இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் பங்கு விலை இன்றைய (ஜூலை 18) வர்த்தகத்தில் 1.90 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கு விலை 1,758.60 ரூபாய் என்ற 52 வார உச்சத்தைத் தொட்டு முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இன்போசிஸ் முதலீட்டாளர்கள் இன்று மாலை வெளியாகும் காலாண்டு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் வேளையில் இன்று பங்குச்சந்தையில் குவிந்த அதிகப்படியான முதலீடுகள் காரணமாக 52 வார உயர்வைத் தொட்டு உள்ளது.

இந்திய வாரம் வெளியான டிசிஎஸ், ஹெச்சிஎல், LTI Mindtree ஆகியவை சிறப்பான லாப மற்றும் வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கும் வேளையில் இன்போசிஸ் முடிவுகளும் சிறப்பாக இருக்கும் என்பதன் நம்பிக்கையே காலாண்டு முடிவுகளுக்கு முன்பே இன்போசிஸ் பங்குகள் 52 வார உச்சத்தைத் தொட்டது.
இன்போசிஸ் ஜூன் காலாண்டில் பல்வேறு பெரிய ஒப்பந்தங்கள் மற்றும் லாபம் - வருவாயில் முந்தைய குறைந்த அடித்தளம் ஆகியவற்றால் இந்நிறுவனம் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்யும் என நிபுணர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
தரகு நிறுவனங்களின் கணிப்பின்படி, இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் வருடாந்திர அடிப்படையில் (YoY) 2-3 சதவிகிதம் அதிகரித்து ரூ.38,800 கோடி முதல் ரூ.39,138 கோடி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், காலாண்டு அடிப்படையில் வருவாய் 2-4 சதவிகிதம் அதிகரிக்கலாம். கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் அதாவது மார்ச் காலாண்டில் (Q4FY24) ரூ.37,923 கோடியும், கடந்த ஆண்டு ஜூன் காலாண்டில் (Q1FY24) ரூ.37,933 கோடியும் வருவாய் ஈட்டியுள்ளது.
மேலும், இன்போசிஸ் நிறுவனம் ஜூன் காலாண்டில் ரூ.6,200 கோடி முதல் ரூ.6,551 கோடி வரையிலான நிகர லாபத்தைப் பதிவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.5,945 கோடி லாபம் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஆண்டுக்கு ஆண்டு 4-10 சதவிகிதம் அதிகரிப்பு ஏற்படலாம்.
தொடர்ச்சியாகக் காலாண்டுகளாக ஒப்பிடும்போது லாபம் 3-9 சதவிகிதம் அதிகரிக்கலாம். கடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டில் ரூ.5,998 கோடி லாபம் ஈட்டியிருந்தது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications