மும்பை: தற்போது உலகமே உற்று நோக்கிக் கொண்டிருப்பது இந்திய தேர்தல் முடிவுகள் குறித்து தான். இன்னும் ஒரு நாளில் அடுத்ததாக இந்தியாவை ஆளப்போவது யார் என்பது தெரியவர இருக்கிறது.
இது நமது பங்குச்சந்தையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதை மறுப்பதற்கு இல்லை. இதனிடையே தேர்தல் முடிவுகளால் பங்குச் சந்தையில் என்ன தாக்கம் ஏற்படும் என்பது குறித்து கார்னேலியன் சொத்து மேலாண்மை நிறுவனத்தின் நிறுவனர் விகாஷ் கேமானி எக்னாமிக் டைம்ஸ்க்கு அளித்துள்ள பேட்டியில் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.

கடந்த சில வாரங்களாகவே தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்துக்கள் காரணமாக நமது இந்திய பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் மாறி மாறி காணப்பட்டு வருகின்றன. மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தேர்தல் முடிவும் முடிவு வெளிவரும் நாளும் நெருங்கி விட்டது.
இந்த நிலையில் தேர்தல் நாளுக்குப் பிறகு ஒன்று இரண்டு நாட்களிலேயே இந்திய பங்குச் சந்தை இயல்பு நிலைக்கு திரும்பவிடும் என விகாஷ் கேமானி கணித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகும் அந்த நாளிலும் அதற்கு அடுத்து ஒன்று இரண்டு நாட்களிலும் அதன் தாக்கம் பங்குச்சந்தையில் எதிரொலிக்கும். இது ஒரு குறுகிய காலத்திற்கான தாக்கமாக மட்டுமே இருக்கும்.
நீண்ட காலத்திற்கு இதனை நாம் எதிர்பார்க்க முடியாது எனக் கூறியுள்ளார். இரண்டு நாட்களிலேயே இந்திய பங்குச்சந்தை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியே மீண்டும் ஆட்சி அமைத்து விட்டது, ஆனால் எதிர்பார்த்த எண்ணிக்கையிலான வெற்றியைப் பெறவில்லை என்ற போது பங்குச்சந்தையில் எந்த மாற்றத்தையும் நாம் எதிர்பார்க்க தேவையில்லை என கூறியுள்ளார் .
உணர்வுபூர்வமான எதிர்வினைகள் பங்குச்சந்தையில் இருக்கக்கூடும் ஆனால் அது குறுகிய காலத்திற்கு தான் இருக்குமே தவிர நீண்ட காலத்திற்காக இருக்காது என தெரிவித்துள்ளார்.
பாரதி ஜனதா பெரும்பான்மை பெறாமல் கூட்டணி உடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் பட்சத்தில் முதலீட்டாளர்கள் சில தயக்கங்களை வெளிப்படுத்த கூடும். ஆனால் எப்படி இருந்தாலும் இது பங்குச்சந்தையில் பெரிய மாற்றத்தை விளைவிக்காது என்றார்.
பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வராது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தான் ஆட்சி அமைக்க போகிறது என்கிற சூழல் ஏற்படும்போது பங்குச்சந்தையில் மிகப்பெரிய மாற்றங்கள் உண்டாகும். ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவாக தான் இருக்கிறது என்பது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் மூலம் தெரிய வருவதாக அவர் கூறியுள்ளார்.
அரசு துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் உயரும் என்றும் அவர் சுட்டிக் காட்டி உள்ளார். தேர்தல் முடிவுகள் எவ்வாறாக இருந்தாலும் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் பல வெளிநாட்டு நிறுவனங்களும் இந்திய பங்குச் சந்தையில் வந்து முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் என உறுதியாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இந்திய பங்குச் சந்தை மதிப்பு உயரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சில நிறுவனங்களின் பங்குகள் திருத்தத்திற்கு உள்ளாக கூடும் என்ற எச்சரிக்கையும் அவர் முன் வைத்துள்ளார்.
Story Written by: Devika
More From GoodReturns

தவெக தலைவர் விஜய்-இன் பிரமாண பத்திரத்துல இந்த ரூ.100 கோடி விஷயத்த கவனிச்சீங்களா மக்களே..!!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: விறுவிறுப்பாக நடக்கும் வாக்குபதிவு!! வாக்காளர்களை வரவேற்கும் ரோபோ!!

ஸ்டாலின் Vs ஈபிஎஸ் Vs விஜய் Vs சீமான்: பெண்களுக்காக இவர்கள் முன் வைக்கும் வாக்குறுதிகள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!



Click it and Unblock the Notifications