நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளின் ஒன்றான இண்டஸ்இந்த் வங்கியில் சில முறைகேடுகள் நடந்தது தெரியவந்ததையடுத்து, அந்த வங்கி சர்ச்சையில் சிக்கியது. இதனையடுத்து இண்டஸ்இந்த் வங்கி பங்கின் விலை கடுமையாக சரிவடைந்தது. முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தனர். கடந்த காலாண்டில் இப்பங்கின் விலை சுமார் 35 சதவீதம் வீழ்ச்சி கண்டது.
இண்டஸ்இந்த் வங்கி முறைகேடு சர்ச்சையில் சிக்கியதால், அந்நிறுவனத்தில் சில்லரை முதலீட்டாளர்களின் பங்கு மூலதனம் குறைந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக, சில்லரை முதலீட்டாளர்களின் பங்கு மூலதனம் அதிகரித்துள்ளது. அதேசமயம் அந்த வங்கியின் புரோமோட்டர்களின் பங்கு மூலதனம் சிறிது சரிவடைந்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் புதுப்பிக்கப்பட்ட இண்டஸ்இந்த் வங்கியின் பங்குதாரர் அறிக்கையின்படி, 2025 ஜனவரி- மார்ச் காலாண்டில் அந்த வங்கியில் புரோமோட்டர்களின் பங்கு மூலதனம் 15.83 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது 2024 டிசம்பர் காலாண்டில் 16.29 சதவீதமாக இருந்தது.
கடந்த மார்ச் காலாண்டு இறுதி நிலவரப்படி, இண்டஸ்இந்த் வங்கி பங்குகளில் முதலீடு செய்துள்ளள சில்லரை பங்குதாரர்களின் எண்ணிக்கை 7.47 லட்சமாக உயர்ந்துள்ளது. இது கடந்த டிசம்பரில் 6.17 லட்சமாக இருந்தது. சில்லரை முதலீட்டாளர்கள் அல்லது ரூ.2 லட்சம் வரை அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் கொண்டவர்கள் எண்ணிக்கை சதவீத அடிப்படையில் 7.9 சதவீதத்திலிருந்து 9.17 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த மார்ச் காலாண்டில் கோடக் மியூச்சுவல் ஃபண்டு மற்றும் குவாண்ட் மியூச்சுவல் .ஃபண்டு ஆகிய இரண்டு மியூச்சுவல் ஃபண்டுகளும் தங்களிடமிருந்து இண்டஸ்இந்த் வங்கி பங்குகளை முழுமையாக விற்றுவிட்டு வெளியேறி விட்டன. மேலும் அந்த காலாண்டில் இண்டஸ்இந்த் வங்கியில் உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களின் ஒட்டு மொத்த பங்கு மூலதனம் 27.55 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த டிசம்பர் காலாண்டில் 30.31 சதவீதமாக இருந்தது.
நாட்டின் மிகப்பெரிய இன்ஸ்யூரன்ஸ் நிறுவனமும், மிகப்பெரிய பங்குச் சந்தை முதலீட்டாளருமான எல்ஐசி, இண்டஸ்இந்த் வங்கியில் தனது பங்கு மூலதனத்தை 5.08 சதவீதமாக குறைத்துள்ளது. இது கடந்த டிசம்பர் காலாண்டில் 5.23 சதவீதமாக இருந்தது.
2024 டிசம்பர் காலாண்டில் இண்டஸ்இந்த் வங்கியின் பங்குதாரர் பட்டியலில் இடம் பெறாத மிரே அசெட் லார்ஜ் கேப் ஃபண்டின் பெயர் கடந்த மார்ச் மாத பட்டியலில் 1.52 சதவீத பங்குகளுடன் இடம் பெற்றுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இண்டஸ்இந்த் வங்கி பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 5.82 சதவீதம் உயர்ந்து ரூ.778.65ஆக இருந்தது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications