இந்திய பங்குச் சந்தையில் 2025 ஆம் ஆண்டு ஐபிஓக்கள் மூலம் வரலாறு காணாத அளவிலான நிதி திரட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் சுமார் 365 நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட்டு சுமார் 1.95 லட்சும் கோடி ரூபாய் நிதி திரட்டயுள்ளது. இதில் மெயின்போர்டு ஐபிஓக்களின் பங்கீடு மட்டும் 94 சதவீதம் சுமார் 1.80 லட்சம் கோடி ரூபாய்.
ஆனால் இந்த திரட்டப்பட்ட தொகையில் பெரும்பகுதி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு செல்லாமல், ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களின் கைக்கு செல்கிறது என்பது தெரியுமா..?

ஐபிஓ - இரு வகை நிதி திரட்டல்
ஒரு நிறுவனம் ஐபிஓ மூலம் நிதி திரட்டும் போது இரண்டு வகையில் பங்குகள் விற்கப்படுகின்றன. முதலாவது புதிய பங்கு வெளியீடு அதாவது ஃப்ரெஷ் இஷ்யூ பங்குகள். இது நிறுவனத்திற்கு நேரடியாக புதிய நிதியை தருகிறது. இதை நிறுவனம் தனது விரிவாக்கம், கடன் திருப்பி செலுத்துதல், புதிய தொழிற்சாலை அமைத்தல் போன்ற தேவைகளுக்கு பயன்படுத்தும்.
இரண்டாவது ஆஃபர் ஃபார் சேல் - OFS இதில் நிறுவனத்தின் நிறுவனர்கள், தனியார் ஈக்விட்டி நிதி அமைப்புகள் அல்லது ஆரம்ப முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை பொதுமக்களுக்கு விற்று இதற்கான பணத்தை தாங்கள் எடுத்துக்கொள்வார்கள். இந்த பணம் நிறுவனத்திற்கு செல்லாமல் நேரடியாக அந்த முதலீட்டாளர்களின் கைக்கு போகிறது.
2025இல் ஓஎஃப்எஸ் ஆதிக்கம்
2025 ஆம் ஆண்டு மெயின்போர்டு ஐபிஓக்களில் திரட்டப்பட்ட தொகையில் சுமார் 63 சதவீதம் OFS மூலம் வந்துள்ளது என்பது தான் அதிர்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது. அதாவது, திரட்டப்பட்ட 1.80 லட்சம் கோடி ரூபாயில் சுமார் 1.11 லட்சம் கோடி ரூபாய் பழைய முதலீட்டாளர்களுக்கு சென்றுள்ளது என பின்ஷாட்ஸ் நிறுவனத்தின் அகான்ஷா தனது லின்கிடுஇன் பதிவில் தெரிவித்துள்ளார்.
மீதமுள்ள 37 சதவீதம் மட்டுமே நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பயன்படும் புதிய நிதியாக உள்ளது. ஐபிஓ-வின் அடிப்படை நோக்கம் நிறுவனங்களுக்கு நிதி திரட்டுதல் என்பது தான், ஆனால் 2025ஆம் ஆண்டில் அதிகப்படியான ஐபிஓ முதலீட்டாளர்கள் வெளியேறுவதற்காக வந்துள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

முக்கிய நிறுவனங்கள்
இந்த ஆண்டு சில ஐபிஓ-க்களில் OFS முழுமையாகவோ அல்லது பெருமளவிலோ இருந்துள்ளது. உதாரணமாக எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் ஐபிஓ மூலம் திரட்டப்பட்ட 11,607 கோடி ரூபாய் முழுவதும் ஓஎஃப்எஸ் ஆகும். இதில் ஒரு ரூபாய் கூட இந்திய நிறுவனத்திற்கு செல்லவில்லை. அதன் கொரிய தாய் நிறுவனம் தனது பங்குகளை விற்று அந்த பணத்தை எடுத்துக்கொண்டது.
வீவொர்க் இந்தியா ஐபிஓவில் திரட்டப்பட்ட 3,000 கோடி ரூபாயும் முழுவதும் ஓஎஃப்எஸ் ஆகும். டாடா கேபிடல் ஐபிஓவில் திரட்டப்பட்ட 15,500 கோடி ரூபாயில் பெரும்பகுதி ஓஎஃப்எஸ் ஆகவும், லென்ஸ்கார்ட் ஐபிஓவில் திரட்டப்பட்ட 7,200 கோடி ரூபாயில் 55 முதல் 70 சதவீதம் வரை ஓஎஃப்எஸ் ஆகவும் இருந்தது.
முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
ஐபிஓவில் முதலீடு செய்யும் போது, அது புதிய நிதியா அல்லது பழைய முதலீட்டாளர்களின் வெளியேற்றம் செய்யும் வழியா என்பதை கவனிக்க வேண்டும். ஓஎஃப்எஸ் அதிகமுள்ள ஐபிஓவில் முதலீடு செய்தால், நாம் பழைய முதலீட்டாளரிடமிருந்து பங்குகளை வாங்குவது போல ஆகிறது. இது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நேரடி உதவி செய்யாது. இதனால் நிறுவனத்தின் வளர்ச்சியில் பெரிய உயர்வை எதிர்பார்க்க முடியாது. இந்த போக்கு தொடர்ந்தால், ஐபிஓக்களின் நோக்கம் மாறலாம்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications