போர்ட்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஹெச் டி எஃப் சி, எஸ் பி ஐ போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.