அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் வியாழக்கிழமை அன்று புதிய சரிவை எட்டியது. இது ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான இந்தியா மீது அமெரிக்க வரிகள் ஏற்படுத்தியுள்ள அழுத்தத்தை பிரதிபலிக்கிறது.
இந்த ஆண்டு இதுவரை, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய கடன் மற்றும் பங்குச் சந்தைகளில் இருந்து நிகர $11.7 பில்லியனை திரும்பப் பெற்றுள்ளனர். இதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 88.44 ரூபாயாக குறைந்துள்ளது, இது கடந்த வெள்ளியன்று பதிவு செய்யப்பட்ட 88.36 என்ற முந்தைய குறைந்தபட்ச அளவை விட அதிகம்.

அமெரிக்காவின் அதிகப்படியான வரிகள் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் வர்த்தக வாய்ப்புகளைப் பாதித்து, ரூபாயின் எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளன. இந்த தாக்கத்தைக் கட்டுப்படுத்த, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நுகர்வினை உயர்த்த ஜிஎஸ்டி வரி திருத்தத்தை அறிவித்துள்ளார். இரு நாடுகளும் வர்த்தக தடைகளை சரிசெய்ய தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இந்திய பொருட்களுக்கான 50% வரி விதிப்பால் ஏற்றுமதியாளர்கள் ஆர்டர்களில் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்கின்றனர், அதே நேரத்தில் இறக்குமதியாளர்கள் அதிக அளவில் ஹெட்ஜிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், இது நாணய சந்தையில் தேவை-விநியோக சமநிலையை சீர்குலைக்கிறது.
இதற்கிடையே ரிசர்வ் வங்கி ரூபாயின் வீழ்ச்சியின் வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. சந்தை பங்கேற்பாளர்கள், மத்திய வங்கி டாலர்களை விற்று, ஏற்ற இறக்கங்களை சீர்செய்து, பெரிய மாற்றங்களைத் தடுப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்று கூறுகின்றனர். இந்த தலையீடுகள் எந்த ஒரு குறிப்பிட்ட அளவையும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டவை அல்ல, ஆனால் வீழ்ச்சியை "கட்டுப்படுத்தப்பட்டதாக" வைத்து, நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களிடையே பதட்டத்தைத் தடுக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளன என்று வங்கியாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் அடுத்த வாரம் வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்புகளால் பெரும்பாலான பிராந்திய நாணயங்கள் ஆதரவைப் பெற்றிருக்கும் நிலையில், ரூபாயின் பலவீனம் வேறுபடுகிறது. IFA குளோபல் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO அபிஷேக் கோயங்கா, அமெரிக்க வரிகள் காரணமாக ரூபாயின் குறுகிய கால பலவீனம் தொடர வாய்ப்புள்ளது என்று கூறினார்.அவர் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிக ஹெட்ஜிங் செய்யாமல் இருக்க, வணிக வாய்ப்புகளை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார்.
இப்படி அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைவது ஏற்றுமதி,இறக்குமதி தொழிலில் ஈடுபட்டுள்ள துறைகளுக்கு தான் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக டாலரை பயன்படுத்தி பொருட்களை வாங்க வேண்டிய நிலையில் இருக்கும் நிறுவனங்கள் அதிக பாதிப்பை சந்திக்க உள்ளன.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications