அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதித்தது இந்திய பங்குச்சந்தைகளில் பயங்கரமாக எதிரொலித்துள்ளது. இந்தியப் பங்குச் சந்தை ஆகஸ்ட் 28, வியாழக்கிழமை அன்று தொடர்ந்து இரண்டாவது நாளாக பெரும் அழுத்தத்தைச் சந்தித்தது. முன்னணி குறியீடான நிஃப்டி 50, வர்த்தக அமர்வின்போது கிட்டத்தட்ட 1% சரிந்து 24,500 புள்ளிகளுக்கும் கீழ் சென்றது.
சந்தை தற்காலிகமான ஒரு எதிரொலியை தான் காட்டி இருக்கிறது, இந்த வரிகள் குறுகிய கால வலியை மட்டுமே தரும் என்றும், விரைவில் ஒரு தீர்வு எட்டப்படும் என்றும் சந்தை இன்னும் எதிர்பார்க்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு ஆலோசகர் வி.கே.விஜயகுமார், "இது ஒரு குறுகிய கால விவகாரம் என்றும், இந்தியா மீது அழுத்தம் கொடுக்க டிரம்ப் முயற்சி செய்கிறார் என சந்தை கருதுகிறது. 50% வரி நீடிக்காது என்றும், கூடுதல் 25% வரிகள் குறித்து ஒரு தீர்வு எட்டப்படலாம் என்றும் முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்" என கூறுகிறார்.
இருப்பினும், வரிகள் விரைவில் குறையும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மருந்து மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகள் போன்ற துறைகளில் வரி விதிக்க முடிவு செய்தால், அது இந்திய பொருளாதாரம் மற்றும் பங்குச் சந்தைக்கு ஒரு பெரும் அடியாக இருக்கும்.
தற்போது, வரிகள் ஜவுளி, ரத்தினங்கள் மற்றும் நகைகள், சில உணவுப் பொருட்கள் உள்ளிட்ட சில துறைகளை மட்டுமே பாதித்துள்ளது. மருந்து, செமி கண்டக்டர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகள் இன்னும் இந்த வரிகளில் இருந்து விலக்கு பெற்றுள்ளன.
டிபிஎஸ் வங்கியின் மூத்த பொருளாதார நிபுணர் ராதிகா ராவ் கருத்துப்படி, இந்த வரி விதிப்பு இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் கிட்டத்தட்ட 1-1.2 சதவீதப் புள்ளிகள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்கிறார். தற்போது, சந்தையின் மிதமான மீட்சி அமெரிக்க வரி விதிப்புகளுக்கு ஒரு தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது என்கிறார். காலையில் சரிவில் தொடங்கி பின்னர் மீண்ட சந்தை பிற்பகலில் மீண்டும் சரிவை சந்தித்தது.
ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸின் பங்கஜ் பாண்டே, பருத்தி உற்பத்தி மற்றும் பருத்தி சார்ந்த ஜவுளிகளில் இந்தியா முன்னணிப் பங்கு வகிக்கிறது , இந்தியாவிற்கு மாற்றாக ஒரு நாட்டை அமெரிக்கா கண்டுபிடிப்பது கடினம் என்றும் சுட்டிக்காட்டினார். இதனால்தான் சப்ளை சங்கிலி மற்றும் உற்பத்தி மறுசீரமைப்பு குறித்த சில எதிர்பார்ப்புகள் உள்ளன. அதுவரை, இந்தத் துறைகள் அழுத்தத்தில் இருக்கக்கூடும் என கூறுகிறார்.பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் வரி நிலைமை எந்த நேரத்திலும் மாறக்கூடும் என்று பாண்டே தெரிவித்தார்.
இருப்பினும், வரிகள் மட்டுமே சந்தை வீழ்ச்சிக்கு காரணம் அல்ல, வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் அதிக பங்குகளை விற்று வெளியேறுவது, வருவாய்-மதிப்பீடு பொருந்தாமை மற்றும் அடுத்த சில காலாண்டுகளில் வருவாய் மீட்சி குறித்த நம்பிக்கைகள் இல்லாமல் இருப்பது ஆகியவை சந்தையின் வீழ்ச்சிக்கு கூடுதல் காரணிகளாகும். வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) ஜூலையில் ரூ.47,667 கோடியை சந்தையில் இருந்தி திரும்ப பெற்றுள்ளனர், ஆகஸ்ட் மாதம் இது ரூ. 34,733 கோடி என இருக்கிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications