இந்திய பங்குச்சந்தைகள் ஒரே நாளில் பெரிய சரிவை கண்டதால் லட்சக்கணக்கான பணத்தை இழந்து முதலீட்டாளர்கள் கண்ணீரில் தவிக்கின்றனர். அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பான 25% அமலுக்கு வருவது பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது.
எவ்வளவு சரிவு: செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 910.88 புள்ளிகள் அதாவது 1.12% சரிந்து 80,725.03 ஆக நிலைபெற்றது. நிஃப்டி 274.20 புள்ளிகள் அதாவது 1.1% சரிந்து 24,693.55 ஆகக் குறைந்தது. சந்தையில், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல், டாக்டர். ரெட்டிஸ் லேப்ஸ் மற்றும் கோல் இந்தியா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் 3% வரை சரிந்தன.

என்ன காரணம்: அமெரிக்கா அரசு இந்திய இறக்குமதிகள் மீது ஆகஸ்ட் 27 முதல் கூடுதலாக 25% வரி விதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், இந்தியாவின் 86.5 பில்லியன் டாலர் ஏற்றுமதி பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரி விதிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதால் பங்குச்சந்தைகள் பெரும் சரிவை கண்டன.
டிரம்ப் வரி: மெஹ்தா இக்விட்டிஸ் லிமிடெட்டின் மூத்த துணைத் தலைவர் (ஆராய்ச்சி) பிரசாந்த் தாப்ஸே கூறுகையில், ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் டிரம்ப் நிர்வாகத்தின் 50% வரி விதிப்பு இந்தியச் சந்தைகளுக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும். இது இந்தியாவின் பெரும்பாலான ஏற்றுமதி சார்ந்த வணிகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.
உலகளாவிய சந்தை: உலகளாவிய சந்தைகளின் பலவீனமும் சரிவுக்குக் காரணமாகும். ஆசியச் சந்தைகளான ஜப்பானின் நிக்கேய் 225, தென் கொரியாவின் கோஸ்பி, ஹாங்காங்கின் ஹாங் செங் மற்றும் ஷாங்காயின் SSE அனைத்தும் சரிவுடன் வர்த்தகமாயின. அமெரிக்கச் சந்தைகளும் முந்தைய நாள் சரிவில் முடிவடைந்தன, இது இந்தியாவிலும் எதிரொலித்தது.
வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள்: வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் (FIIs) திங்கட்கிழமை அன்று ரூ. 2,466.24 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளன. இதனால் ஏற்பட்ட அழுத்தமும் சந்தையை ரத்தகளறியாக்கி விட்டது. இந்திய ரூபாய் மதிப்பு செவ்வாய்க்கிழமை காலை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக 22 பைசா சரிந்து ₹87.78 ஆக இருந்தது.
இனி வரும் நாட்களில் டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கை அதற்கு இந்தியாவின் எதிர்வினை ஆகியவற்றை பொறுத்து பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கத்தை காண முடியும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

HDFC பங்கினை வாங்க இது பொன்னான நேரமா? - பங்கு மதிப்பு சரிந்துள்ள நிலையில் நிபுணர்கள் டிப்ஸ்

மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் தரும் வேலையை விட்டு ரோட்டு கடை போட்ட டெக்கி..!! சாதித்தாரா? சறுக்கினாரா?

போர் பதற்றத்திலும் லாபம் தரும் பக்கா பிளான்! பங்குச்சந்தை வீழ்ச்சியில் நீங்கள் கவனிக்க வேண்டிய SIP!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications