மேற்கு ஆசியப் போரால் சரிவில் இருந்த இந்திய பங்குச்சந்தை இன்று சற்றே மீண்டுள்ளது. ஆசியச் சந்தைகள் மீண்டதால், இந்திய பங்குச்சந்தையின் பெஞ்ச்மார்க் குறியீடுகள் வியாழக்கிழமை 0.7% வரை அதிகரித்து வர்த்தகமாயின. இது மூன்று நாட்கள் தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
காலை 9:55 மணிக்கு, சென்செக்ஸ் 472.30 புள்ளிகள் (0.60%) உயர்ந்து 79,588.49 ஆகவும், நிஃப்டி 165.30 புள்ளிகள் (0.68%) அதிகரித்து 24,645.80 ஆகவும் இருந்தது. சந்தையில் 2,324 பங்குகள் ஏற்றம் கண்டன, 968 பங்குகள் சரிந்தன, 136 பங்குகள் மாற்றமின்றி தொடர்ந்தன. துவக்கத்தில் அனைத்து 16 முக்கியத் துறைகளும் லாபம் ஈட்டின. ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் குறியீடுகள் தலா ஒரு சதவீதம் வரை உயர்ந்தன.

மூன்று நாட்கள் தொடர் விற்பனைக்குப் பிறகு, 'மதிப்பு அடிப்படையிலான கொள்முதல்’ (Value Buying) சந்தையில் அதிகமாகக் காணப்பட்டது. ரியாலிட்டி, மெட்டல் மற்றும் ஆட்டோ துறைகளில் பங்குகள் குறைந்த விலையில் வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு நிபுணர் வி.கே.விஜயகுமார், நேற்றைய தினம் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டது; நிஃப்டி வெறும் 1.5% சரிந்த நிலையில், தென் கொரிய கோஸ்பி குறியீடு 12.1% வீழ்ச்சியடைந்தது. இந்த ஆண்டு சிறப்பாகச் செயல்பட்ட தென் கொரிய சந்தை போன்றவை, லாப நோக்கோடு ஏற்பட்ட விற்பனையால் பெரும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகின்றன என்று குறிப்பிட்டார்.
"எதிர்காலத்தில், செய்திகள் மற்றும் நிகழ்வுகளுக்குப் பதிலளிக்கும் அதிக ஏற்ற இறக்கம் சந்தையைத் தொடர்ந்து நிலையற்றதாகவே வைத்திருக்கும். இது முதலீட்டாளர்களுக்கு உயர்தரப் பங்குகளை மெதுவாகச் சேர்த்து, அதிகப் பொறுமையுடன் காத்திருக்க வாய்ப்புகளை வழங்கும் “ என விஜயகுமார் வலியுறுத்தினார்.
இரண்டாவதாக, சர்வதேச அளவில் சாதகமான அறிகுறிகள் சந்தைக்கு வலு சேர்த்தன. தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு ஒன்பது சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தது. ஹாங் செங் மற்றும் எஸ்எஸ்இ காம்போசிட் ஆகிய குறியீடுகளும் ஏற்றம் கண்டன. ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவரப் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருப்பதாக வெளியான தகவல், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எண்ணெய் சந்தையை நிலைப்படுத்தும் கருத்துகள் ஆகியவை முதலீட்டாளர் கவலையைத் தணித்தன.
மூன்றாவதாக, 'பய குறியீடு’ எனப்படும் இந்தியா விக்ஸ் (India Vix) கிட்டத்தட்ட 10% சரிந்து 19.04 ஆக குறைந்தது. இது சந்தையில் பதற்றம் தணிந்ததைக் குறிக்கிறது. இதற்கிடையே மூலதனச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் (SEBI) இருந்து BSE சென்செக்ஸ் நெக்ஸ்ட் 30 குறியீட்டிற்கான டெரிவேடிவ் ஒப்பந்தங்களைத் தொடங்க ஒப்புதல் அளித்தது. இதனால் பிஎஸ்இ குறியீடு 2% வரை உயர்ந்தது. இந்தக் குறியீடு BSE 100-ல் உள்ள அடுத்த பெரிய, அதிக பணப்புழக்கம் கொண்ட, டெரிவேடிவ் பிரிவில் உள்ள, சென்செக்ஸ் 30-ல் இடம்பெறாத நிறுவனங்களைக் குறிக்கிறது.
புதன்கிழமை சந்தைக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட ஒழுங்குமுறை அறிக்கையில், BSE மாதாந்திர குறியீடு ஆப்ஷன்கள் மற்றும் எதிர்கால ஒப்பந்தங்களை வழங்கும் என்று அறிவித்தது. ஒப்பந்தங்களின் காலாவதி தேதி, அந்தந்த காலாவதி காலத்தின் கடைசி வியாழக்கிழமையாக இருக்கும் என்றது. ஆனால், சென்செக்ஸ் நெக்ஸ்ட் 30 குறியீட்டிற்கான (F&O) ஒப்பந்தங்களைத் தொடங்கும் தேதி குறித்து BSE நிறுவனம் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
தற்போது, BSE நிறுவனம் பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் குறியீட்டிற்கான வாராந்திர மற்றும் மாதாந்திர டெரிவேடிவ் ஒப்பந்தங்களையும், சென்செக்ஸ் 50 மற்றும் பேங்க்எக்ஸ் (BANKEX) குறியீடுகளுக்கான மாதாந்திர காலாவதி ஒப்பந்தங்களையும் வழங்குகிறது. கடந்த ஆண்டு, தேசியப் பங்குச்சந்தை (NSE) செவ்வாய்க்கிழமை காலாவதி தேதியை எடுத்துக்கொண்டதால், BSE அனைத்து டெரிவேடிவ் ஒப்பந்தங்களின் காலாவதி தேதியை செவ்வாய்க்கிழமையிலிருந்து வியாழக்கிழமைக்கு மாற்றியது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!



Click it and Unblock the Notifications