உச்சத்தில் இருந்து 28% சரிந்த இன்ஃபோசிஸ்.. இது வாங்க சரியான நேரமா?

மும்பை: சமீபத்திய நாட்களாகவே இந்திய பங்கு சந்தைகள் கடும் ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகின்றன. இன்று காலை தொடக்கத்தில் பெரியளவில் மாற்றமின்றி தொடங்கிய சந்தையானது முடிவிலும் ஏற்றத்தில் முடிவடைந்தது.

குறிப்பாக சென்செக்ஸ் 300.44 புள்ளிகள் அல்லது 0.51% ஏற்றம் கண்டு, 59,141.23 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. நிஃப்டி 91.50 புள்ளிகள் அல்லது 0.52% ஏற்றம் கண்டு, 17,622.30 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் 1665 பங்குகள் ஏற்றம் கண்டு, 1852 பங்குகள் சரிவிலும், 127 பங்குகள் மாற்றம் காணவில்லை.

சமீபத்திய காலமாக ஐடி பங்குகள் தொடர்ந்து பலத்த சரிவினைக் கண்டு வருகின்றன. குறிப்பாக இன்ஃபோசிஸ் பங்குகள் உச்சத்தில் இருந்து 28% சரிவினைக் கண்டுள்ளது.

இன்றைய நிலவரம்?

இன்றைய நிலவரம்?

கடந்த 8 மாதங்களில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 52 வார உச்சத்தினை கடந்த ஜனவரி 17, 2022 அன்று தொட்டது. இதன் 52 வார குறைந்தபடச விலையானது ஜூன் 17, 2022 அன்று எட்டியது. தற்போது இப்பங்கின் விலையானது 52 வார குறைந்த விலையில் இருந்து 2.27% மேலாக வர்த்தகமாகி வருகின்றது. இது தற்போது 1390 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது.

டெக்னிக்கலாக என்ன நிலவரம்?

டெக்னிக்கலாக என்ன நிலவரம்?

டெக்னிக்கலாக இந்த பங்கின் விலையானது 5 நாள், 20 நாள், 50 நாள் மற்றும் 100 நாள் மற்றும் 200 நாள் மூவிங்க் ஆவரேஜ்-க்கும் கீழாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் சந்தை மூலதனம் 5.88 லட்சம் கோடி ரூபாயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பங்கின் விலையானது மூன்று அமர்வுகளுக்கு பிறகு இன்று சற்று ஏற்றம் கண்டு, 1390 என்ற லெவலில் ஏற்றம் கண்டு காணப்படுகிறது.

ஓராண்டு நிலவரம்?

ஓராண்டு நிலவரம்?

இப்பங்கின் விலையானது கடந்த ஓராண்டில் 17.16% சரிவிலும், இதே 2022ல் 25.86% சரிவிலும் காணப்படுகின்றது.

முதல் காலாண்டில் 26.64 லட்சம் பொது முதலீட்டாளர்கள் 86.57% பங்குகள் அல்லது 363.29 கோடி பங்குகளை வைத்திருந்தனர். 25 புரோமோட்டர்கள் வசம் 13.11% பங்குகள் அல்லது 55.16 லட்சம் பங்குகள் உள்ளன. 7.26% பங்கினை வைத்துள்ள தனி நபர்கள், 2 லட்சத்திற்கும் மேல் முதலீடு செய்துள்ளனர். 1364 பொது பங்குதாரர்கள் 17.76 கோடி பங்குகளை வைத்துள்ளனர். இது தவிர 36 மியூச்சுவல் ஃபண்டுகள் ஜூன் காலாண்டின் இறுதியில் நிறுவனத்தில் 63.04 கோடி பங்குகளில் முதலீடு செய்துள்ளனர். இது தவிர fpi முதலீடுகளும் இதில் அடங்கும்.

லாபம்

லாபம்

ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ் எதிர்பார்த்ததை விட 3.2% குறைந்த லாபத்தினையே கண்டுள்ளது. ஜூன் காலாண்டில் இதன் நிகர லாபம் 5360 கோடி ரூபாயாக இருந்தது. இதே கடந்த மார்ச் காலாண்டில் லாபம் 5.7% குறைந்து, 5686 கோடி ரூபாயாக இருந்தது. இதே வருவாய் விகிதமானது 23.6% அதிகரித்து, 34,470 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

செயல்பாட்டு மார்ஜின் விகிதம் முதல் காலாண்டில் 20.1% ஆக குறைந்துள்ளது. இதே முந்தைய ஆண்டில் 21.5% ஆக இருந்தது. இதே செயல்பாட்டு செலவினங்கள் 14.4% அதிகரித்துள்ளது.

நிபுணர்களின் கணிப்பு என்ன?

நிபுணர்களின் கணிப்பு என்ன?

நிபுணர்கள் இந்த ஐடி துறையில் வலுவான செல் ஆஃப் காணப்படுகிறது. இன்ஃபோசிஸ் உள்பட பல நிறுவனங்களும் அப்படித் தான் உள்ளன. இது மேற்கொணண்டு 1350 - 1400 என்ற லெவலை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சில நிபுணர்கள் நீண்டகால நோக்கில் மீண்டும் அதிகரிக்கலாம் என மதிப்பிடுகின்றனர். அடுத்த 6 மாதங்களில் மீண்டும் 1600 என்ற லெவலை தொடலாம் எனவும் கணித்துள்ளனர்.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+