இந்திய பங்குச் சந்தை ஜூலை 11, வெள்ளிக்கிழமை வர்த்தகத்திலும் தொடர்ந்து சரிவைச் சந்தித்ததுள்ளது. நிஃப்டி 50, 99.8 புள்ளிகள் குறைந்து 25,255 புள்ளிகளில் தொடங்கியது, அதே நேரத்தில் சென்செக்ஸ் 368 புள்ளிகள் குறைந்து 82,821.8 புள்ளிகளில் தொடங்கியது. டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (TCS) பங்குகள் 2025-26 நிதியாண்டுக்கான ஜூன் காலாண்டு முடிவுகள் ஏமாற்றமளித்ததை அடுத்து டிசிஎஸ் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 2% சரிந்து, ஒட்டுமொத்த ஐடி சேவை துறை நிறுவனங்களையும் மந்த நிலைக்கு தள்ளியுள்ளது.
சென்செக்ஸ் குறியீடு 10.30 மணியளவில் 430 புள்ளிகள் வரையில் சரிந்து 82,766.01 புள்ளிகளை அடைந்துள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 120 புள்ளிகள் வரையில் சரிந்து 25,234.10 புள்ளிகளை எட்டியுள்ளது சந்தை முதலீட்டாளர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வியாழக்கிழமை முதல் இந்திய கார்ப்ரேட் நிறுவனங்கள் தங்களுடைய ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிடும் படலம் தொடங்கியதால், இந்தியாவில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக செயல்பட துவங்கினர் இருந்தனர். இந்த எச்சரிக்கையான மனநிலை சந்தையின் செயல்பாட்டில் அப்படியே பிரதிபலித்ததுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
நிஃப்டி ஸ்மால்கேப், மிட்கேப், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற குறியீடுகள் ஆரம்ப வர்த்தகத்திலேயே சிரிவில் துவங்கியுள்ளது. வெள்ளிக்கிழமை சந்தை பலவீனமாகத் தொடங்கும் என்பதை கிஃப்ட் நிஃப்டியும் காட்டியது. நிஃப்டி தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிஃப்டி மீடியா ஆகியவை வெள்ளிக்கிழமை மோசமாகச் செயல்பட்ட துறைகளில் முதன்மையானவையாக இருந்தன.
நிஃப்டி தகவல் தொழில்நுட்பம் 1.27% குறைந்து 37,890.75 புள்ளிகளாகவும், நிஃப்டி மீடியா 1.6% குறைந்து 1,705.45 புள்ளிகளாகவும் குறைந்தன. இந்த சரிவுகளுக்கு மத்தியில், நிஃப்டி மெட்டல், FMCG, பார்மா, பொதுத்துறை வங்கி, தனியார் வங்கி மற்றும் ஹெல்த்கேர் போன்ற குறியீடுகள் சிறிய அளவில் ஆதரவளித்தன.
வியாழக்கிழமை வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான நிஃப்டி 121 புள்ளிகள் மற்றும் சென்செக்ஸ் 346 புள்ளிகள் குறைந்தன. இந்த மோசமான செயல்பாட்டிற்குக் காரணம் உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மையும், இந்திய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியீடும் சீசன் தான்.
ஜூலை 11 ஆம் தேதி காலை வர்த்தகத்தில் நிஃப்டி 50 மற்றும் சென்செக்ஸில் அதிகம் லாபம் ஈட்டியவர்களில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், எஸ்பிஐ லைஃப், அதானி போர்ட்ஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், பவர் கிரிட், அதானி என்டர்பிரைசஸ், டாக்டர் ரெட்டிஸ் மற்றும் நெஸ்லே இந்தியா ஆகியவை இருந்தன. மாறாக, TCS, விப்ரோ, இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக் மற்றும் பிற தகவல் தொழில்நுட்பப் பங்குகள் வெள்ளிக்கிழமை அதிகப்படியான சரிவுடன் துவங்கியுள்ளது.
தகவல் தொழில்நுட்பப் பங்குகளைத் தவிர, அப்பல்லோ மருத்துவமனை, பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் ஜியோ ஃபைனான்ஸ் ஆகியவையும் இன்று அதிகம் நஷ்டமடைந்த நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்றன.
சர்வேதச சந்தை நிலை:
அமெரிக்க பங்குச் சந்தை வியாழக்கிழமை உயர்வுடன் முடிவடைந்தது, முதலீட்டாளர்கள் அடுத்த வாரம் வரவிருக்கும் கார்ப்பரேட் முடிவுகளின் எதிர்பார்ப்பு காரணமாக புதிய வரலாற்று உச்சத்தை எட்டியது. இதன் மூலம் S&P 500 17.20 புள்ளிகள் (0.27%) உயர்ந்தது, அதே நேரத்தில் டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 192.34 புள்ளிகள் (0.43%) உயர்ந்தது. நாஸ்டாக் காம்போசிட் 19.33 புள்ளிகள் (0.09%) சிறிய லாபத்தைப் பெற்றது.
ஆசியாவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெரும்பாலான நாடுகள் மீது அதிகபட்ச வரி விதிப்புகளை அறிவித்ததைத் தொடர்ந்து டாலர் வலுவடைந்ததால், பங்குச்சந்தையில் கலவையான போக்கு காணப்பட்டது.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?



Click it and Unblock the Notifications