இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்.. இந்த ஒரு விஷயத்தை மறக்காம கவனிங்க..!

காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் மத்தியிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவின் பாதுகாப்புத் துறை மீது முதலீட்டாளர்கள் தங்களுடைய கவனம் திரும்பியுள்ளனர். தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், பாதுகாப்புக் கொள்கை, இராணுவச் செலவினங்கள் மற்றும் பாதுகாப்புத் தொழில்களில் முதலீட்டு ஆகியவை இத்துறையின் பங்கு விலையை நேரடியாகப் பாதிக்கின்றன.

பொதுவாகப் போர் பதற்றம் அதிகமானால் பாதுகாப்புத் துறை பங்குகள் முதலீட்டாளர்கள் மத்தியில் எப்போதும் தனி கவனத்தைப் பெறும், இப்படியிருக்கையில் இந்தியா - பாகிஸ்தான் மத்தியிலான பதற்றமும், அன்னிய முதலீடுகள் இந்திய சந்தைக்கு வரத் துவங்கியிருக்கும் இந்த வேளையிலும் பாதுகாப்புத் துறை பங்குகளின் நிலைமை என்ன..? இத்துறையில் முதலீடு செய்யலாமா..? இத்துறையின் வளர்ச்சி வாய்ப்புகள் எப்படி இருக்கிறது.. இத்துறையில் செய்யப்படும் புதிய முதலீடுகளுக்கு நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில் எவ்வாறு பலனளிக்கும்..?

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்.. இந்த ஒரு விஷயத்தை மறக்காம கவனிங்க..!

"இந்திய அரசின் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி முயற்சிகள், உள்நாட்டு நிறுவனங்களுக்கு நடுத்தர மற்றும் நீண்ட காலத்தில் கணிசமான பலன்களைத் தரும்," என்று எஸ்எஸ்ஜே ஃபைனான்ஸ் & செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் அதிஷ் மாட்லாவாலா தெரிவித்தார். இதேபோல் இனி வரும் காலத்தில் இத்துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடும், தனியார்த் துறை முதலீடுகள் அதிகரிக்கும் போதும் பாதுகாப்புத் துறை பங்குகள் அதிகப்படியான லாபத்தைத் தரலாம்.

இந்திய பாதுகாப்புத் துறையில் அதிகம் கவனிக்கப்படும் பங்குகள் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL), மஸாகன் டாக் ஷிப் பில்டர்ஸ் மற்றும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் ஆகியவை வலுவான ஆர்டர் புத்தகங்கள் கொண்டுள்ளது. இதேபோல் அதன் சந்தை மதிப்புக்கும், அதன் நிறுவன மதிப்புக்கு மத்தியிலான வித்தியாசம் மிகவும் நியாயமான முறையில் இருப்பதாகவும் முதலீட்டு நிபுணர்கள் கூறுகின்றனர்.

பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் இந்த ஆண்டு 26% உயர்வுடன் பாதுகாப்புத் துறை பங்குகளின் பட்டியலில் முன்னணியில் உள்ளது. மஸாகன் டாக் ஷிப் பில்டர்ஸ் 18.5% உயர்வைப் பதிவு செய்து, கப்பல் கட்டுமானம் மூலோபாய நீர்மூழ்கிக் கப்பல் திட்டங்களில் அதிகப்படியான ஆர்டர்களை இந்நிறுவனம் பெற்றுள்ளது.

இருப்பினும், பாரஸ் டிஃபென்ஸ் மற்றும் அஸ்ட்ரா மைக்ரோவேவ் புராடக்ட்ஸ் போன்ற பிற பாதுகாப்பு தொடர்புடைய பங்குகள், முந்தைய ஆண்டுகளில் பெற்ற வலுவான உயர்வுக்கு பிறகு, 3-4% என்ற மிதமான வருமானத்தை மட்டுமே வழங்கியுள்ளதையும் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டும்.

பாதுகாப்பு பங்குகள் தற்போது மலிவான விலையில் விற்கப்படுவது இல்லை என்றாலும், அடுத்த சில ஆண்டுகளுக்கு அதிகப்படியான வளர்ச்சி வாய்ப்புகள் கொண்டுள்ள துறையாகவே பார்க்கப்படுகிறது. உதாரணமாக BEL தற்போது 43 மடங்கு P/E மற்றும் 30 மடங்கு EV/EBITDA மதிப்பீட்டில் வர்த்தகம் செய்யப்படுகிறது. அதேவேளை, பாரஸ் டிஃபென்ஸ் 84 மடங்கு P/E மற்றும் 48 மடங்கு EV/EBITDA மதிப்பீட்டில் உள்ளது.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL): டிபென்ஸ் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ரேடார் துறையில் முன்னணி நிறுவனமான பிஇஎல், கண்காணிப்பு, தகவல் தொடர்பு மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போர் அமைப்புகளில் அதிகரிக்கும் முதலீடுகளால் நேரடியாக பயனடைகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள், தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மஸாகன் டாக் ஷிப் பில்டர்ஸ்: கப்பல் கட்டுமானம் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் திட்டங்களில் அதிகப்படியான ஆர்டர்களை கொண்ட இந்நிறுவனம், இந்திய கடற்படையின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. இதன் 18.5% பங்கு உயர்வு, நிறுவனத்தின் நம்பகமான நிலையை காட்டுகிறது.

பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்: ஏவுகணை உற்பத்தி மற்றும் பாதுகாப்பு அமைப்புகளில் முன்னணியில் உள்ள இந்நிறுவனம், உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 26% உயர்வைப் பதிவு செய்துள்ளது.

பாரஸ் டிஃபென்ஸ்: எல்லை தாண்டிய பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் அச்சுறுத்தல் குறைப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கும் இந்நிறுவனம், புலனாய்வு திறன்கள் மற்றும் மின்னணு மேலாண்மையில் முக்கியத்துவம் பெறுகிறது. இதன் உயர் மதிப்பீடு, நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளை எடுத்துக்காட்டுகிறது.

இன்றைய வர்த்தக முடிவில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் பங்குகள் 2.59 சதவீதம் உயர்ந்து 305.30 ரூபாய்க்கு வர்த்தகமாகி முடிந்தது. மஸாகன் டாக் ஷிப் பில்டர்ஸ் பங்குகள் 4.77 சதவீதம் உயர்ந்து 2788.00 ரூபாய்க்கு வர்த்தகமாகி முடிந்தது. பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் பங்குகள் 5.42 சதவீதம் உயர்ந்து 1490.30 ரூபாய்க்கு வர்த்தகமாகி முடிந்தது.

காஷ்மீர் தாக்குதல், இந்தியாவின் பாதுகாப்பு முன்னுரிமைகளை மறு ஆய்வு செய்ய வைத்துள்ளது. புவிசார் அரசியல் பதற்றங்கள், பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்கவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் சூழ்நிலை உருவாக்கியுள்ளது.

இந்தியாவின் 'ஆத்மநிர்பார் பாரத்' திட்டம், வெளிநாட்டு தொழில்நுட்ப சார்பை குறைத்து, உள்நாட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. இதனால், பிஇஎல், மஸாகன் டாக் மற்றும் பாரத் டைனமிக்ஸ் போன்ற நிறுவனங்கள், வெளிநாட்டு உதவிகளை சார்ந்து இல்லாமல் இயங்கும் திறன் கொண்ட நிறுவனங்களுக்கு இத்துறையில் பெரும் லாபகரமான வாய்ப்புகள் உள்ளது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+