இன்போசிஸ் நிறுவனம் பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் தற்போது நிற்கிறது, ஒருப்பக்கம் ஏஐ மூலம் ஏற்படும் வர்த்தக மாற்றத்தை எதிர்கொண்டு புதிய வர்த்தகத்தை பெற போராடி வருகிறது. மறுப்பும் புதிய சிஇஓ தேர்வு பணிகள் துவங்கியிருக்கும் நிலையில் இந்நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து முதலீட்டாளர்கள் மத்தியில் குழப்பமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
இதேவேளையில் இந்திய சந்தையில் இருந்து தொடர்ந்து அன்னிய முதலீடுகள் பெரிய அளவில் வெளியேறி வரும் காரணத்தால் இன்போசிஸ் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகிறது.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இன்போசிஸ் பங்குகள் ஜூலை 1ஆம் தேதி 1.1 சதவீதம் வரையில் சரிந்து 986 ரூபாய் வரையில் குறைந்துள்ளது, இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் செப்டம்பர் 2020க்கு பின்பு முதல் முறையாக இன்போசிஸ் பங்குகள் 1000 ரூபாய்க்கு கீழ் சரிந்துள்ளது தான்.
இந்தியாவில் மட்டும் அல்லாமல் ஏஐ தொழில்நுட்பம் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்களை தவிர அனைத்து டெக் நிறுவனங்களில் இருந்து முதலீடுகள் திரும்ப பெறப்பட்டு வருகிறது.
இதன் நீட்சியாக 2026ஆம் ஆண்டு துவக்கத்தில் இருந்து ஐடி பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது, 2008 உலகளாவிய ரெசிஷன் பின்பு இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் பெரும் பாதிப்பையும், பங்கு மதிப்பு சரிவையும் சந்தித்து வருகிறது.
உண்மையில் இந்த சரிவு 2022ல் துவங்கியது, அப்போது தான் ஏஐ என்ற பூதம் கிளம்பியது, 2022 - 2024 வரையில் சில ஏற்ற இறக்கம் இருந்தாலும் 2025 பிற்பகுதியில் இருந்து இன்று வரையில் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு மோசமாக காலம் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் இருந்து இன்போசிஸ் பங்குகள் சுமார் 40 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. 5 மாதங்களாக ஒவ்வொரு மாதமும் சரிவுடனே இன்போசிஸ் பங்குகள் முடவடைகிறது, இதன் விளைவாக 2026ல் மட்டும் இன்போசிஸ் சந்தை மதிப்பில் சுமார் 2.53 லட்சம் கோடி குறைந்து இன்றைய வர்த்தக முடிவில் 4 லட்சம் கோடி அளவுக்கு குறைந்துள்ளது.
இன்போசிஸ் ஒரு காலத்தில் ஒரு பங்கு விலை 2008 ரூபாயிஸ், 8.37 லட்சம் கோடி ரூபாய் அளவில் சந்தை மதிப்பீட்டை பெற்று இருந்தது. ஒரு ப்ளூ சிப் பங்கு இந்தளவுக்கு குறைவது என்பது மிகவும் அரிதாக நடக்கும் விஷயமாகும்.


Click it and Unblock the Notifications