இந்தியப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகளான பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ நிஃப்டி ஆகியவை செப்டம்பர் 26 தேதியான இன்று பெரும் சரிவை சந்தித்தன. டிரம்ப் நிர்வாகத்தின் இறக்குமதி மருந்துகளுக்கு விதித்த வரி மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் (FPIs) தொடர்ச்சியாக பங்குகளை விற்றது ஆகியவற்றால் தொடர்ந்து ஆறாவது நாளாக சரிவில் முடிந்தன இந்திய பங்குச்சந்தைகள்.
பிற்பகல் வர்த்தகத்தில் சென்செக்ஸ் 800 புள்ளிகள் அதாவது 0.98% சரிந்து 80,360 ஆகக் குறைந்தது. இதேவேளையில், என்எஸ்இ நிஃப்டி 50 குறியீடு 252 புள்ளிகள் அதாவது 1.01% குறைந்து 24,638.40 ஆகச் சரிந்தது. தலாால் ஸ்ட்ரீட்டில் ஏற்பட்ட இந்த பெரும் சரிவால், பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் 450.61 லட்சம் கோடியாகக் குறைந்து, முதலீட்டாளர்களின் செல்வத்தில் ரூ. 6.73 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

1. டிரம்ப் வரி: டிரம்ப் நிர்வாகத்தின் புதிய மருந்து இறக்குமதி வரிகளை பீதியை ஏற்படுத்தின. இந்திய ஏற்றுமதிகளின் மீது ஏற்கனவே விதிக்கப்பட்ட 50% வரியால் பாதிக்கப்பட்டிருந்த முதலீட்டாளர்கள், புதிய கட்டணங்களால் மேலும் கவலை அடைந்தனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அக்டோபர் 1 முதல் அமுலுக்கு வரும் வகையில், பிராண்டட் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகள், கனரக ட்ரக்குகள் உள்ளிட்ட பல்வேறு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு புதிய கட்டணங்களை அறிவித்துள்ளார்.
ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, இந்தியாவின் மருந்து ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாக அமெரிக்கா உள்ளது. இதனால் மருந்து குறியீடு 2% க்கும் அதிகமாகவும், சன் பார்மா மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் போன்ற முக்கிய நிறுவனங்களின் பங்குகள் 5% வரையிலும் சரிந்தன. ஈக்வினாமிக்ஸ் ரிசர்ச் நிறுவனர் ஜி. சொக்கலிங்கம் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இருதரப்பு ஒப்பந்தம் அல்லது உடன்பாடு ஏற்படும் வரை சந்தை மந்தமாகவே இருக்கும் என கூறுகிறார்.
2. H-1B விசா சிக்கல்கள்: கடந்த வாரம், அமெரிக்க நிர்வாகம் H-1B விசா கட்டணத்தை உயர்த்தியது. இது இந்திய ஐடி பங்குகளுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. ஐடி நிறுவனங்களின் பங்குகள் சரிந்ததால், ஒட்டுமொத்த குறியீட்டின் செயல்திறன் மேலும் பாதிக்கப்பட்டது. அதிக H-1B விசாக்களைக் கொண்ட இந்திய நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்று தனது 52 வார குறைந்தபட்ச நிலையை அடைந்தது. இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா மற்றும் எச்.சி.எல் டெக்னாலஜிஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகளும் கணிசமான சரிவை சந்தித்தன.
3. ஃபெடரல் வட்டி குறைப்பு எதிர்பார்ப்புகள் குறைதல்: அமெரிக்காவின் வலுவான ஜிடிபி தரவுகள், மத்திய வங்கி மேலும் வட்டி குறைப்பு குறித்த எதிர்பார்ப்புகளைக் குறைத்தன. ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அமெரிக்க மத்திய வங்கி வட்டி குறைப்பதற்கான வாய்ப்புகள் முறையே 87% மற்றும் 62% ஆகக் குறைந்துள்ளன. தரவுகள் வெளியாவதற்கு முன்பு இது 91% மற்றும் 76% ஆக இருந்தது .
4. FPI-களின் தொடர் விற்பனை: வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPIs) தொடர்ந்து மூன்றாவது மாதமாக பங்குகளை விற்று வருகின்றனர். செப்டம்பர் மாதம் வரை ரூ.13,450 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர். இதன் மூலம் 2025 ஆம் ஆண்டில் FPI-களின் மொத்த விற்பனை ரூ.1,44,085 கோடியாக உயர்ந்துள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, FII-களின் தொடர்ச்சியான விற்பனை சந்தையில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
FPI-கள் இந்தியாவில் விற்பனை செய்யும் அதேவேளையில், ஹாங்காங், தைவான் மற்றும் தென் கொரியா போன்ற பிற சந்தைகளில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், பிற வளர்ந்து வரும் சந்தைகளுடன் ஒப்பிடுகையில் இந்தியப் பங்குச் சந்தை பின்தங்கி உள்ளது.
5. வருவாய் மீட்சியில் சந்தேகங்கள்: வரவிருக்கும் செப்டம்பர் காலாண்டு வருவாய் முடிவுகளும் முதலீட்டாளர்களை எச்சரிக்கையாக செயல்பட வைக்கிறது. FY27 க்கு முன்பு குறிப்பிடத்தக்க வருவாய் வேகம் திரும்பாது. இதனால், பென்ச்மார்க் குறியீடுகள் "நேர திருத்தம்" என்ற நிலையில் இருக்கும். இங்கு மதிப்பீடுகள் ஒரு இடைவெளி எடுத்து, வருவாய் அதிகரிப்பிற்காக காத்திருக்கின்றன.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!



Click it and Unblock the Notifications