ஈரான் போர் காரணமாக தொடர்ச்சியாக சரிவில் இருந்த இந்திய பங்குச்சந்தைகள் கடந்த 2 நாட்களாக தான் மீண்டு வந்து முதலீட்டாளர்களுக்கு சற்றே நிம்மதியை தந்தன. இந்த சூழலில் இன்றைய தினம் பங்குச்சந்தை என்ன ஆகுமோ என முதலீட்டாளர்கள் அச்சத்தில் இருக்கும் நிலையில் அதற்கு ஒரு நாள் ரெஸ்ட் எடுத்து கொள்ளுங்கள். ஏனெனில் தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தைகள் (NSE, BSE) ராம நவமியை முன்னிட்டு இன்று செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராம நவமியை முன்னிட்டு பங்குச்சந்தைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே பங்குச்சந்தை செயல்படுகிறது. தொடர் விடுமுறைகளால் அடுத்த வாரமும் 3 நாட்கள் தான் வர்த்தகம் நடைபெறும். அடுத்த ஏழு நாட்களில் இரண்டு சந்தை விடுமுறைகள் வருவதால், இவ்வாரமும் அடுத்த வாரமும் குறைவான வர்த்தக நாட்களைக் கொண்டுள்ளன.

மார்ச் 31 செவ்வாய்க்கிழமை அன்று மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 3 வெள்ளிக்கிழமை புனித வெள்ளி ஆகிய தினங்களில் பங்குச் சந்தைகள் செயல்படாது. இதனால், அடுத்த வாரத்தில் மூன்று வர்த்தக அமர்வுகளே இடம்பெறும். குறிப்பாக தொடர்ந்து 3 நாட்கள் பங்குச்சந்தைகளுக்கு விடுமுறையாக இருக்கும்.
இந்தியாவின் மிகப்பெரிய கமாடிட்டி சந்தையான மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா (MCX), முதல் அமர்வில் (காலை 9 - மாலை 5) மூடப்பட்டு மாலையில் (மாலை 5 - இரவு 11:30) வர்த்தகத்தைத் தொடங்கும். மார்ச் 31 அன்றும் MCX காலை அமர்வில் மட்டும் மூடப்படும். விவசாய கமாடிட்டி சந்தையான நேஷனல் கமாடிட்டி & டெரிவேட்டிவ்ஸ் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் (NCDEX), இரு அமர்வுகளிலும் முழுமையாக மூடப்பட்டிருக்கும்.
2026 ஆம் ஆண்டிற்கான MCX இன் காலண்டில் மொத்தம் 16 வர்த்தக விடுமுறை தினங்களை அறிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, 2026 ஆம் ஆண்டில் 16 பங்குச் சந்தை விடுமுறைகள் உள்ளன; அவற்றில் மூன்று ஏற்கனவே முடிந்துவிட்டன. ராம நவமி, மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி விடுமுறைகளுக்குப் பிறகு, மீதமுள்ள ஒன்பது மாதங்களில் இன்னும் 10 சந்தை விடுமுறைகள் உள்ளன.
அந்த விடுமுறைகள் பின்வருமாறு: ஏப்ரல் 14 (டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் ஜெயந்தி), மே 1 (மகாராஷ்டிரா தினம்), மே 28 (பக்ரி ஈத்), ஜூன் 26 (மொகரம்), செப்டம்பர் 14 (விநாயகர் சதுர்த்தி), அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி), அக்டோபர் 20 (தசரா), நவம்பர் 10 (தீபாவளி பலிபிரதிபாடா), நவம்பர் 24 (குருநானக் ஜெயந்தி) மற்றும் டிசம்பர் 25 (கிறிஸ்துமஸ்).


Click it and Unblock the Notifications