செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகப்படியான கவனத்தை ஈர்த்த ஒரு துறை என்றால் அது சிமெண்ட் துறை தான். இன்று பங்குச் சந்தையில் சிமெண்ட் நிறுவனங்களின் பங்குகள் 7.5% வரை உயர்ந்து பலரையும் ஆச்சிரியத்தில் மூழ்கடித்தது என்றால் மிகையில்லை.
ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வரும் இந்திய கார்ப்ரேட் நிறுவனங்கள், தங்களுடைய வர்த்தகத்தில் வலுவான செயல்பாடு இருப்பதையும், சந்தையில் டிமாண்ட் அதிகரித்துள்ளதை காட்டியிருக்கும் காரணத்தால் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு துறை மேம்படும் என கணிக்கப்பட்டது.

இதேபோல் கடந்த ஆண்டு சிமெண்ட் துறை பல சவால்களை எதிர்கொண்டது என்றால் மிகையில்லை, பொதுத் தேர்தலுக்கு முன்பு மத்திய அரசு செலவினங்களை குறைந்ததாலும், பருவமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்பு காரணமாக கட்டுமான துறை மந்த நிலைக்கு சென்று சிமெண்ட் தேவை குறைந்திருந்தது.
ஆனால், நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில் அரசு மற்றும் தனியார் துறையில் உள்கட்டமைப்பு செலவினங்கள் அதிகரித்து வருவதற்கான சிக்னல் கிடைத்துள்ளது. மேலும் நாடு முழுவதும் உள்கட்டமைப்பு திட்டங்கள் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருவதாலும் சிமெண்ட் தேவை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இந்த இரு காரணத்தாலும் சிமெண்ட் துறை பங்குகள் இன்று தடாலடியாக உயர்ந்துள்ளது.
இதன் எதிரொலியாக இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் சிமெண்ட் நிறுவன பங்குகள் எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது என்பதை இப்போது பார்ப்போம்.
- இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 7.5% உயர்ந்து ரூ.368.8ஐ எட்டின. டால்மியா பாரத் நிறுவனத்தின் பங்குகள் 3.4% உயர்ந்து ரூ.2,341.90ஐ தொட்டன.
- பிர்லா கார்ப்பரேஷன் பங்குகள் 7.2% உயர்ந்து ரூ.1,490.10 என்ற உச்சத்தை எட்டின. ராம்கோ சிமெண்ட்ஸ் பங்குகள் 3.8% உயர்ந்து ரூ.1,193.95 அளவை அடைந்தன.
- ஜேகே லக்ஷ்மி சிமெண்ட் 2.6% உயர்ந்து ரூ.1,020.85ஐ தொட்டன.
- அம்புஜா சிமெண்ட்ஸ் 2% உயர்ந்து ரூ.625ஐ எட்டியது.
- ஸ்ரீ சிமெண்ட் 2.8%, ஜேகே சிமெண்ட்ஸ் 1.9% உயர்ந்தது.
காலாண்டு முடிவுகள் வெளியான பின்பு சிமெண்ட் நிறுவனங்கள் இப்போது உற்பத்தி அளவை விரிவாக்குவதற்கும், வர்த்தக இருப்பை வலுப்படுத்துவதற்கும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. இதேபோல் இந்திய சிமெண்ட் துறையில் தற்போது அதானி குழுமம் மற்றும் பிர்லா குழுமத்திற்கு மத்தியிலான வர்த்தகம்
நாடு முழுவதும் நடைபெறும் உள்கட்டமைப்பு திட்டங்கள், வீட்டு வசதி திட்டங்கள் மற்றும் மெட்ரோ இணைப்பு முயற்சிகள் ஆகியவை சிமெண்ட் துறையின் வளர்ச்சியை மேம்படுத்தும் என நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications