இந்தியாவில் 1 லட்சம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகும்: மோகன்தாஸ் பாய்
இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சி வேகமாக இருக்கும் நிலையில், அடுத்த 7-8 வருடங்களில் இத்துறையில் மட்டும் சுமார் 32.5 லட்சம் பேர் பணியாற்றுவார்கள்.
இதுமட்டும் அல்லாமல் இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் நிறுவனங்களின் எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும். இதன் மூலம் 500 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகச் சந்தையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியாவில் தற்போது இருக்கும் அனைத்து நடைமுறை மற்றும் வர்த்தகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படுவது ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தான் எனவும் மனிப்பால் குளோபல் நிறுவனத்தின் தலைவர் மோகன்தாஸ் பாய் தெரிவித்தார்.
தற்போது இந்தியாவில் மட்டும் சுமார் 32,000 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளது. மேலும் இனி வரும் ஒவ்வொரு வருடமும் 7,000 நிறுவனங்கள் உருவாகும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications