சில நாட்களுக்கு முன்பு தான் இந்திய பங்குச் சந்தைகளில் ஒன்றான நிஃப்டி இண்டெக்ஸ் 10 சதவிகிதம் சரிந்ததால் இந்திய பங்குச் சந்தைகள் சுமார் 45 நிமிடங்கள் வர்த்தகம் நிறுத்தப்பட்டது. அதே போல் இன்றும் இந்திய பங்குச் சந்தைகள் நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த முறை சென்செக்ஸ் இண்டெக்ஸால் இந்திய பங்குச் சந்தைகளின் வர்த்தகம் நிறுத்தப்பட்டு இருக்கிறது.
காரணம் இன்று காலை சென்செக்ஸ் வர்த்தகமாகத் தொடங்கியதில் இருந்தே, ஒரே சரிவு தான். கடந்த வெள்ளிக்கிழமை மாலை சென்செக்ஸ் 29,915 புள்ளிகளில் நிறைவடைந்தது. ஆனால் இன்று காலை வர்த்தகமாகத் தொடங்கி ஒரு மணி நேரத்துக்குள்ளேயே சென்செக்ஸ் சுமாராக 2991 புள்ளிகள் சரிந்து 26,924 புள்ளிகளைத் தொட்டு இருக்கிறது. அதாவது சுமார் 10 சதவிகிதம் சென்செக்ஸ் சரிந்ததால் இன்றைக்கான பங்குச் சந்தை வர்த்தகம் 45 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
நிஃப்டி நிலவரம்
நிஃப்டி கடந்த வெள்ளிக்கிழமை மாலை 8,745 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 7,945 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 7,892 என்கிற குறைந்தபட்ச புள்ளிகளைத் தொட்டது. 842 புள்ளிகள் சரிவில் நிஃப்டி வர்த்தகம் நிறுத்தப்பட்டு இருக்கிறது.
துறைகள்
நிஃப்டியின் துறை சார் இண்டெக்ஸ்களில் தனியார் வங்கி, வங்கி, நிதி சேவைகள், ரியாலிட்டி, ஆட்டோமொபைல் போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் மரண அடி வாங்கிக் இருக்கின்றன. இவைகள் எல்லாமே சுமாராக 10 சதவிகிதத்துக்கு மேல் சரிந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மிகக் குறைந்த அளவில் அடி வாங்கி இருக்கும் இண்டெக்ஸ் என்றால் அது மீடியா மற்றும் ஐடி தான். இந்த 2 துறைகளும் 6.6 & 6.8 சதவிகித சரிந்து இருக்கின்றன.
50 பங்குகள்
நிஃப்டி இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 50 அங்குகளில் சிப்லா, விர்ப்ப், இந்தியன் ஆயில் போன்ற 3 நிறுவனங்கள் மட்டும் தான் 3 சதவிகித விலை சரிவுக்குள் இருக்கின்றன. மீதமுள்ள 47 பங்குகளும், 3 - 19 சதவிகித விலை சரிந்து இருக்கின்றன. 50-க்கு 50 பங்குகளும் விலை இறக்கத்தில் தான் வர்த்தகமாகி இருக்கின்றன. ஏறத்தாழ சென்செக்ஸிலும் இதே நிலை தான்.
உலக சந்தைகள்
மார்ச் 20, 2020 அன்று அமெரிக்க சந்தையான நாஸ்ஆக் 3.7 % சரிந்து வர்த்தகமானது. ஆனால் ஐரோப்பிய சந்தைகள் எல்லாம் 0.76 % - 5.01 % வரை ஏற்றத்தில் வர்த்தகமாயின. மார்ச் 23, 2020 இன்று, ஆசிய சந்தைகளில் ஜப்பானின் நிக்கி மட்டுமே 2.64 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. மற்ற எல்லா சந்தைகளும் 1.60 % - 12.10 % வரை சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications