கதறி கதறி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போரின் கோரமுகம் இந்தியாவில் எதிரொலி..!!

மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகியுள்ள போர் பதற்றம் இந்திய பங்குச்சந்தையில் கடந்த 16 நாட்களாக புரட்டிப்போட்டு வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் படைகளின் போர் தாக்குதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, முதலீட்டாளர்கள் சந்தையில் மொத்தமாக ரிஸ்க் எடுப்பதை குறைத்துள்ளனர். இதற்கு ஏற்றார் போல் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சப்ளை பாதிக்கப்பட்டு உள்ளதால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும் அச்சமும், பணவீக்கம் உயரும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.

இவை இரண்டுமே இந்திய முதலீட்டு சந்தைக்கு பிரச்சனை தான், இத்தகைய சூழ்நிலையில் இந்திய சந்தையில் பங்குகளை விற்று வெளியேறும் முதலீட்டாளர்களுக்கு டாலர் சந்தையும், கச்சா எண்ணெய் சந்தையும் சாதகமாக இருக்கும் காரணத்தால் இந்திய பங்குச்சந்தையில் மோசமான சரிவு பதிவாகி வருகிறது.

இதன் விளைவாக கடந்த 15 நாட்களில் சுமார் 400க்கும் மேற்பட்ட பங்குகள் இரட்டை இலக்க வீழ்ச்சியை பதிவு செய்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களை கதற கதற அழவைத்துள்ளது.

கதறி கதறி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போரின் கோரமுகம் இந்தியாவில் எதிரொலி..!!

கோவிட்-க்கு பிறகு மிகப்பெரிய சரிவு
2026 மார்ச் மாதத்தில் இந்திய பங்குச்சந்தை கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்து வருகிறது. முக்கிய குறியீட்டான Nifty 50 மார்ச் மாதத்தில் மட்டும் சுமார் 8% வரை சரிந்துள்ளது. கடந்த 10 வருடத்தில் இது இரண்டாவது பெரிய மாத சரிவாக கருதப்படுகிறது. இதற்கு முன்பு 2020 மார்ச் மாதத்தில், COVID-19 நெருக்கடியின் உச்சகட்டத்தில் நிஃப்டி சுமார் 23% வரை வீழ்ச்சி கண்டது.

இதேபோல் Sensex குறியீடு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 4,000 புள்ளிகள் வரை சரிந்துள்ளது. அதே நேரத்தில் நிஃப்டி கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் சுமார் 5% வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

Also Read

மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள்
மார்ச் மாதத்தில் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நிஃப்டி மிட்கேப் குறியீட்டு எண் ஒரே நாளில் 4.59% வரை சரிந்துள்ளது. நிஃப்டி ஸ்மால்கேப் இண்டெக்ஸ் சுமார் 3.66% வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

சில நிறுவன பங்குகள் மிகவும் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. Infobeans Technologies பங்கு 40%க்கும் மேல் சரிந்துள்ளது. மேலும் Aqylon Nexus 30%க்கும் மேல் வீழ்ச்சி கண்டுள்ளது. பொறியியல் மற்றும் கட்டுமான துறையில் செயல்படும் SEPC Limited சுமார் 29% சரிந்துள்ளது.

மேலும் ரெயின் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 23% முதல் 24% வரை குறைந்துள்ளன. தொழில்நுட்ப சேவை நிறுவனங்களான கேஎஸ் ஸ்மார்ட் டெக்னாலஜிஸ் மற்றும் நெட்வொர்க் பீப்பிள் சர்வீசஸ் டெக்னாலஜிஸ் போன்றவை கூட 23% வரை சரிவை சந்தித்துள்ளன.

Recommended For You

பெரிய நிறுவனங்களுக்கும் பாதிப்பு
இந்த விற்பனை அழுத்தம் சிறிய நிறுவனங்களுக்கு மட்டுமே கட்டுப்படவில்லை. பல முக்கிய பெரிய நிறுவனங்களின் பங்குகளும் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. கட்டுமான துறையில் முன்னணி நிறுவனமான லார்சன் & டூப்ரோ, வாகன உற்பத்தி நிறுவனமான அசோக் லேலண்ட் மற்றும் ஐடிபிஐ வங்கி போன்ற நிறுவனங்களின் பங்குகள் 19% முதல் 22% வரை குறைந்துள்ளன.

இதேபோல் UltraTech Cement, Eicher Motors, Maruti Suzuki, Godrej Consumer Products, மற்றும் Bajaj Finance ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 14% முதல் 16% வரை குறைந்துள்ளன.

அதேபோல் எரிசக்தி மற்றும் உலோகத் துறைகளில் செயல்படும் Indian Oil Corporation, Bharat Petroleum, Tata Steel, மற்றும் GAIL போன்ற நிறுவனங்களும் 13% முதல் 17% வரை வீழ்ச்சி கண்டுள்ளன.

You May Also Like

வங்கி மற்றும் நிதி துறை
நிதி துறையும் இந்த சரிவில் இருந்து தப்பிக்கவில்லை. சிட்டி யூனியன் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், பேங்க் ஆஃப் இந்தியா, மற்றும் யூகோ வங்கி போன்ற வங்கிகளில் 14% முதல் 18% வரை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

NBFC துறையில் செயல்படும் Ugro Capital மற்றும் Fusion Finance போன்ற நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க அளவில் சரிந்துள்ளன.

மொத்தத்தில் இந்திய பங்குச்சந்தையில் தற்போது நடைபெறும் சரிவு ஒரே துறையில் மட்டுமே இல்லாமல் பெரும்பாலான துறைகளில் பரவலாக பாதித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் மேற்கு ஆசிய போர் சூழ்நிலை தொடர்ந்தால் உலகளாவிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய சந்தையில் இருக்கும் முதலீடுகளை வெளியேற்றுவார்கள்.

ஆனால் பங்குச்சந்தை நிபுணர்கள் இந்த சரிவை நீண்ட கால முதலீட்டுக்கான வாய்ப்பாக பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+