இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் தனது பங்கு முதலீட்டாளர்களை தக்க வைக்கும் பொருட்டு கடந்த வாரம் வெளியிட்ட காலாண்டு முடிவில் ஈவுத்தொகையை அறிவித்தது. இந்த ஈவுத்தொகை பெறுவதற்காக மக்கள் ரெக்கார்டு தேதி வரையில் மக்கள் காதிருந்த நிலையில், இத்தேதி கடந்த நிலையில் இன்று அதிகப்படியான பங்குகள் விற்கப்பட்டு முதலீட்டாளர்கள் வெளியேற துவங்கியுள்ளனர்.
இன்போசிஸ் மட்டும் அல்லாமல் இந்தியாவின் அனைத்து ஐடி சேவை நிறுவனங்களும் அதிகப்படியான பாதிப்புகளை கடந்த ஒரு வருடமாக எதிர்கொண்டு வருகிறது. ஏஐ தொழில்நுட்பத்தின் எழுச்சி, ஹெச்1பி விசா கட்டுப்பாடுகள், புதிய வர்த்தகம் கிடைப்பதில் தடுமாற்றம் போன்றவற்றின் காரணமாக கடந்த ஒரு வருடத்தில் பெரும்பாலான ஐடி சேவை நிறுவனங்களின் பங்குகள் சரிந்தது.

இந்த நிலையை சமாளிக்கவே இன்போசிஸ் மாபெரும் பங்கு பைபேக் திட்டத்தை அறிவித்தது. இதேவேளையில் இத்திட்டத்தில் இன்போசிஸ் நிறுவனர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்துக்கொள்ளவில்லை என கூறிய சந்தையில் சலசலப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் தான் ஈவுத்தொகைக்கான ரெக்கார்ட் தேதி முடிந்தது, இதன் வாயிலாக இன்று இன்போசிஸ் பங்குகள் 2 சதவீதம் வரையில் சரிந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனம், 2025-26 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு முடிவுகளை அறிவிக்கும் போது, ஒரு பங்குக்கு 23 ரூபாய் இடைக்கால ஈவுத்தொகையை அறிவித்தது. இந்த ஈவுத்தொகை, நவம்பர் 7 அன்று தகுதியான முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இதற்கான பங்குதாரர்களை தேர்வு செய்யும் பொருட்டு ஈவுத்தொகை பெறுவதற்கான ரெக்கார்ட் தேதியை இம்மாதம் 24ஆம் தேதி நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் முதலீட்டாளர்கள் அக்டோபர் 24 அன்று அல்லது அதற்கு முன் பங்குகளை வாங்கியிருந்தால் மட்டுமே இந்த ஈவுத்தொகைக்கு தகுதி பெறுவர்.
இந்தியாவில் தற்போது T+1 தீர்வு முறையில் இயங்கும் காரணத்தால் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவுடன் இன்போசிஸ் பங்குகளை வைத்திருக்கும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஈவுத்தொகையை கிடைக்கும் காரணத்தால் திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்க துவங்கியுள்ளனர்.
ஈவுத்தொகைக்கான பதிவு தேதி முடிந்ததை அடுத்து, இன்ஃபோசிஸ் பங்குகள் சுமார் 2 சதவீதம் சரிவை சந்தித்து அதன் சாயம் வெளுக்க துவங்கியுள்ளது. பொதுவாக, பங்குச் சந்தையில் ஈவுத்தொகை பதிவு தேதி முடிந்த பிறகு, பங்கு விலையில் தற்காலிக சரிவை ஏற்படுத்தும்.
இதன் எதிரொலியாக இன்போசிஸ் பங்குகள் சுமார் 2 சதவீத்திற்கும் மேல் சரிந்து 1498 ரூபாய் அளவீட்டை எட்டியது. இன்போசிஸ்-ன் 52 வார உயர்வாக 2006.45 ரூபாயாக உள்ளது, 52 வார குறைவான விலை 1307 ரூபாய் அளவில் உள்ளது. மதிய வர்த்தகத்தில் இன்போசிஸ் பங்குகள் 1.34 சதவீத சரிவுடன் 1504.90 ரூபாய் அளவீட்டை எட்டியுள்ளது.
More From GoodReturns

தமிழ்நாட்டு ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்த Cognizant!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications