ரூபாயின் மதிப்பு தொடர் சரிவு.. இனி என்னவாகலாம்.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது மீண்டும் சரிவினைக் கண்டுள்ளது.

கச்சா எண்ணெய் தேவையானது உலகம் முழுக்க அதிகரித்து வரும் நிலையில், இது மேற்கொண்டு பணவீக்கத்தினை தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் ரூபாயின் மதிப்பானது டாலருக்கு எதிராக 81.79 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது கடந்த அமர்வில் 81.3175 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது கடந்த அக்டோபர் மாதத்தில் ரூபாயானது மோசமான சரிவினைக் கண்டுள்ளது. இது இனியும் தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

இந்தியா, சீனாவுக்கு செக் வைக்க திட்டமிடும் ஜி7 நாடுகள்.. இதில் இப்படி ஒரு பிரச்சனை இருக்கா? இந்தியா, சீனாவுக்கு செக் வைக்க திட்டமிடும் ஜி7 நாடுகள்.. இதில் இப்படி ஒரு பிரச்சனை இருக்கா?

அதிகபட்ச வீழ்ச்சி

அதிகபட்ச வீழ்ச்சி

ரூபாயின் மதிப்பானது இன்று காலையில் இருந்து நேர் மறையாகக் காணப்பட்டது. எனினும் முடிவில் வீழ்ச்சி கண்டும் காணப்பட்டது. ஆசிய நாணயங்களில் இது மிகப்பெரிய வீழ்ச்சியினை கண்டுள்ளது. இது இன்று அதிகபட்சமாக 81.8225 ரூபாயாக சரிவினைக் கண்டது.

பெரும் ஆச்சரியம்

பெரும் ஆச்சரியம்

ரூபாயின் மதிப்பு மட்டுமே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆசிய நாணயங்கள் ரூபாயின் மதிப்புடன் ஒத்து போகாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இன்று இது முற்றிலும் புறம்பானது ஒரு வெளி நாட்டு வங்கியின் ஸ்பாட் டிரேடர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

யுவான் மதிப்பு ஏற்றம்

யுவான் மதிப்பு ஏற்றம்

ரூபாயின் மதிப்பானது இன்று வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், இது வரவிருக்கும் நாட்களில், இன்னும் சரிவினைக் காணலாம். இதே காலகட்டத்தில் யுவான் மதிப்பு 1.4% வீழ்ச்சி கண்டுள்ளது. சீனாவில் கொரோனாவின் தாக்கம் மத்தியில், கடுமையான தாக்கம் இருந்து வருகின்றது. இதற்கிடையில் பற்பல சலசலப்புகளுக்கு மத்தியில் லாக்டவுனில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக யுவான் மதிப்பு ஏற்றம் கண்டுள்ளது.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

இதே டாலரின் மதிப்பானது 104.50 என்ற லெவலில் காணப்படுகின்றது. இதற்கிடையில் ரூபாயின் மதிப்பும் பெரும் வீழ்ச்சியினை கண்டுள்ளது. இது மேற்கொண்டு சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு இழப்பினை காண வழிவகுக்கலாம்.

வட்டி அதிகரித்தால்

வட்டி அதிகரித்தால்

மொத்தத்தில் மீடியம் டெர்மில் ரூபாயின் மதிப்பானது சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் வரவிருக்கும் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் என்பது அதிகரிக்கலாம் என்ற நிலையில், அது மேற்கொண்டு ரூபாயின் மதிப்புக்கு சாதகமாக அமையலாம்.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

இது ஒரு புறம் எனில் ரஷ்யாவின் எண்ணெய்க்கு உச்ச வரம்பினை மேற்கத்திய நாடுகள் நிர்ணயம் செய்துள்ளன. இது அமல்படுத்தப்பட்டால் இது மேற்கொண்டு கச்சா எண்ணெய் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது ரூபாயின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

அன்னிய முதலீடுகள்

அன்னிய முதலீடுகள்

தொடர்ந்து இந்திய சந்தையில் அன்னிய முதலீடுகள் ஆனது அதிகரித்து வரும் நிலையில், டாலரின் மதிப்பு வலுவடைய தொடங்கினால் அது வெளியேறலாம். இது இந்திய சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது மேற்கொண்டு ரூபாயின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

 பணவீக்கம்

பணவீக்கம்

தொடர்ந்து சர்வதேச அளவில் பணவீக்கம் என்பது அதிகரித்து வரும் நிலையில், இது மேற்கொண்டு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது தொடர்ந்து மத்திய வங்கியினை வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம். இது டாலரின் மதிப்பினை ஊக்கப்படுத்தலாம். அதேசமயம் இந்தியாவில் தாக்கம் இருக்கலாம்.

மொத்தத்தில் வரவிருக்கும் நாட்களில் ரூபாயின் மதிப்பானது 81 - 82 என்ற லெவலில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

indian rupee falls most in over one month

The value of the rupee has seen a positive trend since this morning. However, a drop was observed at the end.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X