Infosys Buyback: கண்ணை மூடிக்கொண்டு பங்குகளை விற்காதீங்க.. முக்கியமான பிரச்சனை இருக்கு..!!

இந்திய ஐடி சேவை துறையின் முன்னணி நிறுவனமான இன்ஃபோசிஸ், தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய பைபேக் திட்டத்தை அறிவித்தது எல்லோருக்கும் தெரியும். ஐடி பங்குகள் தொடர்ந்து மந்தமாக இருக்கும் வேளையில் பல சிறு, குறு முதலீட்டாளர்கள் இந்த திட்டத்தில் தனது பங்குகளை விற்பனை செய்து அதிக பணம் பார்த்துவிட வேண்டும் என்ற முக்கிய இலக்கில் உள்ளனர். ஆனால் இதில் கண்களுக்கு தெரியாத ஒரு பிரச்சனை இருக்கு, இது தெரியாமல் இந்த பைபேக் திட்டத்தில் நீங்கள் பங்குகளை விற்பனை செய்தால் லாபத்தில் பெரும் பகுதியை இழக்க வேண்டியிருக்கும்.

இன்போசிஸ் பைபேக் திட்டம் இன்று நவம்பர் 20 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் இன்போசிஸ் நிர்வாகம் சந்தையில் இருக்கும் தனது பங்குகளை மொத்தம் ரூ.18,000 கோடிக்கு திரும்ப வாங்குகிறது. விருப்பமான முதலீட்டாளர்கள் அல்லது பங்குதாரர்கள் தங்களது பங்குகளை நவம்பர் 26 ஆம் தேதி வரை விற்க முடியும்.

Infosys Buyback: கண்ணை மூடிக்கொண்டு பங்குகளை விற்காதீங்க.. முக்கியமான பிரச்சனை இருக்கு..!!

யார் யார் பங்குகளை விற்க தகுதி பெறுவர்?
இந்த பைபேக் திட்டத்தில் பங்குகளை விற்க தகுதி பெறும் பங்குதாரர்களைத் தீர்மானிக்க நவம்பர் 14 ஆம் தேதி ரெகார்ட் டேட்டாக நிர்ணயிக்கப்பட்டது. அந்த நாளில் யாருடைய டீமேட் கணக்கில் இன்ஃபோசிஸ் பங்குகள் வைத்திருந்தவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தில் பங்குகளை விற்க முடியும். புதிதாக இப்போது பங்குகளை வாங்கினால் விற்க முடியாது.

பைபேக் விலை மற்றும் அளவு விவரம்
இன்ஃபோசிஸ் ஒரு பங்குக்கு ரூ.1,800 என்ற விலையில் பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளது. இது தற்போதைய சந்தை விலையை விட கணிசமான அளவில் அதிகமாகும். இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ் பங்குகள் 0.071 சதவீத சரிவுடன் 1539.80 ரூபாயாக உள்ளது.

இன்ஃபோசிஸ் இந்த பைபேக் திட்டத்தின் கீழ் அதிகப்படியான 1800 ரூபாய் விலையில் மொத்தம் 10 கோடி பங்குகளை சந்தையில் இருந்து வாங்குகிறது. இது இந்நிறுவனத்தின் மொத்த பங்குகளில் சுமார் 2.41 சதவீதமாதும், மேலும் ஒவ்வொரு பங்கின் முகமதிப்பு ரூ.5 ஆகும்.

சிறு பங்குதாரர்களுக்கு தனி ஒதுக்கீடு
சிறு முதலீட்டாளர்களை இந்த பைபேக் திட்டத்தில் தங்களுடைய பங்குகளை விற்பனை செய்ய ஊக்குவிக்கும் வகையில் 15 சதவீத பங்குகள் தனியாக இவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது ரூ.2 லட்சம் மதிப்பிற்கு கீழ் பங்குகளை வைத்திருக்கும் சிறு பங்குதாரர்களின் பங்குகளை தேடிப்பிடித்து இன்போசிஸ் வாங்க உள்ளது. இன்ஃபோசிஸில் தற்போது 25,85,000 மேற்பட்ட சிறு பங்குதாரர்கள் உள்ளனர் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறு முதலீட்டாளர்களிடம் இருந்து பங்குகளை அதிகம் வாங்க முக்கிய காரணம், பங்குசந்தையில் அதிகப்படியான தடுமாற்றத்தை உருவாக்குவதே இந்த சிறு முதலீட்டாளர்கள் தான். இந்த நிலையில் பங்கு விலை தடுமாற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்போசிஸ் இத்தகைய முடிவை எடுத்துள்ளது.

பங்குகளை விற்கலாமா வேண்டாமா?
சந்தை வல்லுநர்களின் கருத்துப்படி, இன்ஃபோசிஸ் பைபேக் திட்டம் சிறு முதலீட்டாளர்களுக்கு சிறந்த வாய்ப்பாக கூறப்படுகிறது. மேத்தா எக்விட்டீஸ் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் பிரசாந்த் தாப்சே கூறுகையில், " தற்போதைய சந்தை விலையை ஒப்பிடுகையில பைபேக் விலை நல்ல லாபத்தை தரக்கூடியாக இருப்பதால் சாதாரண முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பது லாபகரமாக இருக்கும்" என்று கூறுகிறார்.

வரி தான் முக்கிய பிரச்சனை
இந்த இன்போசிஸ் பைபேக் திட்டத்தில் பெரிய சிக்கலே வரி விதிப்பு தான். தற்போதைய விதிமுறைகளின்படி பைபேக் தொகை முழுவதும் "டிவிடெண்ட்" ஆகக் கருதப்பட்டு முதலீட்டாளரின் வருமான வரி விகிதத்தில் வரி விதிக்கப்படும்.

அதிக வரி விகித பலகையில் நீங்கள் இருந்தால் அதாவது 30 சதவீத வரி பலகையில் இருப்பவர்களுக்கு இந்த பைபேக் மூலம் நிகர லாபம் கணிசமாகக் குறைந்துவிடும். குறைந்த வரி விகிதத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்தத் திட்டம் பெரிய லாபத்தைத் தரும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதை கணக்கில் எடுத்துக்கொண்டு, இன்போசிஸ் பங்குகளை இப்போது விற்க வேண்டுமா அல்லது நீண்ட கால அடிப்படையில் வைத்திருக்கலாமா என்பதை கணக்கிடவும்.

மேலும் இந்த வரி முறையை மாற்ற வேண்டும் என 2026 பட்ஜெட் தொடர்பான நிதியமைச்சகத்துடனான கூட்டத்தில் இத்துறை நிபுணர்கள் கேரிக்கை வைத்துள்ளனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+