2 வருஷத்தில் 1220% லாபம் கொடுத்த ஸ்மால்கேப் பங்கு.. உங்ககிட்ட இருக்கா?

தமிழகத்தை சேர்ந்த இன்டோ டெக் டிரான்ஸ்பார்மஸ் லிமிடெட் நிறுவனம் நாட்டின் முன்னணி டிரான்ஸ்பார்மர் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. கடந்த சில ஆண்டுகளாக மின் பரிமாற்றம் மாற்றம் மற்றும் விநியோகம் துறையை சார்ந்த நிறுவன பங்குகளின் விலை விறுவிறு ஏற்றம் கண்டு வருகிறது.

அதில், இன்டோ டெக் டிரான்ஸ்பார்மஸ் லிமிடெட் நிறுவனம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்நிறுவனம் நல்ல லாபத்தை அளித்து வருகிறது. மேலும், இந்த ஸ்மால்கேப் பங்கும் முதலீட்டாளர்களுக்கு அபரிதமான வருமானத்தை கொடுத்து வருகிறது.

2023 பிப்ரவரி முதல் இன்டோ டெக் டிரான்ஸ்பார்மஸ் லிமிடெட் நிறுவன பங்கின் விலை நிலையான ஏற்றத்தை கண்டு வருகிறது. 2 ஆண்டுகளுக்கு முன் ரூ.184 என்ற விலையில் இருந்த இப்பங்கு தற்போது ரூ.2,435ஆக உள்ளது. ஆக, கடந்த 2 ஆண்டுகளில் இப்பங்கின் விலை 1,220 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

இந்த காலத்தில் 14 மாதங்கள் இப்பங்கின் விலை உயர்வாகவே இருந்தது. அதிகபட்சமாக கடந்த ஆண்டு ஏப்ரலில் இப்பங்கின் விலை 75 சதவீதம் உயர்ந்தது. கடந்த 4 ஆண்டுகளில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 2,410 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது.

2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் இப்பங்கு விலை முறையே 275 மற்றும் 326 சதவீதம் உயர்ந்தது. இந்த ஆண்டு ஜனவரி 9ம் தேதியன்று இப்பங்கு இதுவரை இல்லாத புதிய உச்சமான ரூ.3,792ஐ எட்டியது. இந்நிறுவனம் தொடர்ந்து புதிய ஆர்டர்களை பெற்று வருகிறது.

கடந்த டிசம்பரில் இந்நிறுவனத்துக்கு ரூ.117.17 கோடி மதிப்பிலான 150 எம்விஏ டிரான்ஸ்பார்மஸ் 13 வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற்றது. இன்டோ டெக் டிரான்ஸ்பார்மஸ் லிமிடெட் நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.146 கோடி ஈட்டியுள்ளது. மேலும் அந்த காலாண்டில் இந்நிறுவனத்துக்கு ரூ.18 கோடி லாபம் கிடைத்துள்ளது.

அதிகரித்து வரும் நகரமயமாக்கல், உற்பத்தி ஆலைகளின் விரிவாக்கம், தரவு மையங்களின் அதிகரிப்பு மற்றும் நாடு முழுவதும் 100 சதவீதம் மின்சார அணுகலை அடைவதற்கான அரசாங்கத்தின் முன்முயற்சி ஆகியவற்றால் சமீப ஆண்டுளில் நாட்டின் மின்சார தேவை அதிகரித்து வருகிறது.

2 வருஷத்தில் 1220% லாபம் கொடுத்த ஸ்மால்கேப் பங்கு.. உங்ககிட்ட இருக்கா?

எனவே இந்நிறுவனத்துக்கு வளமான வர்த்தக வாய்ப்புகள் குவிந்து கிடக்கிறது. டிஎன்இபி, என்டிபிசி, அதானி, எல் அண்ட் டி, சீமென்ஸ், சுஸ்லான் போன்ற பெரிய நிறுவனங்கள் இ்ந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நாட்டின் முன்னணி ஹோட்டல்ஸ், மருத்துவமனைகள், ஸ்டீல் மற்றும் சிமெண்ட் ஆலைகள் இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள்.

Story written by: Subramanian

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+