பங்குச்சந்தையில் இறங்க திட்டமிடும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்..!
இந்தியாவில் பைட்டர் ஜெட் தயாரிக்கும் நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் பங்குச்சந்தையில் இறங்குவதற்காக முதற்கட்ட விண்ணப்பத்தை பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. மத்திய அரசு தொடர்ந்து நிறுவனங்களின் பங்கு இருப்பை குறைத்து வரும் நிலையில் பல பொதுத்துறை நிறுவனங்கள் தற்போது பங்குச்சந்தையில் குதிக்க திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில் இந்நிறுவனம் தனது பங்குகளை விற்பனை செய்ய எஸ்பிஐ கேபிடல் மர்சென்ட்ஸ், கோல்டுமேன் சாச்சஸ், பிரக்லேயாஸ் மற்றும் ஆக்சிஸ் கேபிட்டல் ஆகிய நிறுவனங்களை நியமித்துள்ளது.
இந்நிறுவனத்திடம் தற்போது 10 ரூபாய் முகமதிப்பில் சுமார் 3.615 கோடி பங்குகளை பொதுச்சந்தை வர்த்தகத்திற்காக வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications