இந்திய ரூபாயின் மதிப்பானது அடுத்த ஒரு மாதத்திற்கு ஏற்ற இறக்கத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவினை எட்டியுள்ளது.
தொடர்ந்து மத்திய வங்கியானது ஆதரவளித்து வரும் நிலையில், ரூபாயின் மதிப்பானது ஒரு ரேஞ்சுக்குள்ளேயே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் ரூபாயின் மதிப்பானது 9 பைசா சரிவினைக் கண்டு, 82.82 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது கடந்த அமர்வில் 82.80 ரூபாயாக இருந்தது.
சரிவில் ரூபாய்
இது இன்று தொடக்கத்தில் 82.68 ரூபாயாக தொடங்கிய நிலையில், அதிகபட்சமாக 82.62 ரூபாயாக அதிகரித்தது. எனினும் 82.80 ரூபாயாக சரிவினையும் கண்டது.
சர்வதேச சந்தையானது பெரியளவில் மாற்றமின்றி அழுத்தத்தில் காணப்பட்ட நிலையில், இந்திய பங்கு சந்தையிலும் அதன் தாக்கம் இருந்தது. இதற்கிடையில் தான் ரூபாயின் மதிப்பும் சரிவினைக் கண்டுள்ளது.
டாலரின் மதிப்பு
ஆறு கரன்சிகளுக்கு எதிரான டாலரின் மதிப்பானது 103.98 ஆக இருந்தது. இது கச்சா எண்னெய் விலையானது 0.49% சரிவினைக் கண்டு, 83.66 டாலராக குறைந்துள்ளது. இந்த நிலையில் ரூபாயின் மதிப்பானது சரிவினைக் கண்டுள்ளது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையானது அழுத்தத்தில் காணப்படும் நிலையில், 103.80 - 104.10 என்ற லெவலில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது 82.65 - 83 ரூபாய் என்பது முக்கிய சப்போர்ட் லெவலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சென்செக்ஸ் 18.82 புள்ளிகள் அல்லது 0.03% சரிவினைக் கண்டு, 60,672.72 ஆக முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 17.90 புள்ளிகள் அல்லது 0.1% சரிவினைக் கண்டு, 17,826.70 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது.
அன்னிய முதலீடுகள்
இதே அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) நிகர விற்பனையாளர்களாக உள்ளனர். திங்கட்கிழமையன்று 158.95 கோடி ரூபாய் நிதியானது வெளியானது. ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையும் நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகின்றது. இதுவும் நாளுக்கு நாள் கரன்சி மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம்
பெடரல் ரிசர்வ் வங்கி தலைவர் ஜெரோம் பவல் வரவிருக்கும் கூட்டத்தில் என்ன சொல்லப்போகிறாரோ என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், கடந்த 10 அமர்வுகளில் 82.34 - 82.90 ரூபாய்க்குள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது இன்னும் ஒரு மாதத்திற்கு அதிக ஏற்ற இறக்கம் என்பது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications