810 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்! 31,000-க்குக் கீழ் சென்செக்ஸ்!

கடந்த சில வாரங்களாக சென்செக்ஸ் ஏற்ற இறக்கம் என்றாலே 1,000 புள்ளிகள் எல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது.

அந்த அளவுக்கு தடாலடியாக ஏறுவதும் இறங்குவதுமாக இருந்த சென்செக்ஸ், இன்று 810 புள்ளிகள் மட்டும் சரிந்து இருப்பதைப் பார்க்கும் போது சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.

சென்செக்ஸ் நாளுக்குள் நாள் தன் சப்போர்ட் புள்ளிகளை உடைத்துக் கொண்டு கீழே சென்று கொண்டே இருக்கிறது. இன்று 31,000 புள்ளிகளுக்குக் கீழ் சென்செக்ஸ் நிறைவடைந்து இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

நேற்று மாலை சென்செக்ஸ் 31,390 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 31,611 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. வர்த்தகமாகத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, சென்செக்ஸ் குறைந்தபட்சமாக 30,394 புள்ளிகளைத் தொட்டது. இன்றைக்கான வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 30,579 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஆக 810 புள்ளிகள் சரிந்து நிறைவடைந்து இருக்கிறது.

நிஃப்டி

நிஃப்டி

இன்று காலை நிஃப்டி 9,285 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 8,968 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஆக 229 புள்ளிகள் சரிந்து இருக்கிறது. இப்படி இரண்டு பங்குச் சந்தை இண்டெக்ஸ்களும் ஒரு சராசரி வர்த்தக நாளைப் போல சரிந்து இருக்கின்றன.

30 பங்குகள்

30 பங்குகள்

சென்செக்ஸில் 30 பங்குகளில், 09 பங்குகள் ஏற்றாத்திலும், 11 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 1,745 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 975 பங்குகள் ஏற்றத்திலும், 695 பங்குகள் இறக்கத்திலும், 75 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 1,745 பங்குகளில் 9 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 223 பங்குகளின் விலை 52 வார இறக்கத்தையும் தொட்டு வர்த்தகமாயின.

பங்குகள் நிலவரம்

பங்குகள் நிலவரம்

யெஸ் பேங்க், ஈஷர் மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப், ஹிந்துஸ்தான் யுனிலிவர் லிமிடெட், ஏஷியன் பெயிண்ட்ஸ் போன்ற பங்குகள் விலை ஏற்றம் கண்டன. ஜி எண்ட்ர்டெயின்மெண்ட், இண்டஸ் இண்ட் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், பார்தி இன்ஃப்ராடெல், யூ பி எல் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

ஐரோப்பிய சந்தைகள்

ஐரோப்பிய சந்தைகள்

ஐரோப்பிய சந்தைகள் எல்லாம் சுமார் 0.4 - 1.28 சதவிகிதம் சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஆசிய சந்தைகளில் ஜப்பானின் நிக்கி மற்றும் ஹாங்காங்கின் ஹேங்செங்கைத் தவிர மற்ற எல்லா சந்தைகளும் 0.34 - 4.99 % வரை சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

உலக காரணிகள்

உலக காரணிகள்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 74.24 ரூபாயாக வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 31.86 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. கொரோனா வைரஸுக்கு மருந்து பரிசோதனை செய்கிறார்கள் என்பது மட்டுமே உலக அளவில் ஒரே பாசிட்டிவ் செய்தி.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+