இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை ஜூன் மாதத்தில் 25.6 பில்லியன் டாலராக இருந்த நிலையில் ஜூலை மாதத்தில் 31 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 100 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 2010 ஆம் ஆண்டில் இருந்து ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் 60 பில்லியன் டாலர் அளவை சுமார் நான்கு முறை தாண்டியுள்ளது.
2011-12 மற்றும் 2012-13 இல், பெட்ரோலியம் பொருட்கள், கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்த போது வர்த்தகப் பற்றாக்குறை 60 பில்லியன் டாலர்களைத் தாண்டியது. சமீபத்தில், 2018-19 மற்றும் 2019-20ல் 60 பில்லியன் டாலர் பெட்ரோலியம் விலை உயர்ந்த போது தாண்டியது.
மத்திய அரசு
தற்போதைய சூழ்நிலையில், உள்நாட்டு தேவை மற்றும் பணவீக்கம் காரணமாகப் பெட்ரோலிய பொருட்கள் மற்றும் சில பொருட்களின் ஏற்றுமதியைக் குறைக்க அரசு தலையீட்டு பல கட்டுப்பாடுகளை விதித்து வர்த்தகப் பற்றாக்குறை அளவீட்டை கட்டுக்குள் கொண்டு வந்தது.
ஏற்றுமதி செஸ்
பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதியின் வருவாய் ஜூன் 2022 இல் 7.83 பில்லியன் டாலரில் இருந்து ஜூலை மாதத்தில் 2.4 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீது ஏற்றுமதி செஸ் விதித்த பிறகு இப்பிரிவு வருவாய்ச் சரிந்தது.
முக்கிய ஏற்றுமதி பொருட்கள்
நவ ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், ஆர்கானிக் மற்றும் கனிம இரசாயனங்கள் மற்றும் ரெடிமேட் ஆடைகள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் ஏற்பட்ட சரிவு ஜூலை மாதத்தில் ஏற்றுமதி வருமானம் முந்தைய மாதத்தை விட 2.7 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. உலகில் பல முக்கியச் சந்தைகளில் நுகர்வோர் தேவை குறைந்த காரணத்தால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது.
நிலக்கரி
நிலக்கரி இறக்குமதி என்பது இந்த நிதியாண்டில் வர்த்தகப் பற்றாக்குறை அளவீட்டை அதிகரிக்க முக்கியப் பங்கு அளிக்கிறது. ஆனால் ரஷ்யாவில் இருந்து தள்ளுபடி விலையில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மூலம் வர்த்தகப் பற்றாக்குறை கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் நிலக்கரி விலை 200 சதவீதம் அதிகரித்துள்ளது.
எலக்டரானிக்ஸ் பொருட்கள்
இறக்குமதி வரிகள் உயர்த்தப்பட்ட பிறகு தங்கத்தின் மந்தமான இறக்குமதி சில நிவாரணங்களை அளித்தாலும் மொபைல் போன்கள் மற்றும் கணினிகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால் இறக்குமதி கட்டணங்கள் அதிகரித்து வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications