அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு அமலுக்கு வர உள்ளதன் எதிரொலியாக இந்த நிதியாண்டின் முதல வர்ததக தினமான இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. இந்தியாவின் பங்குச் சந்தை அச்ச அளவுகோலான இந்தியா விஐஎக்ஸ் (India VIX) இன்டெக்ஸ் செவ்வாய்க்கிழமையன்று வர்த்தகத்தின் இடையே 10 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது. இது விரைவில் பெரிய நிச்சயமற்ற தன்மையை முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை குறிப்பிடுகிறது.
இந்தியா விஐஎக்ஸ் இன்டெக்ஸ் என்பது நிஃப்டி 50 இன்டெக்ஸ் ஆப்ஷன்ஸ் ஒப்பந்தங்களின் அடிப்படையில் சந்தையின் எதிர்கால ஏற்ற இறக்க குறித்த எதிர்பார்ப்பை அளவிடும் நிலையற்றதன்மை இன்டெக்ஸ். இது பொதுவாக சந்தை ஏற்ற இறக்கத்தின் அதிகரிப்பை குறிக்கிறது மற்றும் முதலீட்டாளர்கள் விரைவில் அதிக நிச்சயமற்ற தன்மை அல்லது ஆபத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பதை குறிக்கிறது.

இன்று பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இந்தியா விஐஎக்ஸ் இன்டெக்ஸ் 8.33 சதவீதம் உயர்ந்து 13.78ல் நிலை கொண்டது. இதற்கு முன் கடந்த மார்ச் 24ம் தேதியன்று பங்குச் சந்தைகள் ஏற்றத்தை சந்தித்தபோது India VIX இன்டெக்ஸ் 11 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,390.41 புள்ளிகள் சரிந்து 76,024.51 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 353.65 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 23,165.70 புள்ளிகளில் முடிவுற்றது. ப்ளூம்பெர்க் தரவுகளின்படி, ஜனவரி மாதத்தின் இரண்டாம் பாதியில் இருந்து இன்டெக்ஸ் சரிவில் இருந்தது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்ததால் சந்தைகள் தொடர்ந்து சரிந்தன.
உலகெங்கிலும் உள்ள ஆபத்து-விலக்கு உணர்வுகள் பங்குச் சந்தைகளை தாக்கியதால் ஏற்ற இறக்கத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வரி விதிப்பு குறித்து இந்த கட்டத்தில் உறுதியான எதுவும் இல்லாததால் பீதி அடைய வேண்டாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
DRChoksey FinServ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தேவன் சோக்ஸி கூறுகையில், வரி விதிப்பு நிறுவனங்களின் மீது மட்டுமே எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. முதலீட்டாளர்கள் நிலைமையை பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும். ஆனால் தற்போது வரை, வரிவிதிப்பு குறித்து உறுதியான முன்னேற்றம் எதுவும் இல்லை.
முதலீட்டாளர்கள் வரி விதிப்பு குறித்து அதிகம் கவலைப்படக் கூடாது. ஏனெனில் அதன் தாக்கம் உடனடியாக அல்லாமல் காலப்போக்கில் படிப்படியாக வெளிப்படும். வரி தொடர்பான விளைவுகள் என்னவாக இருந்தாலும், தொழில்துறை அதை ஏற்றுக்கொள்ளும் வரை நாம் காத்திருந்து பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications