இந்திய பங்குச்சந்தையில் இன்று ஐடி நிறுவன பங்குகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்தன. முதலீட்டாளர்களுக்கு இதன் மூலம் பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் பெரிய அளவு இழப்பை சந்தித்து இருக்கிறது.
ஐடி நிறுவனங்களுக்கான நிஃப்டி ஐடி குறியீடு 4.6 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்து இன்ட்ராடே வர்த்தகத்தில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட 33,471.55 புள்ளிகள் என வெகுவாக சரிந்தது. இன்றைய நாளில் மிக மோசமாக செயல்பட்ட பங்குகளாக ஐடி துறை பங்குகள் மாறி இருக்கின்றன. மொத்த மதிப்பீட்டு அடிப்படையில் பார்க்கும்போது ஐடி பங்குகளின் மதிப்பீட்டில் சுமார் 1.3 லட்சம் கோடி சரிந்துள்ளது.

இதன் மூலம் இந்திய பங்குச்சந்தையில் ஐடி பங்குகளின் மொத்த சந்தை மூலதன மதிப்பு 27 லட்சம் கோடிகளாக சரிவடைந்து இருக்கிறது. 2025 ஆம் ஆண்டில் 13 சதவீதம் சரிந்த நிஃப்டி ஐடி குறியீடு 2026 தொடங்கிய இந்த ஒரு மாத காலத்திலேயே 11 சதவீதம் குறைந்திருக்கிறது. டிரம்பின் அதிரடி அறிவிப்புகள், மேக்ரோ பொருளாதார சூழல், அமெரிக்க பொருளாதார மந்த நிலை என கடந்த ஆண்டு முழுவதுமே ஐடி நிறுவனங்களுக்கு சோதனை காலம் தான்.
இந்த ஆண்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரிப்பு, ஏந்திராபிக் ஏஐ நிறுவனத்தின் ஏஐ தயாரிப்புகள் ஐடி நிறுவன பங்குகளில் பெருமளவு விற்பனை அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. அச்சம் காரணமாக ஏராளமான முதலீட்டாளர்கள் பெருமளவில் ஐடி பங்குகளை விற்பனை செய்து வெளியேறுவது தான் மிக முக்கியமான காரணம் என சொல்லப்படுகிறது.

குறிப்பாக டெக் நிறுவன பங்குகளில் மேக்ரோ அழுத்தமும், ஏஐ அச்சமும் அதிகரித்துள்ளது என கூறும் ஜியோஜிட் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்தின் தலைவர் வி கே விஜயகுமார் இன்னும் அடுத்த சில மாதங்களுக்கு இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பெரிய சவாலாக தான் இருக்கும் என கூறுகிறார்.
டிசிஎஸ் நிறுவன பங்கு மதிப்பு இன்று ஒரே நாளில் சுமார் ஆறு சதவீதம் சரிவடைந்து 2749 ரூபாயாக தன்னுடைய 52 வார கால குறைந்தபட்ச மதிப்பை எட்டி இருக்கிறது. அடுத்ததாக இந்தியாவின் மற்றொரு முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையும் இன்று 5.7 சதவீதம் சரிவடைந்து 1387 ரூபாயாக வர்த்தகமாகிறது. டெக் மகேந்திரா நிறுவனத்தின் பங்கு மதிப்பும் இன்று ஐந்து சதவீதத்திற்கு மேல் சரிவடைந்து 1549 ரூபாயாக இருக்கிறது.கோ ஃபோர்ஜ் நிறுவன பங்கு மதிப்பு 1421 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகிறது. இன்றைய நாளில் அதிகமாக இழப்பை சந்தித்த பங்கு இது.
டிசிஎஸ் பங்கு மதிப்பு 5%க்கு மேல் சரிந்ததால் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 10 லட்சம் ரூபாய்க்கு கீழ் சென்று 9.9 லட்சம் கோடி ரூபாயாக குறைந்தது. டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக 10 லட்சம் கோடி ரூபாய் என்ற மதிப்பிற்கு கீழ் சென்றிருக்கிறது. இதனால் அதிக சந்தை மூலதனம் கொண்ட நிறுவனங்களின் பட்டியலில் நான்காவது இடத்திலிருந்து டிசிஎஸ் தற்போது ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.ஐடி குறியீடுகளின் வீழ்ச்சி பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு பெரிய அளவிலான நஷ்டத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறது பல லட்சம் கோடிகளை இழந்து முதலீட்டாளர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications