புதன்கிழமை அன்று முன்னணி ஐடி தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் 5.5% வரை சரிந்தன. கடந்த 2 நாட்களில் 8 சதவீதத்திற்கும் மேலான சரிவை சந்தித்து கரடியின் பிடியில் சிக்கிக் கொண்டது. அதாவது பங்குச்சந்தையில் ஏற்படும் சரிவைக் குறிக்க "Bear Market" என்ற சொல்லை பயன்படுத்துவார்கள்.
முதலீட்டாளர்களிடம் ஏற்படும் ஒரு அச்ச உணர்வை குறிக்கும் விதமாக இந்த சொல் பங்குச்சந்தையில் அவ்வப்போது பயன்படுத்தப்படும். உதாரணமாக சர்வதேச அளவில் சில முடிவுகள் எடுக்கப்படும் போது முதலீட்டாளர்கள் மத்தியில் பதற்றம் நிலவும். இதன் காரணமாக பங்கு விலையில் ஏதேனும் சரிவு ஏற்படும். அந்த சமயத்தில் நஷ்டத்தை குறிக்கும் விதமாக இந்த சொல் பயன்படுத்தப்படும். தற்போது இன்போசிஸ் நிறுவனத்திற்கும் இதே நிலைதான்.

பங்குகளின் கடுமையான வீழ்ச்சி முதலீட்டாளர்களை மட்டுமல்லாமல் இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பிலிருந்தும் ரூ. 6,875 கோடியை குறைத்துள்ளது. புதன்கிழமை அன்று இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு விலை ரூ.1,563.80-ஐ எட்டியது .டிசம்பர் 2024-இல் 52 வார உச்சமான ரூ.2,006.80 ரூபாயை நெருங்கிய பங்கு விலை.. கிட்டத்தட்ட 22 சதவீதம் குறைந்து இன்று ரூ. 1563.80-ஆக உள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 4.02 சதவீத பங்குகளை வைத்திருக்கும் நாராயணமூர்த்தியின் குடும்பத்தின் சொத்து மதிப்பு புதன்கிழமை நிலவரப்படி ரூ.26,287 கோடியாக குறைந்துள்ளது. டிசம்பரில் இந்த மதிப்பு ரூ.33,163 கோடியாக இருந்தது.
இன்போசிஸ் பங்குகளில் நாராயணமூர்த்தி 0.40 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார். இதன் மதிப்பு தற்போதைய சரிவின் காரணமாக ரூ. 684 கோடி குறைந்து 389.79 கோடியாக உள்ளது. அவருடைய மனைவியான சுதாமூர்த்தி 0.92 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு தற்போது ரூ.1573.54 கோடி குறைந்து ரூ.7600.41 கோடியாக உள்ளது.
இவர்களுடைய மகன் ரோகன் மூர்த்தி குடும்பத்திலேயே அதிக அளவிலான பங்குகளை வைத்திருக்கிறார். ரோகன் மூர்த்தி சுமார் 1.62% பங்குகளை வைத்திருக்கிறார். தற்போது இதன் மதிப்பு ரூ. 2,771 கோடி குறைந்து ரூ. 13,378.5 கோடியாக குறைந்துள்ளது. நாராயணமூர்த்தியின் மகள் மற்றும் முன்னாள் இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி 1.04 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார். இதன் மதிப்பு ரூ.1,779 கோடி குறைந்து ரூ.8,591 கோடியாக உள்ளது. நாராயண மூர்த்தியின் பேரன் ஏகாக்ரா ரோஹன் மூர்த்தி 0.04% பங்குகளை வைத்திருக்கிறார். இவருடைய மதிப்பும் பங்குச் சந்தை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?



Click it and Unblock the Notifications