2 மாதங்களில் ரூ.1 லட்சத்தை ரூ.2 லட்சமாக மாற்றிய பங்கு..!! இன்னும் ஏறும் என தரகு நிறுவனங்கள் கணிப்பு..!!

இந்திய பங்குச்சந்தை ஒட்டுமொத்தமாக ஏற்ற இறக்கமாகவே இருந்தாலும் சில நிறுவனங்கள் ஐபிஓ வெளியீடு செய்து அதில் முதலீடு செய்தவர்களுக்கு நல்ல லாபத்தை தந்துள்ளன. அப்படி ஐபிஓ வெளியிட்டு குறுகிய காலத்தில் 100%க்கும் மேல் லாபம் தந்த ஒரு மல்டிபேக்கர் பங்கு குறித்து விரிவாக பார்க்கலாம்.

கர்நாடகாவை தலைமையிடமாக கொண்ட இண்டோ-மிம் லிமிடெட் (Indo-MIM Ltd) நிறுவனம் Metal Injection Molded தயாரிப்புகளை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றது. இந்நிறுவனம் கடந்த ஜூலை மாத இறுதியில் ஐபிஓ வெளியிட்டு பங்கு சந்தையில் அறிமுகமானது. ஆனால் இந்த 2 மாதங்களிலேயே இந்த நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் லாபத்தை பெற்று தந்துள்ளது.

2 மாதங்களில் ரூ.1 லட்சத்தை ரூ.2 லட்சமாக மாற்றிய பங்கு..!! இன்னும் ஏறும் என தரகு நிறுவனங்கள் கணிப்பு

ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டீஸ் நிறுவனம் இந்த பங்கின் மீது பாசிட்டிவான மதிப்பீட்டை தந்துள்ளது. மேலும் பங்கு மதிப்பு உயரும் என்றும் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை இறுதியில் இண்டோ-மிம் நிறுவனம் தனது ஐபிஓ மூலம் 3,812 கோடியை திரட்டியது. அப்போது ஒரு பங்கின் விலை 485 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. ஒரு லாட்டில் 30 பங்குகள் இருந்தன. ஜூலை 30 அன்று சந்தையில் பட்டியலிடப்பட்டபோது இதன் குறைந்தபட்ச விலை 701 ரூபாயாக இருந்தது. இன்று 1161 ரூபாயாக இந்த பங்கு மதிப்பு உயர்வு கண்டுள்ளது.

அதாவது இந்த பங்கின் விலை ஐபிஓ மதிப்பை விட 100%க்கும் அதிகமாகவும், பட்டியலிடப்பட்ட விலையை விட 60%க்கும் அதிகமாகவும் உயர்வு கண்டுள்ளது. இந்த பங்கில் ஐபிஓ மூலம் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு 2 மாதங்களில் 2 லட்சமாக உயர்ந்திருக்கும்.

ஹெச்டிஎஃப்சி செக்யூரிட்டிஸ், இந்நிறுவனம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது மற்றும் நேரடி உற்பத்தி வளாகங்களை கொண்டிருப்பதை சாதகமாக கூறுகிறது. மெட்டல் இன்ஜெக்ஷன் மோல்டிங் மட்டுமின்றி, இன்வெஸ்ட்மென்ட் காஸ்டிங் , துல்லியமான எந்திரப் பணிகள், செராமிக் இன்ஜெக்ஷன் மோல்டிங் மற்றும் மெட்டல் 3டி பிரிண்டிங் போன்ற பல்வேறு திறன்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது என சுட்டிக்காட்டுகிறது.

அமெரிக்காவிலேயே நேரடி உற்பத்தி மையங்களை கொண்டுள்ளதால், வர்த்தக வரி சிக்கல்களிலிருந்து இந்நிறுவனம் ஒப்பீட்டளவில் பாதுகாப்பான நிலையிலேயே உள்ளது என்பதால் மேலும் இதன் விலை அதிகரிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளது. இண்டோ-மிம் பங்கினை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.

மேலும், இந்த பங்கின் இலக்கு விலையாக 1,407 ரூபாயை நிர்ணயம் செய்துள்ளது. இதன் மூலம் தற்போதைய விலையிலிருந்து மேலும் 21 சதவீதம் வரை லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+