கடந்த சில வாரங்களாக பங்குச் சந்தையை ஆட்டிப் படைத்து வந்த அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற பயங்கள் மெல்ல குறைய தொடங்கியுள்ளன. அதன் எதிரொலியாக, சந்தையின் பயத்தை அளவிடும் இந்தியா விஐஎக்ஸ் (India VIX) கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 15% சரிந்து, முதலீட்டாளர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.
இந்தியா VIX என்பது பங்குச் சந்தையின் பயத்தை அளவிடும் கருவி என்று அழைக்கப்படுகிறது. சந்தையில் ஏதோ ஒரு பதற்றம் (உதாரணமாக: போர், தேர்தல் முடிவுகள், பட்ஜெட்) நிலவும்போது, முதலீட்டாளர்கள் எதிர்காலம் குறித்து அச்சமடைவார்கள். அப்போது VIX-ன் மதிப்பு அதிகரிக்கும். சந்தை அமைதியாக, சீராக இருக்கும் போது VIX-ன் மதிப்பு குறையும்.

ஆக தற்போது இந்தியா விக்ஸ் குறைந்திருப்பது சந்தை ஒரு மிகப்பெரிய சரிவில் இருந்து தப்பித்து மீண்டு வருகிறதா அல்லது இது ஒரு தற்காலிகமான நிம்மதியா? கரடியின் பிடியில் சிக்கித் தவித்த காளை மீண்டும் துள்ளி குதிக்க தயாராகி விட்டதா? 2026-ஆம் ஆண்டின் இந்த கோடைக்கால சந்தையில் முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டியது எங்கே? நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயங்கள் என்ன? வாருங்கள் தெரிந்து கொள்வோம்.
சமீபத்திய காலமாக அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட இந்தியா VIX ஆனது, கடந்த இரண்டு வர்த்தக தினங்களில் மட்டும் 15% சரிவை கண்டுள்ளது. இன்று மட்டும் 8%-க்கு மேலாக சரிவில் காணப்படுகிறது. இது சந்தையில் ஏற்ற இறக்கமானது குறைந்து வருவது, விற்பனை அழுத்தம் குறைவாக இருப்பதையே காட்டுகிறது. எனினும் இந்திய சந்தைகள் இன்னும் முழுமையாக ஆபத்தில் இருந்து வெளியே வரவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் 22,955 புள்ளிகளாக தொடங்கிய நிஃப்டி ஆனது, 172 புள்ளிகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. டெக்னிக்கலாக பார்க்கும்போது தினசரி சார்ட் பேட்டர்னில் ஏற்றம் காணலாம் எனும் விதமாக காணப்படுகிறது. இதனிடையே 23,600 - 23,700 என்ற லெவலுக்கு மேலாக தொடரும் பட்சத்தில், தொடர்ந்து சந்தையானது ஏற்ற பாதையில் இருக்கும். நிஃப்டி குறுகிய காலத்தில் ஏற்ற பாதையில் இருக்கும். ஆனால் இன்னும் முழுமையாக அழுத்தத்தில் இருந்து வெளியேறவில்லை. ஒரு வேளை 23,600 - 23,700-க்கு மேலாக தொடர்ந்து இருக்க முடியாமல், கீழாக தொடர்ந்தால் மீண்டும் சரிவு இருக்கும். உடனடி சப்போர்ட் லெவல் ஆனது 23,350 புள்ளிகளாகவும் நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
நிஃப்டி தனது ஒரு மணி நேர சார்ட்டில் ஒரு சரிவு பாதையிலிருந்து வெளியேறியுள்ளது. இது சந்தையில் நம்பிக்கை அதிகரிப்பதை காட்டுகிறது. மேலும் குறியீடு 21 EMA-க்கு மேல் நகர்ந்துள்ளது. இதனால் சந்தையின் போக்கு ஓரளவுக்கு சாதகமாக இருக்கும் என்றும், நிஃப்டி 23,800 முதல் 24,000 வரை உயர வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
நிஃப்டி தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக தனது மீட்பு பயணத்தை தொடர்ந்துள்ளது. இன்ட்ராடே சார்ட்டில் டபுள் பாட்டம் அமைப்பு உருவாகியுள்ளது, இது சந்தை மேலும் உயர்வதற்கான வாய்ப்பை காட்டுகிறது. தற்போதைக்கு 23,700 என்பது உடனடி தடையாக உள்ளது. இதை தாண்டினால் 23,835-ஐ நோக்கி செல்ல வழி பிறக்கும். மாறாக, 23,300-க்குக் கீழ் சந்தை வலுவாக சரிந்தால், அது சரிவு போக்கு மீண்டும் தொடங்குவதற்கான அறிகுறியாகும்.
உள்நாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வத்தால் சந்தை தனது லாபத்தை நீட்டித்துள்ளது. முன்பு சரிவை சந்தித்த ஆட்டோ, மெட்டல் மற்றும் நிதித் துறை பங்குகள் இப்போது முன்னணியில் உள்ளன. இருப்பினும் போர் தொடர்பான நிச்சயமற்ற சூழல் நிலவுவதால், இந்த மீட்சியை இப்போதே நிலையானது என்று கூற முடியாது. ஆனால் நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது, இந்தியாவின் அதிகப்படியான மதிப்பீடுகள் குறைந்துள்ளதால், 2027 நிதியாண்டிற்கான எதிர்காலம் வலுவாக இருப்பதால், இப்போது முதலீடு செய்வது புத்திசாலித்தனமானது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications