இன்போசிஸ் பங்கு விலை ரூ.1900 அல்லது ரூ.1150.. எது சாத்தியம்.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

இன்போசிஸ் நிறுவனம் மூன்றாவது காலாண்டில் நிலையான நாணய மதிப்பீட்டின் அடிப்படையில், அதன் வருவாய் விகிதமானது 2.4% எனும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. இதே மூன்றாவது காலாண்டில் 3.3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆர்டர்களையும் பெற்றுள்ளது.

இது நடப்பு நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நிலையான நாணய மதிப்பீட்டின் அடிப்படையில் வருவாய் வளர்ச்சி விகிதம் நடப்பு நிதியாண்டில் 16 - 16.5% வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அசத்தல் பெர்பார்மன்ஸ்

அசத்தல் பெர்பார்மன்ஸ்

சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், ஐடி நிறுவனங்கள் எந்த மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்ள போகிறதோ? என்ற அச்சத்தில் ஐடி நிறுவன பங்குகளை வாங்கலாமா? என்ற குழப்பமே முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகின்றது. இந்த காலகட்டத்திலும் இன்போசிஸ் நிறுவனம் அசத்தல் பெர்பான்மன்ஸை கொடுத்துள்ளது.

 மிகப்பெரிய ஒப்பந்தம்

மிகப்பெரிய ஒப்பந்தம்

சர்வதேச நிறுவனங்கள் பலவும் சவாலான நிலைக்கு மத்தியில் பல்வேறு செலவு குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்போசிஸ் கடந்த 12 மாதங்களில் 10 பில்லியன் டாலர் மதிப்பில் பெரிய ஒப்பந்தங்களை வென்றுள்ளது. குறிப்பாக மூன்றாவது காலாண்டி மட்டும் 3.3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தினை வென்றுள்ளது.

தரகு நிறுவனத்தின் கணிப்பு

தரகு நிறுவனத்தின் கணிப்பு

இதனை தொடர்ந்து இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதமானது நடப்பு நிதியாண்டில் வலுவாக இருக்கலாம். இதன் காரணமாக இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 1900 ரூபாயினை எட்டலாம் என தரகு நிறுவனம் கணித்துள்ளது.

வளர்ச்சி சிறப்பாக இருக்கும்

வளர்ச்சி சிறப்பாக இருக்கும்

நோமுரா இந்தியா FY23 - 25Fல் இபிஎஸ் விகிதத்தினை 1% மாற்றி, பங்கு விலையை மாற்றாமல் 1900 ரூபாயாக வைத்துள்ளது. இந்தியாவின் லார்ஜ் கேப் ஐடி நிறுவனங்களில் இன்போசிஸ் சிறந்த ஒரு நிறுவனமாக இருக்கும். இதன் வளர்ச்சி விகிதம் டிசிஎஸ் நிறுவனத்தை தாண்டியும் வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கிடையில் FY23 - 25ம் நிதியாண்டுகளில் வளர்ச்சி தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவர்ச்சிகரமான பங்கு

கவர்ச்சிகரமான பங்கு

இப்பங்கின் மதிப்பீடு என்பது விலை உயர்ந்ததாகவும் இல்லை. எனினும் ஃபண்டமெண்டல் காரணிகள் இப்பங்கினை கவர்ச்சிகரமான ஒன்றாக மாற்றியுள்ளன. ஆக இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது அதிகரிக்கலாம் என சில தரகு நிறுவனங்கள் கணித்துள்ளன. இதற்கிடையில் சில உள்நாட்டு தரகு நிறுவனங்கள் இதன் இலக்கு விலையை 1161 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.

ஷேர்கானின் கணிப்பு

ஷேர்கானின் கணிப்பு

இதே ஷேர்கான் நிறுவனம் சர்வதேச சந்தையில் நிலவி வரும் சவாலான நிலையானது சந்தையில் எதிரொலிக்கலாம். இது இந்த நிறுவனத்தின் செயல்பாட்டில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். குறிப்பாக மீடியம் டெர்மில் இதன் தாக்கம் இருக்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் ஏற்றம் காணலாம் என கணித்துள்ளது.

மோதிலால் ஆஸ்வால் கணிப்பு

மோதிலால் ஆஸ்வால் கணிப்பு

மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் இந்த ஐடி துறையின் தேவையானது அதிகரிக்கலாம். கிளவுட் சேவை மற்றும் டிஜிட்டல் பரிமாற்றம் என்பது தேவைப்படலாம். இதன் காரணமாக இப்பங்கின் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம். இதன் காரணமாக இதன் இலக்கு விலையானது 1760 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளது.

கோடக்கின் கணிப்பு

கோடக்கின் கணிப்பு

கோடக் இன்ஸ்டிடியூசனல் இன்போசிஸ் நிறுவனத்தின் இரு பெரும் பயணத்தை சுட்டி காட்டியது. குறிப்பாக டிஜிட்டல் பரிமாற்றம் மற்றும் செலவு என இரண்டையும் கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகின்றது. இதற்கிடையில் இந்த பங்கின் நீண்டகால இலக்கினை 1775 ரூபாயாக தரகு நிறுவனம் உயர்த்தியுள்ளது.

எலாரா செக்யூரிட்டீஸ்

எலாரா செக்யூரிட்டீஸ்

எலாரா செக்யூரிட்டீஸ் நிறுவனம் இன்போசிஸ் நிறுவனத்தின் எபிடா மார்ஜின் விகிதமானது, 21.5% ஆக உள்ளது. இது 22% ஆக எதிர்பார்க்கப்பட்டது. எப்படியிருப்பினும் இதன் வருவாய் விகிதம் நடப்பு ஆண்டில் அதிகரிக்கலாம். இதன் காரணமாக இதன் இலக்கு விலையானது 1610 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.

நிர்மல் பேங்க்

நிர்மல் பேங்க்


செல்லிங் மதிப்பீட்டினைக் கொடுத்திருந்த நிர்மல் பேங்க், அதன் இலக்கு விலையை 1161 ரூபாயாக உயர்த்தியுள்ளது. 2023ல் இன்ஃபோசின் மதிப்பினை 17.9 மடங்காக மதிப்பிட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+