இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவை சந்தித்தன. பல்வேறு நிறுவனங்கள் முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட இருப்பது, அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற தன்மை ஆகியவையே பங்குச்சந்தை சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.
ஜூலை 10ஆம் தேதி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 345.80 புள்ளிகள் சரிந்து 83,190.28 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 120.85 புள்ளிகள் குறைந்து 25,355.25 ஆகவும் முடிந்தன. சந்தையில் ஒட்டுமொத்த சரிவு இருந்தபோதிலும், சில பங்குகள் உயர்ந்தன.

IndusInd வங்கி பங்கு மதிப்பு 1.56% மற்றும் மாருதி பங்கு மதிப்பு 1.40% உயர்ந்தது. டாடா ஸ்டீல் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவற்றின் பங்கு மதிப்பு உயர்வை கண்டன. அதே வேளையில் பாரதி ஏர்டெல் கிட்டத்தட்ட 3% சரிவைச் சந்தித்தது, மேலும் ஏசியன் பெயிண்ட்ஸ், HDFC லைஃப், அப்பல்லோ ஹாஸ்பிடல் மற்றும் ஸ்ரீராம் ஃபைனான்ஸ் ஆகியவையும் சரிந்தன.
அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் மற்றும் முதல் காலாண்டு வருவாய் அறிக்கைகள் வெளியிட தொடங்கியது ஆகியவையே பங்குச்சந்தை சரிவுக்கு காரணம். குறிப்பாக TCS நிறுவனத்தின் முதல் காலாண்டு முடிவுகள் பிற்பகலில் வெளியானதால், முதலீட்டாளர்கள் முன்னெச்சரிக்கையாக இருந்து முதலீட்டு முடிவுகளை எடுக்கவில்லை. இது இந்திய பங்குச் சந்தையில் அழுத்தத்தை ஏற்படுத்தியது மற்றும் முக்கிய பெஞ்ச்மார்க் குறியீடுகளை பாதித்தது.
“TCS-இன் முதல் காலாண்டு முடிவுகளுக்கு முன்னதாக IT பங்குகளில் ஏற்பட்ட பலவீனத்தின் காரணமாக, இந்தியப் பங்குகள் நாள் முழுவதும் சரிந்து முடிவடைந்தன,” என்று ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸின் வினோத் நாயர் தெரிவித்துள்ளார். ரியாலிட்டி, மெட்டல் தவிர பெரும்பாலான துறைகளின் பங்குகள் வீழ்ச்சியில் தான் முடிவடைந்தன. நிஃப்டி PSU வங்கி மற்றும் IT துறைகள் மிகப்பெரிய இழப்பை சந்தித்தன. நிஃப்டி மிட்கேப் 150 குறியீடு தொடர்ந்து ஐந்தாவது நாளாக சரிந்தது. அமெரிக்க அரசு மருந்து இறக்குமதிக்கு 200% வரி விதிக்கலாம் என்ற தகவலால் ஃபார்மா மற்றும் ஹெல்த்கேர் பங்குகள் சரிவை சந்தித்தன.

LKP செக்யூரிட்டீஸின் ரூபக் டே குறிப்பிடுகையில், நிஃப்டி குறுகிய காலத்தில், 25,250-25,200 என்ற சப்போர்ட் அளவுடனும் 25,400-25,500 என்ற ரெசிஸ்டன்ஸ் அளவுடன் இருக்க வாய்ப்புள்ளது என கூறுகிறார். ஜூலை 10 ஆம் தேதி அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் சற்று வலுவடைந்தது, ஜூலை 9 ஆம் தேதி 85.68 ஆக இருந்த நிலையில், 85.65 ஆக முடிந்தது.
ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸின் வினோத் நாயர் மேலும் கூறுகையில், IT மற்றும் நிதித் துறைகளில் இருந்து வருவாய் முடிவுகள் மந்தமாக இருக்கும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்த்ததால், எச்சரிக்கையாக முதலீடு செய்யாமல் இருக்கின்றனர் என கூறுகிறார். காத்திருந்து முதலீடு செய்யலாம் என்ற அணுகுமுறையை காண முடிகிறது என தெரிவிக்கிறார்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications