ரத்தகளறியான பங்குச்சந்தை.. தலைகீழாக புரண்ட ஆட்டோமொபைல் சந்தை.. இந்த நேரத்திலா இப்படி நடக்கணும்!

இந்திய பங்குச்சந்தை இன்று பெரும் சரிவுடன் துவங்கி முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, 3வது நாளாக தொடரும் அமெரிக்கா - ஈரான் தாக்குதல், தடாலடியாக உயரும் கச்சா எண்ணெய் விலை, ஜப்பான் பத்திர முதலீட்டில் ஏற்பட்ட லாப உயர்வு, அமெரிக்க பெடரல் ரிசர்வ்-ன் வட்டி விகித உயர்வு கணிப்பு ஆகிய அனைத்தும் இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டை தலா 1 சதவீதம் வரையில் சரிவுக்கு தள்ளியுள்ளது.

இன்றைய சரிவின் மூலம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பை சந்தித்தது. இதில் முக்கியமாக துறை வாரியாக பார்க்கும் போது ஆட்டோமொபைல் சந்தை யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிகப்படியாக 2.5 சதவீதம் வரையில் சரிந்து இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளது.

ரத்தகளறியான பங்குச்சந்தை.. தலைகீழாக புரண்ட ஆட்டோமொபைல் சந்தை.. இந்த நேரத்திலா இப்படி நடக்கணும்!

இந்திய வாகன விற்பனை தொடர்பாக வெளியான தரவுகள் படி இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியாவில் பயணிகள் வாகன விற்பனை யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு சுமார் 35 சதவீதம் அதிகரித்து 4.5 லட்சம் வாகனங்கள் விற்ககப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் முக்கியமாக மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா போன்ற முன்னணி நிறுவனங்களின் அதிரடியான வர்த்தக வளர்ச்சி காரணமாக இந்த தடாலடி உயர்வு பதிவாகி இருப்பதாக தெரிகிறது.

இந்த ஆண்டு வாகன விற்பனை உயர்வுக்கு ஜிஎஸ்டி வரியில் அறிவிக்கப்பட்ட குறைப்பு, வருவாய் வரி லாப அளவீடுகள், ரெப்போ விகிதம் ஆகியவை பலன் அளித்தது. தற்போது பண்டிகை காலக்திற்குள் நுழையும் வேளையில் இந்திய ஆட்டோமொபைல் துறை மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் நிஃப்டி ஆட்டோ குறியீடு இன்று 2.5 சதவீதம் வரையில் குறைந்து Bearish நிலைக்குள் நுழைந்து அதிர்ச்சி கொடுத்தது. இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக ஹீரோ மோட்டோ கார்ப் 5.12 சதவீதமும், எய்ச்சர் மோட்டார்ஸ் 3.96 சதவீதமும், பஜாஜ் ஆட்டோ 3.82 சதவீதமும், சோனா BLW பிரிசிஷன் 3.06 சதவீதமும் சரிந்துள்ளது.

நாட்டின் முன்னணி கார் உற்பத்தியாளர்களாக மாருதி சுசூகி 1.39 சதவீதமும், மஹிந்திரா 1.82 சதவீகமும், டாடா மோட்டார்ஸ் PV 0.84 சதவீதமும், ஹூண்டாய் 2.18 சதவீதமும் சரிந்துள்ளது.

இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் அமெரிக்கா, சீனாவிற்கு பின்பு உலகிலேயே வருடத்திற்கு 50 லட்சம் கார் விற்பனையை அடையும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்வு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியும் ஆகஸ்ட் மாதம் பதிவான 4.5 லட்சம் கார் விற்பனை வியக்கை வைக்கும் நம்பராக இருக்கும் வேளையில் பங்குச்சந்தையில் பதிவான சரிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புதன்கிழமை காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 750 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்து 76,135.72 புள்ளிகளை எட்டியுள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் 76,944.28 புள்ளிகளில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் நிஃப்டி குறியீடு 280 புள்ளிகள் சரிந்து 23,786.80 புள்ளிகளை அடைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+