பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் பல விலையுயர்ந்த பங்குகள் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. ஆனால் அவற்றின் விலை நியாயமானதாக உள்ளதா என்று யோசித்தால் அது பல்வேறு வினாக்களை எழுப்புகின்றன. நிறுவனத்தின் வளர்ச்சி சிறப்பாக இருந்தால் பங்கு விலை உயருவது வாடிக்கை அதேசமயம், வெறுமனே விலை மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தால், பங்கு விலையில் பெரிய சரிவுகளை சந்திக்கும். எனவே பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன் பங்குகளை மதிப்பீடு மிகவும் அவசியமாகும். பங்குகளின் மதிப்பிடுவதற்கு பிஇஜி பார்முலாவை பெரும்பாலான முதலீட்டாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல முதலீட்டாளரும், பண்ட் நிறுவனத்தின் மேலாளருமான பீட்டர் லிஞ்ச் பங்குகளை மதிப்பீடுவதற்கான பிஇஜி என்ற பார்முலாவை கண்டுபிடித்தார். பிஇஜி = (பங்கு விலை/ ஒரு பங்கு வருவாய்) / ஒரு பங்குக்கான வருவாய் வளர்ச்சி விகிதம்.

ஒரு பங்கின் பிஇஜி விகிதம் 1 சதவீதத்துக்கு் குறைவாக இருந்தால் அந்த பங்கினை வாங்கலாம். அதே சமயம் பிஇஜி விகிதம் 1 சதவீதத்துக்கு கூடுதலாக இருந்தால் அந்த பங்கு மிகைப்படுத்தப்பட்டுள்ளதை குறிக்கும். பங்குகளின் மதிப்பீடுகளை பார்ப்பதற்கு பிஇஜி விகிதம் ஒரு அவசியமான ஒன்றாகும்.பிஇஜி விகிதம் அடிப்படையில் நாட்டின் டாப் 3 விலையுயர்ந்த பங்குகளை பார்க்கலாம்.
ஷீலா ஃபோம்
ஷீலா ஃபோம் நிறுவனம் மெத்தைகள் மற்றும் ஃபோம் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. மேலும் பாலியூரிதீன் ஃபோம் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் லாப வளர்ச்சியில் ஏற்ற இறக்கம் காணப்பட்டாலும், தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருகிறது. அதேசமயம், இந்நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி அதிகரித்துள்ளது. பிஇஜி விகிதத்தின்படி, ஷீலா ஃபோம் நாட்டின் மிகவும் விலையுர்ந்த பங்காக உள்ளது. தற்போது அதன் பிஇஜி விகிதத்தில் 98.4 மடங்கு வர்த்தகமாகிறது. இது 102 மடங்கு பி/இ விகிதத்தில் வர்த்தகம் செய்யப்படுகிறது. கடந்த ஒரு வருடத்தில் இப்பங்கின் விலை 18.2 சதவீதம் குறைந்திருந்தாலும் கூட இது மிக உயர்ந்த விகிதமாகும். மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.89 சதவீதம் உயர்ந்து ரூ.910க்கு வர்த்தகமானது.
இந்துஸ்தான் ஜிங்க்
இந்நிறுவனம் சர்வதேச அளவில், துத்தநாகம்,லீட் மற்றும் சில்வர் துறையில் முன்னணியில் உள்ளது. 1966ல் தொடங்கப்பட்ட இந்துஸ்தான் ஜிங்க், சர்வதேச அளவில் துத்தநாகம் உற்பத்தியில் 2வது இடத்திலும், வெள்ளி உற்பத்தியில் 3வது இடத்திலும் உள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.451ஆக இருந்தது. கடந்த ஒரு வருடத்தில் இப்பங்கின் விலை 51 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. பிஇஜி விகிதத்தின்படி, நாட்டின் 2வது மிகவும் விலையுர்ந்த பங்காக இந்துஸ்தான் ஜிங்க் உள்ளது. இநநிறுவனத்தின் பிஇஜி விகிதம் 93.9 சதவீதமாகவும், அதன் பி/இ விகிதம் 22.5 சதவீதமாகவும் உள்ளது.
தேவ்யானி இன்டர்நேஷனல்
இந்நிறுவனம் இந்தியாவில் யம் பிராண்ட்ஸின் மிகப்பெரிய உரிமையாளராக உள்ளது. மேலும் சங்கிலித்தொடர் துரித சேவை உணவகங்கள் பிரிவில் செயல்படும் மிகப்பெரிய நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். பிஇஜி விகிதத்தின்படி, தேவ்யானி இன்டர்நேஷனல் நாட்டின் 3வது காஸ்ட்லியான பங்காக உள்ளது. தற்போது அதன் பிஇஜி விகிதத்தில் 71 மடங்கு வர்த்தகமாகிறது. இது 1,454 மடங்கு பி/இ விகிதத்தில் வர்த்தகம் செய்யப்படுகிறது. கடந்த ஒரு வருடத்தில் இப்பங்கின் விலை 3.5 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது இருப்பினும் இந்த விகிதங்கள் குறிப்பிடத்தக்க பிரீமியத்தை பிரதிபலிக்கின்றன. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.160.30ஆக இருந்தது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
Story written by: Subramanian
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications