இந்திய பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) பெரும் ஏற்றத்துடன் துவங்கினாலும் மதிய வர்த்தகத்தில் தடாலடியாக சரிந்து சிறிய அளவிலான உயர்வுடன் நிறைவு செய்தது. இந்த நிலையில் நாளைய வர்த்தகம் எப்படி இருக்கும் என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றம் குறைந்ததால், இன்று பங்குச்சந்தை பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்தும் நேற்றைய வர்த்தகத்தை ஒப்பிடுகையில் உயர்வுடனே முடிந்தது.

சென்செக்ஸ் இன்றைய வர்த்தகத்தில் 1,100 புள்ளிகள் உயர்ந்தாலும், வர்த்தகத்தின் முடிவில் வெறும் 158 புள்ளிகள் உயர்வுடன் 82,055 புள்ளிகளில் முடிவடைந்தது. நிஃப்டி 50 குறியீடு 72 புள்ளிகள் (0.29%) உயர்ந்து 25,044 புள்ளிகளில் முடிவடைந்தது. இந்த சரிவு முதலீட்டாளர்களுக்கு சந்தையின் நிச்சயமற்ற தன்மையை குறித்து கூடுதல் பயத்தை கொடுத்துள்ளது. இந்த நிலையில் நாளை வர்த்தகம் என்பது இன்றைய அமெரிக்க சந்தை வர்த்தகம் மற்றும் நாளை காலை ஆசிய சந்தையின் போக்கு அடிப்படையிலேயே அமையும்.
BSE: செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் இருக்கும் மொத்தம் 2,976 பங்குகளில், 1,966 பங்குகள் உயர்வுடன் முடிந்தது. இதேபோல் 917 பங்குகள் சரிந்தன, வெறும் 93 பங்குகள் மாற்றமின்றி இருந்தன. மேலும் இன்றைய வர்த்தகத்தில் சுமார் 44 பங்குகள் புதிய 52 வார உயரத்தை எட்டின, அதே சமயம் 31 பங்குகள் 52 வார குறைந்தபட்ச அளவை தொட்டன.
NSE: இதை தொடர்ந்து தேசிய பங்குச்சந்தையில் பார்க்கையில் நிஃப்டி வங்கி குறியீடு 403 புள்ளிகள் உயர்ந்து 56,462 புள்ளிகளில் முடிவடைந்தது. மிட்கேப் குறியீடு 246 புள்ளிகள் சரிந்து 45,818.41 புள்ளிகளில் முடிவடைந்தாலும், ஸ்மால் கேப் குறியீடு 374 புள்ளிகள் உயர்ந்து 53,053 புள்ளிகளை எட்டியது. இதன் மூலம் சிறு நிறுவனங்களில் முதலீட்டாளர் ஆர்வம் அதிகமாக இருப்பதை காட்டுகிறது.
டாப் பங்குகள்: நிஃப்டி 50 குறியீட்டில் அதானி போர்ட்ஸ் அண்ட் SEZ 2.89% உயர்வுடன் மிகப்பெரிய லாபம் பெற்றது. இதைத் தொடர்ந்து ஜியோ ஃபைனான்ஷியல் சர்வீசஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை நல்ல முன்னேற்றம் கண்டன.
மறுபுறம், ONGC பங்குகள் மிகப்பெரிய இழப்பை சந்தித்தன, இதைத் தொடர்ந்து பவர் கிரிட் கார்ப், இண்டஸ்இண்ட் வங்கி, ட்ரெண்ட், மற்றும் HCL டெக்னாலஜிஸ் ஆகியவை சரிவை எதிர்கொண்டன. இந்த சரிவு, எண்ணெய், மின்சாரம், மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் முதலீட்டாளர்களின் எச்சரிக்கையான அணுகுமுறையைக் காட்டுகிறது. இந்த துறை நாளைய வர்த்தகத்திலும் அதிகப்படியான கவனத்தை எதிர்பார்க்கப்படுகிறது.
துறை வாரியான ரியாக்ஷன்: இன்றைய வர்த்தகத்தில் விவசாயத் துறை பங்குகள் சந்தை மூலதனத்தில் 2.9% உயர்வுடன், செவ்வாய்க்கிழமை அமர்வில் மிகவும் லாபம் அடைந்த துறையாக இருந்தது. இதைத் தொடர்ந்து போக்குவரத்து, உள்கட்டமைப்பு (2.2% உயர்வு), மற்றும் காகிதத் துறை (1.7% உயர்வு) ஆகியவை முன்னேற்றம் கண்டன.
முக்கிய வர்த்தக சாம்ராஜ்ஜியங்கள்: பென்னர் குழுமத்தின் சந்தை மூலதனம் 4.6% உயர்ந்து முதலிடத்தைப் பிடித்தது, இதில் பென்னர் இண்டஸ்ட்ரீஸ், சேவன் டெக்னாலஜிஸ், மற்றும் கோல்கொண்டா அலுமினியம் எக்ஸ்ட்ரூஷன்ஸ் ஆகியவை 4.65% வரை லாபம் ஈட்டின.
இதை தொடர்ந்து ஓஸ்வால் குழுமம் 4% உயர்வுடனும், எஸ்ஸார் குழுமம் 3.12% உயர்வுடனும் பின்தொடர்ந்தன. ஆனால், ஜெய்ப்பூரியா குழுமத்தின் சந்தை மூலதனம் 4.25% சரிந்து, மிகப்பெரிய இழப்பைச் சந்தித்தது.
இஸ்ரேல்-ஈரான் பதற்றத்தின் தாக்கம்:
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றமே இன்றைய வர்த்தக தடுமாற்றத்திற்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, முதலீட்டாளர்களிடையே நம்பிக்கை திரும்பியது.
இந்த அறிவிப்பு, சர்வதேச எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களைக் குறைத்து, ஆனால் ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியதாக வந்த செய்திகள் பங்குச்சந்தையை மீண்டும் கடுமையாக பாதித்தது. இதன் மூலம் சென்செக்ஸ் அதன் உச்சத்தில் இருந்து 852 புள்ளிகள் சரிந்தது
நாளை வர்த்தகம்: இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தம் தொடர்ந்தால், எண்ணெய் விலை மேலும் குறையலாம், இது இந்தியாவின் பணவீக்க அழுத்தத்தை குறைக்கும். இதனால், விவசாயம், போக்குவரத்து, மற்றும் உள்கட்டமைப்பு துறைகள் முன்னேறலாம். இருப்பினும், ஈரான் ஸ்ட்ரெய்ட் ஆஃப் ஹோர்முஸை மூடினால், எண்ணெய் விலை உயர்ந்து சந்தையில் சரிவை ஏற்படுத்தலாம்.
அமெரிக்க பங்குசந்தையில் இன்று காலை வர்த்தகம் துவங்குபோது S&P 100,S&P 500,Nasdaq 100,Nasdaq,Small Cap 2000 ஆகிய முக்கிய குறியீடுகள் அனைத்தும் 1 சதவீதத்திற்கும் அதிகமான உயர்வை பதிவு செய்துள்ளது. இது நாளை ஆசிய சந்தைக்கு மிகவும் சாதகமாக இருக்கும் என தெரிகிறது.
இதன் மூலம் நாளை (ஜூன் 25), இந்திய பங்குச் சந்தை நிலையான முன்னேற்றத்துடன் தொடங்கலாம், குறிப்பாக வங்கி மற்றும் உள்கட்டமைப்பு பங்குகள் உயரலாம். ஆனால், எண்ணெய் விலை மற்றும் உலகளாவிய செய்திகளை முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
More From GoodReturns

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

சிலிண்டர் விலை: 3 மாதங்களில் இல்லாத விலை உயர்வு..!! எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பால் அதிர்ச்சி..!!

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!

Germany: கிளீன் எனர்ஜி எல்லாம் இனி வேலைக்கு ஆகாது.. பழையப்படி நிலக்கரிக்கு போக வேண்டியது தான்..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!



Click it and Unblock the Notifications