2024 நிதியாண்டு இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு முக்கியமான காலகட்டமாக அமைந்தது. இந்த ஆண்டில், பொது மற்றும் தனியார்த் துறைகளை இணைந்து பல துறையில் அதிகப்படியான வர்த்தகம் மற்றும் வருமான வளர்ச்சியைப் பதிவு செய்தனர். இதன் தாக்கத்தைப் பங்குச்சந்தையிலும் எதிரொலித்து முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபம் கிடைத்தது. ஆனால் இது 2025ஆம் ஆண்டிலும் நடக்குமா என்ற சந்தேகம் எல்லோருக்கும் உண்டு.
இந்த நிலையில் 2024ஆம் நிதியாண்டில் அதிகம் லாபம் பெற்ற டாப் 10 நிறுவனங்கள் என எடுத்துக்கொண்டால் அவை 4 துறையை மட்டுமே சார்ந்துள்ளது. அப்படி அது என்ன துறை, எந்த துறையில் எந்த நிறுவனங்கள் எல்லாம் அதிகம் லாபத்தைப் பெற்றுள்ளது, என பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்யப்போகிறோம். இந்த கட்டுரையில் முடிவில் 2025ஆம் ஆண்டில் இந்திய முதலீட்டு சூழ்ந்துள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் எந்த துறையில், எந்த நிறுவனத்தில் முதலீடு செய்யலாம் என்ற கண்ணோட்டம் உங்களுக்குக் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

தனியார் துறையின் எழுச்சி: 2024 நிதியாண்டில், தனியார் நிறுவனங்கள் அபாரமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. குறிப்பாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ரூ.69,621 கோடி லாபம் ஈட்டி, நாட்டின் முதன்மையான லாபகரமான நிறுவனமாக அக்காலகட்டத்தில் உருவெடுத்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து, ஹெச்டிஎஃப்சி வங்கி, டிசிஎஸ், ஐசிஐசிஐ வங்கி மற்றும் டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க லாபத்தை ஈட்டியுள்ளன. இந்த நிறுவனங்கள், நிதி, தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் சந்தை போன்ற முக்கிய துறைகளில் புதுமைகளைப் புகுத்தி, இந்தியப் பொருளாதாரத்தின் நவீனமயமாக்கலுக்கு முக்கிய பங்காற்றியுள்ளன. குறிப்பாக, ரூ.45,908 கோடி லாபம் ஈட்டிய டிசிஎஸ் நிறுவனத்தின் வளர்ச்சி, உலகளாவிய தொழில்நுட்ப அரங்கில் இந்தியாவின் ஆதிக்கத்தைக் காட்டியுள்ளது.
பொதுத் துறையின் பலம்: தனியார் துறை நிறுவனங்களின் அதிரடி ஒருபுறம் இருக்க, பொதுத் துறை நிறுவனங்களும் 2024ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளன. ஸ்டேட் பேங்க் (எஸ்பிஐ), ஓஎன்ஜிசி, இந்தியன் ஆயில் மற்றும் எல்ஐசி போன்ற நிறுவனங்கள், எண்ணெய், நிலக்கரி மற்றும் வங்கி சேவை போன்ற மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய சேவைகளை வழங்குவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளன.
எஸ்பிஐ வங்கி 2024ஆம் நிதியாண்டின் முடிவில் ரூ.67,085 கோடி லாபம் ஈட்டி, நாட்டின் நிதி உள்ளடக்கிய வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. அதேபோல், ஓஎன்ஜிசி மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனங்கள், எரிசக்தி விநியோகத்திற்கு முக்கிய பங்காற்றி நாட்டின் வர்த்தக உயர்வுக்கு வழிவகை செய்துள்ளது.
துறை வாரியான லாபம்: 2024 நிதியாண்டில், மின் உற்பத்தி மற்றும் புதைபடிவ எரிபொருள் துறை மற்றும் வங்கி மற்றும் நிதித் துறை ஆகிய இரண்டு துறைகள் அதிக லாபம் ஈட்டியுள்ளன. இக்காலகட்டத்தில் டாப் பத்து லாபகரமான நிறுவனங்களில் தலா நான்கு நிறுவனங்கள் இந்த இரண்டு துறைகளைச் சார்ந்தவை. மற்ற 2 நிறுவனங்கள் ஐடி மற்றும் ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் மற்றும் டிசிஎஸ் ஆகும்.
பொது மற்றும் தனியார்த் துறைகளின் ஒருங்கிணைப்பு: இந்தியப் பொருளாதார மாடல், பொது மற்றும் தனியார்த் துறைகளின் ஒருங்கிணைப்பைக் கொண்டது. தனியார் நிறுவனங்கள் புதுமைகளைப் புகுத்தி பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் அதே வேளையில், பொதுத் துறை நிறுவனங்கள் நிலையான வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்தது.
இந்த நிலையில் நாட்டின் பொருளாதார மந்த நிலையில் இருக்கும் போது, நாட்டு மக்களுக்கு அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் துறைகளை கண்காணித்து முதலீடு செய்தால் கட்டாயம் இழப்பில் இருந்து தப்பிக்கலாம். இதேபோல் முதலீடு செய்யும் போது பணவீக்க அபாயத்தையும் கணக்கில் கொண்டு முதலீடு செய்யவும்.
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications