ஈரான் போர் பதட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியப் பங்குச் சந்தைகள் நாளை என்ன ஆகுமோ என முதலீட்டாளர்கள் இன்றே கண்ணீர் சிந்த தொடங்கிவிட்டனர். கடந்த வெள்ளி மற்றும் திங்கள் என இரண்டு நாட்களிலேயே முதலீட்டாளர்களின் ரூ 11 லட்சம் கோடி மாயமானது. கடந்த இரண்டு வர்த்தக நாட்களில் பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் தலா 2.5%க்கு மேல் சரிந்தன.
ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்ட தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்த பிறகு, திங்கட்கிழமை சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேலும், நிஃப்டி 300 புள்ளிகளுக்கு மேலும் சரிந்து, முறையே 81,000 மற்றும் 25,000 முக்கிய நிலைகளுக்குக் கீழே இறங்கின. சந்தை வல்லுநர்கள், இன்னும் சில நாட்களுக்கு இந்த நிலை நீடிக்கும் என்கின்றனர். ஆனந்த் ரதி ஷேர் & ஸ்டாக் புரோக்கர்ஸ் நிறுவனத்தின் இணை இயக்குநர் தன்வி கஞ்சன், குறுகியகாலத்தில் பங்குச்சந்தை சிவப்பாக தான் காட்சி தரும் என்கிறார்.

"பாதுகாப்பு முதலீட்டுக்கான தேவை அதிகரித்ததால், MCX-இல் தங்கத்தின் எதிர்கால ஒப்பந்த விலைகள் உயரும் என கூறியுள்ளார். பங்குச்சந்தையில் சரிவுகள் கவலை அளித்தாலும், இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிப் பாதையை இவை வரலாற்று ரீதியாகச் சீர்குலைத்ததில்லை என்று தன்வி கஞ்சன் குறிப்பிட்டார். நாட்டின் உள்நாட்டு பொருளாதார அடிப்படைகள் உறுதியாக உள்ளன. ஜனவரி 2026-இல் நிகர GST வசூல் ரூ 1.71 லட்சம் கோடியாக இருந்தது என்கிறார்.
நிதி ஆண்டு 2027 இல் லாப மீட்சி எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பொதுத்துறை வங்கிகள் மற்றும் உலோக நிறுவனங்களின் காலாண்டுச் செயல்பாடுகள் ஊக்கமளிப்பதாக இருந்தன என்றும் அவர் கூறினார். PL கேபிடல் நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் விக்ரம் காசட், குறுகியகால சவால்கள் இருந்தபோதிலும், அடிப்படைப் பொருளாதாரக் குறிகாட்டிகள் நிலையான வருவாய் எதிர்பார்ப்புகள் மற்றும் தொடர்ச்சியான SIP வரவுகளுடன் மீள்திறனைக் காட்டுவதாகத் தெரிவித்தார்.
"எனினும், குறுகியகாலத்தில் சந்தை செய்திகளின் அடிப்படையிலேயே இயங்கும் என்றும், கச்சா எண்ணெய் விலை நகர்வுகளும், புவிசார் அரசியல் சிக்னல்களும் முதலீட்டாளர் மனநிலையை நிர்ணயிக்கும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். முதலீட்டாளர்கள் தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும்" என்று அவர் அறிவுறுத்தினார்.
ஷிராம் வெல்த் நிறுவனத்தின் COO மற்றும் தயாரிப்புப் பிரிவின் தலைவர் நாவல் ககல்வாலா, மத்திய கிழக்கில் பதட்டங்கள் அதிகரிப்பது போன்ற புவிசார் அரசியல் நெருக்கடிகள் கடந்த காலங்களில் நடந்துள்ளன என்றும், இவை பொதுவாக தற்காலிக ஏற்ற இறக்கங்களைத் தூண்டி, பின்னர் நிலைபெறும் என்றும் குறிப்பிட்டார். "ஏதேனும் சரிவு ஏற்பட்டால், வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாகத் தொடர்ந்து இருக்கும் இந்தியாவில் மதிப்பீடுகளை மேலும் நியாயப்படுத்த இது உதவும். இது இந்தியாவிற்கான ஒரு குறிப்பிட்ட நிகழ்வல்ல. குறுகியகால தாக்கங்கள், ஏதேனும் இருந்தால், பெரும்பாலும் கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் ஏற்றுமதி-இறக்குமதியை நம்பியுள்ள சில பிரிவுகள் வழியாகவே இருக்கும்," என்று அவர் கூறினார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

பங்குச்சந்தைய விடுங்க பிட்காயின் முதலீட்டாளர்கள் நிலைமை இன்னும் மோசம்..! ஈரான் போர் யாரையும் விட்டு வைக்கல..!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!



Click it and Unblock the Notifications