இண்டஸ்இண்ட் (IndusInd) வங்கி நடப்பு 2027ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 72% லாபம் காட்டிய போதிலும் அந்நிறுவன பங்கு இன்று சந்தையில் தடாலடியாக சரிந்துள்ளது. கிட்டதட்ட 5%க்கும் மேல் இந்த பங்கின் விலை சரிய என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவின் பிரதான வங்கிகளில் ஒன்றான இண்டஸ் இண்ட் நிகர லாபம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஜூன் மாத காலாண்டில் 72% உயர்ந்து 1,037 கோடி ரூபாயை எட்டியுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் லாபம் எதிர்பார்த்ததை விட வலுவாக இருந்தபோதிலும், வங்கியின் நிகர வட்டி வருமானம் வளர்ச்சியின்றி தேக்கமடைந்து காணப்பட்டதே முதலீட்டாளர்கள் இதன் மீதான நம்பிக்கையை இழக்க காரணமாக உள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 604 கோடியாக இருந்த நிகர லாபம், தற்போது 72% அதிகரித்து 1,037 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனால் நிகர வட்டி வருமானம் கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 4,640 கோடியாக இருந்து இந்த காலாண்டில் பெரிய மாற்றமின்றி 4,685 கோடி ரூபாயாக மட்டுமே உள்ளது.
நிகர வட்டி வரம்பு 3.46%-ல் இருந்து 3.57%-ஆக முன்னேற்றம் கண்டுள்ளது. அதே மொத்த வாராக் கடன் கடந்த ஜூன் 2025-ல் 3.64%-ஆகவும், மார்ச் 2026-ல் 3.43%-ஆகவும் இருந்து இந்த ஆண்டில் 3.25%-ஆக குறைந்துள்ளது.
இந்நிலையில் தான் வட்டி வருமானம் குறைந்ததை காரணமாக கொண்டு முதலீட்டாளர்கள் திடீஎன இந்த பங்கினை விற்பனை செய்ததால் அதன் மதிப்பு 5% க்கு மேல் சரிந்து ஒரு பங்கின் விலை 1000 ரூபாய் என வீழ்ச்சி அடைந்துள்ளது. பங்கு விலையில் தற்காலிக சரிவு ஏற்பட்டாலும், தரகு நிறுவனங்கள் இண்டஸ்இண்ட் வங்கியின் எதிர்கால வளர்ச்சி குறித்து சாதகமான பார்வையையே வெளியிட்டுள்ளன.
நுவாமா நிறுவனம் இண்டஸ்இண்ட் வங்கி பங்கிற்கு வாங்கலாம் பரிந்துரையை தக்கவைத்து கொண்டு, அதன் இலக்கு விலையை 1,250 ரூபாயாக உயர்த்தியுள்ளது.புதிய நிர்வாகத்தின் கீழ் வங்கி சரியான பாதையில் மீண்டு வருகிறது. குறைந்த செயல்பாட்டுச் செலவுகள் மற்றும் மைக்ரோஃபைனான்ஸ் பிரிவில் குறையும் வாராக் கடன்கள் ஆகியவை வங்கியின் சொத்து மீதான வருவாயை உயர்த்த உதவும் என நுவாமா தெரிவித்துள்ளது.
மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் தன் கணிப்பை நியூட்ரல் தரவரிசையில் வைத்திருந்தாலும், இலக்கு விலையை 1,125 ரூபாயாக உயர்த்தியுள்ளது. பெருநிறுவன கடன் வளர்ச்சி வலுவாக உள்ளபோதிலும், சில்லறை கடன் வளர்ச்சி சற்று மந்தமாகவே உள்ளது என்பதை காரணமாக குறிப்பிட்டுள்ளது. இண்டஸ்இண்ட் வங்கி பங்கு விலை கடந்த ஒரு வாரத்தில் 6% மற்றும் கடந்த ஒரு மாதத்தில் 18% வளர்ச்சி கண்டுள்ளது. 2026-ஆம் ஆண்டில் இதுவரை 20%-க்கு மேல் உயர்ந்துள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

