ஏறிய வேகத்தில் இறங்கிய சென்செக்ஸ், நிஃப்டி.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!!

இந்திய பங்குச் சந்தை ஜூலை 10, வியாழக்கிழமை அன்று உயர்வுடன் தொடங்கியது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) பங்குகள் தான் இன்று அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது, காரணம் இந்நிறுவனம் 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட உள்ளது. இன்று காலை வர்த்தகத்தில் டிசிஎஸ் பங்குகள் சுமார் 0.17 சதவீதம் உயர்ந்து 3389 ரூபாயாக உள்ளது.

இன்று காலை வர்த்தக துவக்கத்தில் நிஃப்டி 50 குறியீடு, 35 புள்ளிகள் உயர்ந்து 25,511 புள்ளிகளில் தொடங்கியது. இதேபோல் பிஎஸ்இ சென்செக்ஸ் சுமார் 122.12 புள்ளிகள் உயர்ந்து 83,658 புள்ளிகளை எட்டியது. நிஃப்டி 500, நிஃப்டி மிட்கேப் 50, நிஃப்டி மிட்கேப் 100, நிஃப்டி ஸ்மால்கேப் 50 மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் 250 உள்ளிட்ட பெரும்பாலான குறியீடுகள் இன்று காலை உயர்வுடன் வர்த்தகம் செய்யப்பட்டன.

ஏறிய வேகத்தில் இறங்கிய சென்செக்ஸ், நிஃப்டி.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!!

ஆனால் இது அனைத்தும் சில நிமிடங்களே நிலைத்தது, 9.30 மணி முதல் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு சரிய துவங்கியுள்ளது. 10.30 அளவில் பார்க்கும் போது சென்செக்ஸ் குறியீடு 156.84 புள்ளிகள் சரிந்து 83,385.77 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இதேபோல் நிஃப்டி குறியீடு 57.60 புள்ளிகள் சரிந்து 25,420 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

ஜூலை 10ஆம் தேதி காலை வர்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டியவர்கள் பட்டியலில் டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ், பவர் கிரிட், அதானி எண்டர்பிரைசஸ், ஆக்சிஸ் வங்கி, அதானி போர்ட்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, ஹிண்டால்கோ மற்றும் ஓஎன்ஜிசி ஆகியவை உள்ளது. இதேபோல் விப்ரோ, இன்போசிஸ், அப்பல்லோ மருத்துவமனை, சிப்லா, பார்தி ஏர்டெல், டிசிஎஸ், எச்டிஎஃப்சி மற்றும் பிஇஎல் போன்ற பங்குகள் இழப்பை சந்தித்த நிறுவனங்கள் பட்டியலில் உள்ளது.

டிசிஎஸ்-ன் காலாண்டு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட இருப்பதால், இன்றைய வர்த்தகத்தில் ஐடி சேவை துறை பங்குகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் மூலம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை வெளியிடும் சீசன் துவங்க உள்ளது. இந்த மாதம் அடுத்தடுத்து பல முக்கியமான நிறுவனங்கள் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளதால், இந்த மாதம் முழுக்க பங்குச்சந்தை முதலீட்டில் தடுமாற்றம் ஏற்படலாம்.

உலகளவிய வர்த்தகத்தை பார்க்கும் போது S&P 500 குறியீடு, 37.74 புள்ளிகள் அல்லது 0.61% உயர்ந்துள்ளது. இதேபோல் டவ் ஜோன்ஸ் இண்டஸ்ட்ரியல் ஆவரேஜ் குறியீடு 217.54 புள்ளிகள் அல்லது 0.49% உயர்ந்தது. மேலும் நாஸ்டாக் காம்போசிட் 192.88 புள்ளிகள் அல்லது 0.94% கணிசமாக உயர்ந்தது.

இன்றைய வர்த்தகத்தில் ஆசிய சந்தையை பார்க்கும் போது ஹாங் செங் குறியீடு 17.83 புள்ளிகள் அல்லது 0.07% உயர்ந்தது. KOSPI காம்போசிட் குறியீடு 28.82 புள்ளிகள் அல்லது 0.92% உயர்ந்தது.

ஜப்பானின் நிக்கி 225 குறியீடு 253.87 புள்ளிகள் அல்லது -0.64% சரிந்தது. அதே நேரத்தில், ஆஸ்திரேலியாவின் S&P/ASX200 ஏறக்குறைய 52.20 புள்ளிகள் அல்லது சுமார் 0.61% உயர்ந்தது.

மோதிலால் ஓஸ்வால் நிதி சேவைகள் நிறுவனத்தின் ஆராய்ச்சித் தலைவர் சித்தார்த்தா கேம்கா இன்றைய பங்குச்சந்தை குறித்து கூறுகையில், இந்திய பங்குச் சந்தையில், நிஃப்டி பார்மா குறியீடு ஜூலை 9, 2025 அன்று உயர்வுடன் முடிந்த நிலையில், இது அமெரிக்காவின் மருந்து இறக்குமதிகளுக்கு 200% வரி விதிக்கும் திட்டத்தை 12-18 மாதங்களுக்கு ஒத்திவைத்ததால் முதலீட்டாளர்களின் அச்சம் தணிந்தது தான் இதில் பிரதிபலித்துள்ளது. இதே நேரத்தில், ஐடி துறை பங்குகளில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தின் 2026ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு நிதி முடிவுகள் ஜூலை 10, 2025 வியாழக்கிழமை அறிவிக்கப்படவுள்ளதால், முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. டிசிஎஸ் நிறுவனம் நிலையான நாணய அடிப்படையில் 0.5% காலாண்டு வருவாய் சரிவைப் பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் EBIT லாப மார்ஜின் அளவுகள் இந்நிறுவனத்தின் ஊழியர்கள் மீதான முதலீடுகள், குறைந்த பயன்பாடு மற்றும் செயல்பாட்டு லாபம் ஆகியவற்றால் பாதிக்கப்படலாம்," என்று தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+