இன்ஃபோ எட்ஜ் அதிரடி அறிவிப்பு... கிடுகிடுவென உயர்ந்த பங்கு விலை

நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று இன்ஃபோ எட்ஜ். 1995ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் ஆட்சேர்ப்பு, திருமண வரன், ரியல் எஸ்டேட், கல்வி மற்றும் தொடர்புடைய சேவைகளில் இந்தியாவின் முதன்மையான ஆன்லைன் விளம்பர நிறுவனமாகும் இணையம் சார்ந்த வணிகங்களை சொந்தமாக முதலீடு செய்து நடத்தி வருகிறது. 2006 ஏப்ரல் 27ம் தேதியன்று பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்குகள் பட்டியலிடப்பட்டது.

இன்ஃபோ எட்ஜ் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, நிறுவனத்தின் ஈக்விட்டி பங்குகளை 1:5 என்ற விகிதத்தில் பங்கு பிரிப்பு செய்ய முடிவு செய்துள்ளது. அதாவது ரூ.10 முக மதிப்பு கொண்ட ஒரு ஈக்விட்டி பங்கை ரூ.2 முக மதிப்பு கொண்ட 5 பங்குகளாக பிரிக்கப்படும். பங்கு பிரிப்புக்கு உரிமையுள்ள பங்குதாரர்களின் தகுதியை உறுதி செய்வதற்கு, 2025 மே 7ம் தேதியை பதிவு தேதியாக அறிவித்துள்ளது.

இன்ஃபோ எட்ஜ் அதிரடி அறிவிப்பு... கிடுகிடுவென உயர்ந்த பங்கு விலை

இன்ஃபோ எட்ஜ் நிறுவனம் பங்கு பிரிப்புக்கான பதிவு தேதியை அறிவித்ததையடுத்து, மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இடையே இன்ஃபோ எட்ஜ் பங்கின் விலை 4 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து ரூ.6,813.50 வரை சென்றது. வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.91 சதவீதம் உயர்ந்து ரூ.6,735.05ல் முடிவுற்றது.

இன்ஃபோ எட்ஜ் நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் வருவாயாக ரூ.722 கோடி ஈட்டியுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 15.15 சதவீதம் அதிகமாகும். 2023 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.627 கோடி ஈட்டியிருந்தது. 2024 செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது இந்நிறுவனத்தின் கடந்த டிசம்பர் காலாண்டு வருவாய் 2.99 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.

2024 டிசம்பர் காலாண்டில் இன்ஃபோ எட்ஜ் நிறுவனத்தின் நிகர லாபம் 288 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2023 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 142.01 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.119 கோடியாக இருந்தது. 2024 செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது இந்நிறுவனத்தின் கடந்த டிசம்பர் காலாண்டு லாபம் 239 சதவீதம் வளர்ச்சி கண்டு உள்ளது.

2024 ஜூன் 4ம் தேதியன்று மும்பைப் பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.5,260க்கு சென்றது. ஆனால் அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தது. இந்த ஆண்டு ஜனவரி 6ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.9,194.95ஐ எட்டியது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் தொடக்கத்தில் இப்பங்கின் விலை ரூ.6,754.50ல் வர்த்தகமானது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+