அமெரிக்கா-வெனிசுலா இடையேயான பதற்றம் மற்றும் அதிபர் மதுரோவின் கைது இந்திய வர்த்தகத்தின் மீது என்ன தாக்கம் ஏற்படும் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த மோதல் இந்தியாவுக்கு மிகக் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் (GTRI) தகவல்படி, 2024-25 நிதியாண்டில் வெனிசுலாவிலிருந்து இந்தியா 364.5 மில்லியன் டாலர் அளவுக்கு இறக்குமதி செய்தது. இதில் கச்சா எண்ணெய் 255.3 மில்லியன் டாலர். முந்தைய 2023-24 நிதியாண்டின் 1.4 பில்லியன் டாலர் இறக்குமதியுடன் ஒப்பிடுகையில் இது 81.3% சரிவாகும்.

ஜி.டி.ஆர்.ஐ. நிறுவனர் அஜய் ஸ்ரீவஸ்தவா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம், "அமெரிக்கத் தடைகளால், வெனிசுலாவுடனான இந்திய வர்த்தகம் முடங்கியது. 2024-25 நிதியாண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி 81.3% சரிந்து, மொத்த இருதரப்பு வர்த்தகமும் குறைந்ததால், இந்தியாவுக்கு மிகக் குறைந்த தாக்கமே ஏற்படும்," என்றார்.
தற்போது ரஷ்யா இந்தியாவின் முதன்மை கச்சா எண்ணெய் ஆதாரமாக உள்ளது. 2000கள் மற்றும் 2010களில் வெனிசுலா கச்சா எண்ணெய்க்கு இந்தியா முக்கிய வாடிக்கையாளராக இருந்தது. ஆனால், 2019 முதல் அமெரிக்கத் தடைகளாலும், இரண்டாம்நிலை தடைகளைத் தவிர்க்கும் கட்டாயத்தாலும் இருதரப்பு வர்த்தகம் வெகுவாகக் குறைந்தது.
உலகின் மொத்த எண்ணெய் இருப்பில் சுமார் 18% வெனிசுலாவில் உள்ளது – இது சவுதி அரேபியா (16%), ரஷ்யா (5-6%), அமெரிக்காவை (4%) விட அதிகம். ஓ.என்.ஜி.சி. விதேஷ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஆயில் இந்தியா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இச்சூழலில் கவனம் பெற்றுள்ளன.
ஓ.என்.ஜி.சி. விதேஷ், வெனிசுலாவில் இரண்டு எண்ணெய் திட்டங்களில் பங்குதாரராக உள்ளது. இது இந்தியாவின் மிக நேரடியான upstream முதலீடுகளில் ஒன்றாகும். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், அந்நாட்டின் கராபோபோ கனரக எண்ணெய் திட்டத்தில் கூட்டாளராகச் செயல்படுகிறது. ஆயில் இந்தியா ஓ.வி.எல். மற்றும் ஐ.ஓ.சி.யுடன் இணைந்து கூட்டு முயற்சியில் சிறுபான்மை பங்குதாரராக உள்ளது.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நயரா எனர்ஜி, மாங்கலூர் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் (MRPL) ஆகிய நிறுவனங்கள் இதற்கு முன்பு வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெயைப் பெற்றுள்ளன.
இந்தியா வெனிசுலாவுக்கு 95.3 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்ததில், மருந்துகள் 41.4 மில்லியன் டாலர். சன் பார்மாவுக்கு அங்கு பதிவுசெய்யப்பட்ட துணை நிறுவனம் உள்ளது. டாக்டர் ரெட்டி'ஸ் லேபரட்டரீஸ், தனது வெனிசுலா துணை நிறுவனப் பங்குகளை 2024 இல் விற்றது. சிப்ளா நிறுவனம் வரலாற்று ரீதியாக அத்தியாவசிய மருந்துகளை வெனிசுலாவுக்கு ஏற்றுமதி செய்தது. க்ளென்மார்க் பார்மா, தனது உள்ளூர் துணை நிறுவனம் மூலம் அங்கு செயல்பட்டு வருகிறது.
வாகனத்துறை மீதான தாக்கம் மிகக் குறைவாகவே உள்ளது. பஜாஜ் ஆட்டோவின் வெனிசுலா ஏற்றுமதி அதன் மொத்த வெளிநாட்டு ஏற்றுமதியில் 1% க்கும் குறைவே. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் ஷர்மா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம், "நாங்கள் வெனிசுலாவுக்கு ஏற்றுமதி செய்கிறோம். பல்சர் மற்றும் பாக்ஸர் மாதிரிகள் அங்கு பிரபலமாக இருந்தாலும், மொத்த ஏற்றுமதியில் இவை 1% க்கும் குறைவு," என்றார். மற்றொரு இந்திய வாகன உற்பத்தியாளரான டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, வெனிசுலாவில் தனக்கு குறிப்பிடத்தக்க இருப்பு இல்லை என பி.டி.ஐ.யிடம் கூறியது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications